How can one hold back one’s tears?
இதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. காமரூப கதைகள் என்ற என் நாவல் பற்றி ஏன் யாரும் பெரிதாகப் பேசவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அதில் மனுஷ்ய புத்திரன் நான்கு பெயர்களில் வெவ்வேறு பாத்திரங்களாக வருகிறார். மனோஜும் கூட. பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. நாங்கள் மூவரும் சேர்ந்து அடிக்காத லூட்டி இல்லை. குறிப்பாக நானும் மனோஜும். காமரூப கதைகள் நாவலில் வசந்த் குஞ்ஜ் என்று ஒரு அத்தியாயம் வரும். அதை யாராலும் மறக்க … Read more
Self flagellation
ஜோடிப்புறா நாவல் குறித்து ரத்தக் கண்ணீர் எம்மார் ராதாவைப் போல் கதறிக் கதறி எழுதியிருந்தேன் இல்லையா? மூன்று பேர் வாங்கி விட்டார்கள். அதைக் கேட்டு ஆன்மா இன்புற்றது. ராஸ லீலா பதிப்பகம். புதிய பதிப்பகம். மிகச் சிறப்பான முறையில், ஈடு இணை இல்லாத வகையில் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஸ லீலா பதிப்பகத்தில் பணிகள் நடக்கின்றன. ஆனால் கொள்வார் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்தேன். என் அத்யந்த நண்பர் ஒருமுறை சொன்னார், எக்காரணம் … Read more
என் கதை
இப்போது மொழி என்ற கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் வரும் ஒரு கட்டுரை இங்கே: என்னுடைய எழுத்து (அது நாவலாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி) எப்போதுமே பொதுக்கருத்துக்கு எதிராக இருந்து வருவதால் (அப்படி இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை) ஆரம்பத்திலிருந்தே அதைப் பிரசுரிப்பதில் பெரும் சிரமங்களையும் பிரச்சினைகளுயுமே எதிர்கொண்டு வருகிறேன். எண்பதுகளில் நான் தில்லியில் இருந்த போது சுந்தர ராமசாமியின் ’ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலுக்கு ஒரு விமர்சனக் கட்டுரை … Read more
இது ஒரு சமூக அவலம்!
ஒரு நெருங்கிய நண்பர். வசதியானவர். ஜோடிப்புறா பிடிஎஃப் அனுப்பவா என்று கேட்டேன். பதில் இல்லை. பிடிஎஃப்-இல் வாங்கினால் ஒரு ஐயாயிரம் கிடைக்குமே என்று ஆர்வப்பட்டேன். தனவந்தரின் பண உதவி மார்ச்சிலிருந்து நின்று போனதால் பணம் என்ற விஷயம் இதுவரையில் இல்லாமல் முதல் முறையாக என் சிந்தனையில் குறுக்கிட்டுக் கொண்டு வருகிறது. நெருங்கிய நண்பர் பதில் அனுப்பாமல் போனதோடு அந்த விஷயத்தை மறந்து விட்டேன். ஜோடிப்புறா அச்சு நூலாக வந்தது. எண்பது பிரதிகள் விற்றது. அந்த எண்பது என்ற … Read more
மொழி
நமனை அஞ்சோம் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடுத்த படியாக, இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பு தயாராகி வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் என்னுடைய பத்து புத்தகங்கள் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளன. இப்போது ”மொழி” என்ற தலைப்பில் அமைந்த என் கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் பிச்சைக்காரனின் ஒரு கடிதமும் அதற்கான என் பதிலும் உள்ளன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹாய் சாரு.. பைபிள் படித்து கொண்டு இருந்தேன். … Read more