சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்

இந்தப் புத்தகம் இன்னும் இரண்டு வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும். அந்த நாட்குறிப்புகளிலிருந்து ஒரு நாள்: ஜூன் 8, 2020 இந்தத் தொடர் முடிந்து விட்டதாக நினைத்தேன்.  ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது.  என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று.  ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள்.  மூர்க்கன், முரடன் இப்படியான பல பட்டங்கள் என் மீது உண்டு.  என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் … Read more

ஏழைச் சாமி

1. கண்ணாயிரம் பெருமாள் சமீபத்தில் என்னிடம் ஒரு உதவி கேட்டார்.  பெருமாளின் நண்பர் ஒருவர் பிராணிநல ஆர்வலர்.  அவர் வீட்டில் ஒரு முயல் வளர்க்கிறார்.  அது தவிர தெருப் பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவிடுவது நண்பரின் வழக்கம்.  அப்படி அவர் தெருவில் வளரும் பூனைகளில் ஒன்று டாஃபி.  பெண் பூனை.  கிடைத்த போது சாப்பிடுவதும், இனவிருத்தியில் ஈடுபடுவதும், குட்டிகளைப் போட்டு அவற்றைக் கொசுக்கள், நாய்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவதுமாக இருந்த டாஃபிக்கு ஒருநாள் வயிறு வீங்கியிருந்ததைப் பார்த்து மிருக … Read more

மொழி

இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவர இருக்கும் மற்றொரு நூல் மொழி. அதன் அட்டை கீழே. என்னோடு இருப்பது டெட்டி. புகைப்படம் பிரபு காளிதாஸ்

உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்

மேற்கண்ட தலைப்பில் என்னுடைய அடுத்த புத்தகம் வெளிவருகிறது. ராஸலீலா பதிப்பகம். அந்த நூலுக்காக நிர்குண் வரைந்த சித்திரம் கீழே:

அலாரம்

அவந்திகாவுடன் இருந்தால் எல்லாம் ராணுவ ஒழுங்குடன் நடந்தேறும். இரவு பதினோரு மணிக்கு உறங்கச் செல்வேன்.  காலை ஐந்தரைக்கு எழுந்து கொள்வேன்.  இது ஒருநாள் கூட தவறாமல் செவ்வனே நடக்கும். ஆனால் அவந்திகா ஊரில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு கொஞ்சம் கெடும். சில தினங்களில் அதிகாலை வரை வேலை செய்வேன்.  அதில்தான் ஒரு சிக்கல் இருக்கிறது.  வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண் சரியாக ஒன்பதரைக்கு வருவார்.  அதனால் நம் விருப்பப்படி ஏழு மணி நேரமெல்லாம் தூங்க முடியாது. எப்போது … Read more

அன்பு நாவல் ஆங்கிலத்தில்

அன்பு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது.  அதற்கு நான் மொழிபெயர்ப்புக் கட்டணம் மூன்று லட்சம் கொடுக்க வேண்டும்.  ஏற்கனவே எழுதியிருந்தபடி, என் நண்பர் மாதாமாதம் அளித்து வந்த பண உதவியை நிறுத்தி விட்டதால் இந்த விஷயத்தை இங்கே எழுதுகிறேன்.  ஒரு லட்சம் ரூபாயோ அதற்கு மேலோ அளிப்பவர்களின் பெயரை அல்லது அவர்களின் நிறுவனத்தின் பெயரை டெடிகேஷன் பக்கத்தில் போடுவேன்.  ஔரங்ஸேப் வெளிவந்த சமயத்தில் ஒரு நண்பர் ஐந்து லட்சம் அனுப்பினார்.  இப்போது மொழிபெயர்ப்பு.  இந்தியாவின் முக்கியமான … Read more