வெறியாட்டம்

தெய்யம் என்று ஒரு நடனம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. நான் 1978இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது தெய்யம் நடனத்தைப் பார்த்திருக்கிறேன். தெய்யம் கலையின் உச்சபட்ச கலைஞர்களின் நடனத்தை அங்கே அனுபவம் கொண்டிருக்கிறேன். உத்தம வில்லன் படத்தில் தெய்யம் கொஞ்சமாக வருகிறது. தெய்யம் போன்ற ஒரு கடினமான நடனக் கலை உலகிலேயே இல்லை என்பது என் கருத்து. பாலேயும் கடினமானதுதான். ஆனால் தெய்யம் நெருப்பு. நெருப்போடு ஆட வேண்டும். வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். இத்தனை ஆக்ரோஷமான நடனம் வேறேதும் இல்லை. பார்க்கின்றவர்களுக்கே சாமி வந்து விடும். தெய்யம் நடனத்தில் உச்சமாகக் கருதப்படுபவர் குஞ்சன் பெரியடி மேலேறி குஞ்சன் என்றும் சொல்வார்கள். இவ்வகை நடனம் மலபாரில் பிரபலம். இவரது ஒப்பனையை கவனியுங்கள். ஒப்பனை களையப்படுவதையும் கவனியுங்கள். கந்த கர்ணன் என்ற புகழ் பெற்ற தெய்யத்தின் காணொலியை இங்கே கொடுத்திருக்கிறேன். இந்தப் பன்னிரண்டு நிமிடங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.

https://youtu.be/aWUH3Zy7GB0?si=-ylJDW5lAMXZ8n4-

இந்தத் தெய்யம் அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாக ஒரு 15000 வார்த்தைகளை கடந்த மூன்று தினங்களாக எழுதினேன். ஏற்கனவே எழுதிய நாவலில் இது சேர்க்கப்படும். விவரம் விரைவில் தருகிறேன். ஆக்ரோஷமாக எழுதினால் படித்தால் நீங்கள் வயிறு வலிக்க சிரிப்பீர்கள் என்பது உறுதி. ஆங்கில மொழிபெயர்ப்பில் சேர்ப்பதற்காக எழுதினேன். இப்போது தமிழிலும் சேர்க்க முடிவு செய்து விட்டேன். இதுவரை நான் எழுதிய புனைவுகளிலேயே இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக எதையும் எழுதியதில்லை. நெருப்பில் குளித்து நெருப்பால் எழுதியிருக்கிறேன்.