எண்பதாயிரம் வார்த்தைகள்

தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை நாவலை எழுதி முடித்து விட்டேன். எண்பதாயிரம் வார்த்தைகள். இன்னும் ஒரு வாரத்தில் அச்சுக்குக் கொடுப்பேன். இந்த ஒரு வாரமும் ஏதாவது சேரலாம். எடுப்பதற்கு எதுவும் இல்லை. இரண்டாயிரம் வார்த்தைகளை நீக்கி விட்டேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இருபத்தைந்தாயிரம் வார்த்தைகளையும் ரத்து செய்து விட்டேன். அது வேறு. இது வேறு. ஆனால் அப்போது ஆய்வு செய்தது இப்போது உதவியாக இருந்தது. நூல் 550 பக்கம் வரும் என்று நினைக்கிறேன். … Read more

உயில் நிர்குண்: றியாஸ் குரானா

‘உயில் நிர்குண்’ பிரதிகளை எப்படிப் புரிந்துகொள்வது? சமகால நவீனத் தமிழ்க் கவிதைப் பரப்பிலும் சரி, அல்லது மரபார்ந்த அழகியல் விழுமியங்களைக் கட்டிக்காக்கும் மைய நீரோட்ட இலக்கியத் தளத்திலும் சரி, எந்தவொரு பழக்கப்பட்ட சட்டகங்களுக்குள்ளும் எளிதில் குறுக்கிவிட முடியாதபடிக்கு மிகத் தீவிரமானதொரு தத்துவார்த்தக் கலகத்தை ரஸ்புடின் நிர்குண் எழுதியுள்ள ‘உயில் நிர்குண்’ என்ற தொகுப்பானது முன்வைக்கிறது என்பதை நாம் முதலாவதாக மிக நுட்பமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. வழமையாக நமது இலக்கியப் பொதுப்புத்தி கட்டமைத்து வைத்துள்ள உணர்ச்சிவசப்பட்ட கவித்துவ வெளிப்பாடுகளாகவோ, … Read more

பிரளயம்

காலையில் நடைப்பயிற்சிக்குப் போகும்போது கூட தியாகராஜா நாவலுக்காக வேலை செய்துகொண்டேதான் இருக்கிறேன். தியாகராஜர் பற்றிய உரைகளைக் கேட்டபடியும், அவற்றிலிருந்து முக்கியமான தகவல்களைக் குறித்துக்கொண்டும்தான் போகிறது நடைப்பயிற்சி. இன்னும் இரண்டு வாரத்தில் முடித்து விடுவேன். கடைசிப் பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் பத்து முறையாவது திருத்தம் செய்கிறேன். பத்து முறை என்றால் பத்து விதமான அத்தியாயங்கள். அதில் சிறந்ததை எடுத்து நாவலில் சேர்க்கிறேன். இதற்கு இடையில் இந்தப் பிரளயத்தைக் கேளுங்கள்.

மேன்மையுற வேண்டும்!

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அராத்து ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். ஒரு பெண்மணி ரூ. 12,000/- கொடுத்து ஒரு ஆன்மீக வகுப்பில் சேர்ந்திருக்கிறார். இரண்டு நாள் நிகழ்ச்சி. அந்த இரண்டு நாளும் ஒரு புதூ சாமியார் ஏதோ வாயில் வந்ததையெல்லாம் உளறி வைத்திருக்கிறார். இப்போது பிரபலமாக இருக்கும் ஆன்மீகவாதிகள் பற்றி யூகிக்காதீர்கள். இது ஒரு புதூ சாமி. உட்கார இடமில்லாமல் ஜமுக்காளத்தை விரித்து தரையிலெல்லாம் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள் மக்கள். இரண்டே நாளில் ஐம்பது லட்சம் வசூல். ஒரே மூலதனம், புதூ … Read more

பரவசம்

தியாகராஜா நாவலில் இருநூறு பக்கங்களை முடித்து விட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் போகலாம். இது இப்போதைய உத்தேசம். என் விஷயத்தில் எதுவும் நிச்சயமில்லை. திடீரென்று ஐநூறு பக்கமும் போகலாம். அல்லது, முந்நூறிலேயே முடியலாம். இதுவரை படித்த நான்கைந்து பேரும் எழுதிய வார்த்தைகளை நாவல் வெளிவரும்போது உங்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் தரும் செய்தி ஒன்றுதான். படிக்கும்போது ஒரு பரவச நிலை ஏற்படுகிறது. பரவசம் என்றால் என்ன? இசைக்கு மட்டும்தான் அந்த சக்தி உண்டு. மைக்கேல் … Read more

தியாகராஜா நாவலை எழுதுவதன் நோக்கம் என்ன?

இந்தக் கேள்விக்கு இதுவரை நான் சொல்லி வந்த பதில் இதுதான்: எந்த நோக்கமும் இல்லை. எனக்குக் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு தபால்காரன். அவ்வளவுதான். ஆனால் தியாகராஜா நாவலுக்கு அப்படிச் சொல்ல மாட்டேன். சமீபத்தில் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, கர்னாடக சங்கீதம் பரவலாக ரசிக்கப்பட வேண்டும். ஒரு கச்சேரிக்குப் போனால் அங்கே ஐநூறு பேர் இருந்தால் அதில் நானூற்றுத் தொண்ணூற்றைந்து பேர் … Read more