சாரு களஞ்சியம்

ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து Charu Reader என்ற தொகுதி வெளிவர இருக்கிறது. சாரு களஞ்சியம் என்று பெயர் வைத்திருக்கிறேன். இரண்டு தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கம். கெட்டி அட்டை. இன்னும் இரண்டு மாதங்களில் வரும். ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் என்னுடைய அறுபத்தொன்பது நூல்கள் வந்துள்ளன. ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து பதினோரு நூல்கள். இந்த எண்பது நூல்களிலிருந்தும் உங்களுக்குப் ப்பிடித்த பகுதிகளின் பக்க எண்களை எனக்கு அனுப்புங்கள். தொகுப்பு வேலைக்கு எனக்கு அது உதவியாக இருக்கும்.

எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com