இரண்டு அறிவிப்புகள்

நேற்று எழுதிய விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் என்ற சிறுகதையில் பின்குறிப்பு பகுதியை மாற்றி எழுதியிருக்கிறேன். சில முக்கியமான விஷயங்களைச் சேர்த்திருக்கிறேன். கதையை மீண்டும் வாசிக்கவும். அல்லது, பின்குறிப்பை மட்டுமாவது வாசிக்கலாம்.

அந்தக் காலத்து சினிமாவில் படத்தில் வரும் வேலைக்காரர் உட்பட பிராமண பாஷையிலேயே பேசுவார்கள். காரணம், வசனகர்த்தா பிராமணராக இருப்பார்.

அசோகமித்திரனின் ஒரு கதையில் வரும் மீனவர் பிராமண பாஷையில் பேசுவார்.

அந்தத் தவறை மட்டும் செய்யவே கூடாது என்பதை அப்போது நான் கற்றுக்கொண்டேன். நேற்றைய கதையில் அதற்கேற்றவாறு ஒரு மாற்றம் செய்திருக்கிறேன். எனவே அந்த வசனம், ஆத்தா வையும், ஆத்துக்குப் போகணும் என்றுதான் வர வேண்டும். கதையைப் படித்தால் உங்களுக்குப் புரியும்.

ஜோடிப்புறாவை எங்கே காணோம்? நாவல் அச்சுக்குப் போகத் தயாராகி விட்டது. 435 பக்கங்கள். மூன்று வாரத்தில் புத்தகம் கிடைக்கும். இந்த அளவு வேறு எந்த நாவலுக்கும் லோல் பட்டதில்லை. கடுமையாக வேலை வாங்கி விட்டது. நாவலைப் படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

மாற்றப்பட்ட அட்டையை இன்னமும் தர முடியவில்லை. அளவு பெரிது என்றே இந்தத் தளத்தில் வருகிறது. பிறகு தருகிறேன்.