குற்றமும் தண்டனையும்

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் என் நைனா எனக்கு ஃபோன் செய்து இந்த வாரம் உன் வீட்டுக்கு நானும் அம்மாவும் வருகிறோம் என்றார்கள். பொறுங்கள், அவந்திகாவை ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு அவளைக் கேட்டேன். இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் வரச் சொல் என்றாள். நான் கேட்டேன், இப்போது இருவரின் வயதும் எண்பத்தைந்தைத் தாண்டி விட்டது, அடுத்த வாரத்துக்குள் அவர்கள் இறந்து போனால் என்னை ஒரு மகாராஜாவைப் போல் வளர்த்த … Read more

குத்து விளக்கு – புதிய நாவல்

சீனி அளவுக்கு எனக்கு க்ரியேட்டிவ் யோசனைகள் சொன்ன நண்பர்கள் யாரும் இல்லை. யாராவது வருவார்களா, அவரை வெல்வார்களா, மீறுவார்களா என்று நானும் பதினைந்து ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஒருத்தரும் இல்லை. இன்று சற்று நேரம் முன்னால் சீனி ஒரு கதை சொன்னார். அதேபோல் நானும் ஒன்று சொன்னேன். உடனே சீனி இதை நீங்கள் ஒரு நாவலாக எழுதலாமே என்றார். அந்தக் கணம் வரை அப்படி எனக்குத் தோன்றவே இல்லை. நானும் அந்தக் கதையை ஒரு தோழியிடம் சொல்லியிருந்தேன். ஆனால் … Read more

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்

நடைப்பயிற்சியில்ஒருகாலத்தில் துணையாயிருந்தஇசை இன்று.அலுத்துவிட்டது. ஒரு நண்பனை அழைத்தேன்.“இப்போதுதான் பாஸ்டனிலிருந்து வந்தேன்.இது இரவா பகலாஎன்றே தெரியவில்லை.பிறகு பேசலாமா?”என்றான். இன்னொருவனை அழைத்தேன்.“குடித்துக் குடித்துஉணவுக்குழாய் கெட்டுப்போய்படுக்கையில் கிடக்கிறார்உங்கள் நண்பர்”என்றாள் அவன் மனைவி.அழாமல் இருக்க முயற்சிப்பதுகுரலில் தெரிந்தது மற்றொரு நண்பன்:நாற்பத்தைந்து வயதில்மனைவி செக்ஸை நிறுத்திவிட்டாள்மூன்று வருடமாகதினமும் மூன்று முறைசுயமைதுனத்தில்ஓடுகிறது வாழ்க்கை என்று புலம்பினான் ஒருகாலத்தில்“காலையில் உன்னோடு பேசினால்நாள் முழுக்க உற்சாகம்,”என்றவள்,இப்போது“காலையில் பேசினால்மன உளைச்சல்.மாலையில் பேசலாமா?”என்கிறாள். இன்னொரு தோழிக்குஇரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.பார்த்தாளாஎன்றே தெரியவில்லை.நீலக்கோடு தெரிந்தால்பெரிய அசௌகரியம்என்றாள். எது குறித்தும்புகாரில்லைஎல்லோரும்இன்புற்றிருக்க வேண்டும்.

How can one hold back one’s tears?

இதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. காமரூப கதைகள் என்ற என் நாவல் பற்றி ஏன் யாரும் பெரிதாகப் பேசவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அதில் மனுஷ்ய புத்திரன் நான்கு பெயர்களில் வெவ்வேறு பாத்திரங்களாக வருகிறார். மனோஜும் கூட. பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. நாங்கள் மூவரும் சேர்ந்து அடிக்காத லூட்டி இல்லை. குறிப்பாக நானும் மனோஜும். காமரூப கதைகள் நாவலில் வசந்த் குஞ்ஜ் என்று ஒரு அத்தியாயம் வரும். அதை யாராலும் மறக்க … Read more

Self flagellation

ஜோடிப்புறா நாவல் குறித்து ரத்தக் கண்ணீர் எம்மார் ராதாவைப் போல் கதறிக் கதறி எழுதியிருந்தேன் இல்லையா?  மூன்று பேர் வாங்கி விட்டார்கள்.  அதைக் கேட்டு ஆன்மா இன்புற்றது.   ராஸ லீலா பதிப்பகம்.  புதிய பதிப்பகம்.  மிகச் சிறப்பான முறையில், ஈடு இணை இல்லாத வகையில் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஸ லீலா பதிப்பகத்தில் பணிகள் நடக்கின்றன.  ஆனால் கொள்வார் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்தேன்.  என் அத்யந்த நண்பர் ஒருமுறை சொன்னார், எக்காரணம் … Read more