கேணியில் கலந்த நஞ்சு

அப்படி ஒரு துயரக் கதையைபாரதத்திலும் படித்திருக்க மாட்டீர்கள்ஹரிச்சந்திரன் பட்ட துயரமெல்லாம்இதற்கு முன்னால் வெறும் தூசுஅப்படி ஒரு துயரத்தைக் கடந்து வந்தான்பழைய நண்பன் இருபத்தைந்து ஆண்டுகள்தன் வாழ்வை உயர்த்தினான்அப்படியென்றால்?மீண்டுமொரு திருமணம்புது மனைவிகுழந்தைகள்சொந்த வீடுகை நிறைய காசுஉடம்பில் செல்வப் பூச்சு இருபத்தைந்து ஆண்டுகள்கழித்துதான் வாழ்ந்த ஊரில்எட்டிப் பார்த்துயாரும் பார்க்காத வேளையில்ஊர்க் கேணியில்நஞ்சைக் கலந்தான்ஈராயிரமாண்டு வாழும் கேணிதேனாய் இனித்த நீர்நஞ்சாய்க் கசக்கிறது ஊரில் சில பைத்தியங்கள்அது அமிர்தம் என்றனகெட்ட வார்த்தையில் திட்டிய என்னைஆபாச மனிதன் என்றான் நண்பன் நள்ளிரவின் கண்ணாடி முன்நிழல்கள் … Read more

மன்னிப்பு

இந்த உலகிலேயே அதிக முறை மன்னிப்பு கேட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். அநேகமாக தினமுமே ஒருவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். பெரும்பாலும் பெண்களிடம். இப்போது ஒன் ஆன் ஒன் என்ற கொடூரமான நிலைமைக்கு வந்து விட்டதால் ஒருத்தரிடம் மட்டுமே மன்னிப்புப் படலம் ஓடுகிறது. என் கவிதைகள் அனைத்துமே மன்னிப்புக் கவிதைகள் என்று சொல்லி விடலாம். மனைவியிடம் கேட்ட மன்னிப்புக்கு நட்சத்திரங்களை எண்ணி விடலாம். முந்தா நேற்று கூடப் பாருங்கள், எங்கோ ஒரு மேடையில் போகன் சங்கரின் கதை … Read more

மொழிபெயர்ப்பு மோசடி

நேற்று ஜெயமோகனின் இணைய தளத்தில் தனக்கு வந்த சில கடிதங்களை வெளியிட்டு அது பற்றித் தனது கருத்துகளை எழுதியிருக்கிறார் ஜெ. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை அது. அதில் வந்துள்ள கடிதங்களின் ஒருசில பகுதிகளை இங்கே தருகிறேன். இந்தப் பிரச்சினை குறித்து என்னுடைய தீவிரமான செயல்பாடுகள் அனைத்துக்கும் காரணம், எந்தத் தனிப்பட்ட நபரின் மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை. இது பற்றி நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் பதிப்பாளர்கள் யாருமே இதைக் கண்டுகொள்ளவே இல்லை. … Read more

சில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள்

இலக்கியமும் அதிகாரமும் என்ற கட்டுரையைப் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இதற்கு முன்பு ஒருமுறை “மொழிபெயர்ப்புகளை முற்றாகப் புறக்கணியுங்கள்” என்று நான் எழுதியிருந்ததை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஊம்பர்ட்டோ எக்கோவின் ரோஜாவின் பெயர் நூலை நீங்கள் ஆங்கிலத்திலேயே படிக்கலாம்.  நீங்கள் நீண்ட காலமாகப் படிக்க வேண்டும் என்று நினைத்துப் படிக்காமல் இருந்த ஒரு புத்தகம் தமிழில் வந்தால் அதை உடனடியாகப் படிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால் அந்த … Read more

இலக்கியமும் அதிகாரமும்

Intellectual snobs. தமிழவன்.  நாகார்ச்சுனன்.  எம்டிஎம்.  மூவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவர்கள்.  காரணம், மூவர்.  ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா.  முதல் மூவரிடமும் சிருஷ்டிகரத்துக்கான கடுகத்தனை மூலப்பொருள் கூட இல்லாததால் அப்படி ஆனார்கள்.  அவர்களிடம் இருந்ததெல்லாம் வெறும் பெயர்கள்.  நல்ல ஞாபக சக்தி மட்டுமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது.  அதை வைத்துக்கொண்டு அவர்கள் மேய்ந்ததையெல்லாம் செரித்துக் கொள்ளாமல் அப்படி அப்படியே வாந்தி எடுத்தார்கள்.  சூழல் நாறியது.  இந்த மூவரில் தமிழவன் மட்டும் புனைகதையிலும் வாந்தி … Read more