The Outsider என்ற பெயரில் ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்திருக்கிறோம். அதன் முதல் காணொலியின் இணைப்பை கீழே தருகிறேன். படிப்பதை விட கேட்பது சுலபம். அதனால் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் கூட இதை நீங்கள் அறிமுகப்படுத்தலாம். ஓஷோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆன்மீகவாதிகள் பேச்சின் மூலமாகத்தான் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார்கள். தங்கள் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட படித்திராதவர்கள் எல்லாம் யூட்யூபர்களாக மிகுந்த செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். அரசாங்கமும் அவர்களை கவனிக்கிறது. கைது செய்கிறது. யூட்யூபர்கள்தான் இன்று சமூகப் போராளிகள்.
இந்த சமூகம் இப்போது இருப்பதை விட இன்னும் கொஞ்சம் மேம்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் யூட்யூபில் பேச விழைந்தேன்.