இலக்கியமும் அதிகாரமும்


Intellectual snobs. தமிழவன்.  நாகார்ச்சுனன்.  எம்டிஎம்.  மூவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவர்கள்.  காரணம், மூவர்.  ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா.  முதல் மூவரிடமும் சிருஷ்டிகரத்துக்கான கடுகத்தனை மூலப்பொருள் கூட இல்லாததால் அப்படி ஆனார்கள்.  அவர்களிடம் இருந்ததெல்லாம் வெறும் பெயர்கள்.  நல்ல ஞாபக சக்தி மட்டுமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது.  அதை வைத்துக்கொண்டு அவர்கள் மேய்ந்ததையெல்லாம் செரித்துக் கொள்ளாமல் அப்படி அப்படியே வாந்தி எடுத்தார்கள்.  சூழல் நாறியது.  இந்த மூவரில் தமிழவன் மட்டும் புனைகதையிலும் வாந்தி எடுத்தார்.  கார்ஸியா மார்க்கேஸைப் பிரதி எடுத்துக் கொடுத்ததால் இலக்கியத்தின் குளுவான் குஞ்சுகளாய் இருந்த பொடியன்கள் கூட இவரை இடதுகையால் தூக்கி வீசி அடித்தார்கள். 

இந்தச் சூழ்நிலையில்தான் ஜெர்மன் ரிட்டர்ண்ட் எம்டிஎம் தன் மேனாமினுக்கி வேலையை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

இருபத்தைந்து ஆண்டுகளாய் எதுவும் எழுதாத ஒருவர் மீது தமிழ் வாசகர்களுக்கு அல்லது என்னைப் போன்ற எழுத்தாளனுக்கு என்ன வன்மம் இருக்க முடியும்?

எம்டிஎம்முக்கு வக்காலத்து வாங்கும் எழுத்தாளர் கூட்டம் அத்தனையும் இந்த வன்மம் என்ற வார்த்தையையே வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த அறமற்ற கூட்டத்திடம் நானும் எத்தனையோ முறை கேட்டு விட்டேன்.  பதிலே தராமல் மீண்டும் மீண்டும் வன்மம் வன்மம் என்றே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

நேற்று ஒரு விமர்சகர் வந்து இதே ஆயுதத்தை எடுத்து நம்மைத் தாக்குகிறார்.  எம்டிஎம்மை வன்மம் காரணமாகத் தாக்குகிறோமாம்.  என்னய்யா வன்மம்?  செய்திருப்பது பச்சையான மோசடி.  ஏஐ, டீப்சீக் மற்றும் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழிபெயர்த்து, கொஞ்சமும் கூச்சநாச்சம் இல்லாமல் தன்னுடைய பெயரைப் போட்டு பதிப்பகத்திடம் கொடுத்து, பதிப்பகத்தை ஏமாற்றிய விஷயத்தை என் வேலையை விட்டுவிட்டு மாங்கு மாங்கென்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.   புத்தகத்தில் எந்தெந்தப் பத்தி ஏஐயினால் செய்யப்பட்டது, எந்தெந்தப் பத்தி டீப்சீக்கினால் செய்யப்பட்டது, எந்தெந்தப் பத்தி கூகிள் ட்ரான்ஸ்லேட்டரால் செய்யப்பட்டது என்பதை என்னால் புட்டுப் புட்டு வைக்க முடியும்.  ஏன், நீங்களே ஒரு விளையாட்டு போல் கண்டு பிடிக்கலாம். அதற்கான வழிமுறை இதுதான்.  நேம் ஆஃப் தெ ரோஸ் ஆங்கிலத்தில் பிடிஎஃப்பாக இணையத்தில் கிடைக்கிறது.   ஒரு பத்தியை காப்பி பேஸ்ட் பண்ணி டீப் சீக்கிலும் சாட்ஜிபிடியிலும் போடுங்கள்.  இரண்டில் ஒன்றைப் போலவே இருக்கும் எம்டிஎம்மின் மொழிபெயர்ப்பு.  ஒரு வார்த்தை கூட மாறியிருக்காது. 

சில பத்திகளை எம்டிஎம்மே செய்திருக்கிறார்.  அதை நீங்களே சுலபமாகக் கண்டு பிடிக்கலாம்.  எந்தெந்தப் பத்தி படு கேவலமாக இருக்கிறதோ அது எம்டிஎம் பண்ணினது.  ஏனென்றால், சாட்ஜிபிடி மற்றும் டீப்சீக்கை விட எம்டிஎம் சொந்தமாகப் பண்ணினது மோசமாக உள்ளது.  கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மட்டும் எம்டிஎம்மைப் போலவே படு மட்டமாகப் பண்ணுகிறது.  பத்துப் பதினைந்து உதாரணங்களும் கொடுத்து விட்டேன். 

யோவ் விமர்சகக் குஞ்சாமணி, நான்தான் உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன் அல்லவா, அதற்கெல்லாம் உமது பதில் என்ன?  ஒரு ஆள் sweat shop என்பதை இனிப்புக் கடை என்று மொழிபெயர்த்திருக்கிறார்.  எம்டிஎம் Codice என்ற வார்த்தையை குறியீடு என்று மொழிபெயர்த்திருக்கிறார்.  கோடிஸ் என்றால் புராதனமான புத்தகம்.  உ-ம்.  பதினைந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை கோடிஸ் என்று சொல்லலாம்.  ஆனால் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் கோடிஸை குறியீடு என்கிறது.  ஏனென்றால், கூகிளுக்கு Code என்பதற்கும் codice என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.  ஆங்கிலத்தில் மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு எல்லாம் செய்து, அடிஸ் அபாபா போன்ற செவ்வாய் கிரகத்துப் பல்கலைக்கழகங்களிலெல்லாம் குறியியல் பயிற்றுவிக்கும் பேராசிரியர் எம்டிஎம்முக்கும் கோடிஸ் என்றால் குறியீடு என்றுதான் தெரிந்திருக்கிறது.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முழிபெயர்ப்பாளர் யுவான் ருல்ஃபோ நாவலில் “நகத்தால் சுவரைப் பிறாண்டினான்” என்று எழுதினார் அல்லவா, அந்தக் கதையைத்தான் நமது எம்டிஎம்மும் செய்திருக்கிறார்.  சுவரில் ஆணி அடித்தான் என்பதே முழிபெயர்ப்பாளரிடம் சுவரைப் பிறாண்டினான் என்று ஆனது.  நகத்துக்கும் ஆணிக்கும் ஆங்கிலத்தில் ஒரே வார்த்தைதான் என்று அந்த முழிபெயர்ப்பாளருக்குத் தெரியவில்லை.  நமது ஆங்கிலப் பேராசிரியருக்கோ கோடிஸ், கோட் ரெண்டுமே குறியீடுதான்.  இப்படி பக்கத்துக்குப் பக்கம் நூற்றுக்கணக்கான உளறல்கள்.  பிழைகள் அல்ல.  உளறல்கள்.

இந்த மோசடியைச் சுட்டிக்காட்டினால் ஃபேஸ்புக்கில் வந்து ஒரு இண்டலெக்சுவல் மேனாமினுக்கி தன் இஷ்டத்துக்குக் கோமணம் கழுவுகிறது.  மேனாமினுக்கி என்றால், அந்தக் காலத்தில் சிங்கப்பூருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் போய் கூலி வேலை செய்பவர்கள் தமிழ்நாடு திரும்பும்போது ஒரு தோற்றம் கொண்டிருப்பார்கள்.  பிங்க் கலரில் ஒரு பளபளா ஜிப்பா, அதே கலரில் ஒரு பளபளா வேட்டி, முகத்துக்கு ஒரு க்ரீம் தடவி அதில் ஒரு பவுடர்.  இதற்கு மேல் சகிக்கவே முடியாத ஒரு கேவலமான செண்ட்டைப் போட்டுக்கொண்டு ஊரை நாற அடிப்பார்கள்.  அந்தப் பேர்வழிகளுக்குப் பெயர்தான் Snob.  தமிழில் மேனாமினுக்கி.  இந்த விமர்சகரும் அம்மாதிரிப் பேர்வழிதான் என்று தெரிகிறது.  இவர் இன்னும் எம்டிஎம்மின் மொழிபெயர்ப்பைப் படிக்கவில்லையாம்.  ஆனால் நாங்களெல்லாம் எம்டிஎம்மின் மீது வன்மத்தைக் கக்குகிறோமாம்.  என்னடா இது நியாயம்?  நீர் இன்னும் மொழிபெயர்ப்பையே படிக்கவில்லை.  அப்புறம் என்ன மயிருக்கு இங்கே வந்து நொட்டுகிறாய்?  உமக்கு இங்கே என்ன வேலை? 

ஏனென்றால், இந்த அல்பபுத்தி நேம் ஆஃப் தெ ரோஸ் நாவலை ஆங்கிலத்தில் படித்து விட்டது.  ஆஹா, ஒரே துள்ளல்.  ”உங்களுக்கெல்லாம் என்னடா தெரியும்?  அந்த நாவலில் இது இருக்கிறது, அது இருக்கிறது” என்று நம்மைப் பார்த்து ஒரே சவடால் மயம்.

இந்த மந்தபுத்தி தாமஸ் பிஞ்ச்சனை வேறு இழுத்திருக்கிறது.  காரணம், Thomas Pynchon (Gravity’s Rainbow, The Crying of Lot 49) மற்றும் Umberto Eco (The Name of the Rose, Foucault’s Pendulum) போன்றவர்கள் இந்த வகை அறிவுஜீவி மேனாமினுக்கிகளுக்கு மிகவும் ஏற்றவர்கள்.  ஏனெனில் அவர்களின் படைப்புகள் மிகவும் சிக்கலானவை. Pynchon-இன் நாவல்கள் குவாண்டம் இயற்பியல், paranoia மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை நாவல்களாக இணைத்து, பொறுமையையும் பலமுறை வாசிப்பையும் கோருகின்றன. அதேபோல், ஊம்பர்ட்டோ எக்கோ குறியியல் (semiotics), மத்திய கால வரலாறு மற்றும் தத்துவப் புதிர்களை இணைத்து, intertextuality அடுக்குகளுடன் வாசகர்களுக்கு சவாலான புனைகதைகளை உருவாக்குகிறார். இதைத்தான் நான் இண்டலெக்சுவல் கேம் என்று குறிப்பிட்டேன். 

இந்தப் புத்தகங்கள் “எளிதான” பொழுதுபோக்கு வாசிப்புக்கு உகந்தவை அல்ல. அவை அறிவுஜீவி மாரத்தான்கள். இவற்றைப் “புரிந்து கொண்டேன்” என்று பெருமை பேசுவது ஒரு மேட்டுக்குடி லயன்ஸ் கிளப்பில் உறுப்பினராக இருப்பதைப் போன்றது. ஆனால், இப்போது இந்தப் பஞ்சாயத்தில் வந்து விழுந்திருக்கும் இந்த சூகரம், கலைப்படைப்பை உணர்ந்து புரிந்து கொள்ளும் சுரணையுணர்வு சிறிதும் இல்லாதது.   (சூகரம்- மனிதக் கழிவைத் தின்னும் ஒரு விலங்கு.  ஸ்ரீரங்கத்துப் பெரியவர்கள் அடிக்கடி இதை வசை வார்த்தையாகப் பயன்படுத்துவதைக் கேட்டிருக்கிறேன்.)  இந்த சூகர மேனாமினுக்கிகள் மேற்படி இண்டலெக்சுவல் நாவல்களை மேலோட்டமாகப் புரிந்து கொண்டு அல்லது விக்கிபீடியா விளக்கங்களைப் படித்து, “paranoia as a narrative device” (Pynchon) அல்லது “semiotic labyrinths” (Eco) போன்ற buzzwords-ஐ பயன்படுத்துகிறார்கள், ஆனால் இவற்றின் satirical bite அல்லது playful irony-ஐ இவர்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை. 

இந்த சூகர மேனாமினுக்கிகளின் அடையாளங்களாவன:

ஒரு புத்தகம் குறித்த விவாதத்தில், ஒருவர் புதியவரை, “Pynchon-இன் entropy motifs-ஐ உங்களால் கையாள முடியவில்லை என்றால், நீங்கள் லோக்கல் கதைகளைப் படிப்பது நல்லது என்று பரிகாசம் செய்யலாம். இதற்குப் பெயர் இலக்கிய சுரணையுணர்வு அல்ல.  இது ஊம்பர்ட்டோ எக்கோவின் சிக்கலான தன்மையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகும்.  Pynchon-இன் chaos உலகின் அபத்தத்தைப் பிரதிபலிப்பதையோ அல்லது ஊம்பர்ட்டோ எக்கோவின் puzzles over-intellectualization-ஐ விமர்சிப்பதையோ இந்த மேனாமினுக்கிகள் முழுமையாகத் தவிர்த்து விடுகிறார்கள். 

காரணம், இந்த மேனாமினுக்கிகளிடம் ஒரு கலைப்படைப்பை உணர்ந்து ரசிக்கும் சுரணையுணர்வு இல்லை. இலக்கியத்தில் சுரணையுணர்வு என்றால் என்ன?  உணர்ச்சிகரமான resonance, thematic subtlety அல்லது கலைத்திறனை உணர்ந்து கொள்ளும் திறன்.  எம்டிஎம்முக்கு முட்டுக் கொடுக்கும் மேனாமினுக்கிகளிடம் இது எதுவுமே இல்லை.  அவர்கள் செய்வது எல்லாமே வெறுமனே references-ஐ decode செய்வது மட்டும்தான்.  அதைச் செய்துதான் இவர்கள் மற்றவர்களுக்குப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த மேனாமினுக்கிகளின் தலைவர்தான் எம்டிஎம். 

இந்த இண்டலெக்சுவல் மேனாமினுக்கிகள் மற்றவர்களை மட்டம் தட்டுவதற்கு உதவியாக online forums அல்லது CliffsNotes-லிருந்து குறிப்புகளை எடுக்கிறார்கள். அதைக் கையில் வைத்துக் கொண்டு, “நீ Pynchon-ஐ படிக்கவில்லையா? அப்படியானால் நீ எப்படி இலக்கிய வாசகர் என்று கூறிக்கொள்கிறாய்?” என்று பரிகாசம் செய்கிறார்கள்.  எனவே இப்படிக் கேட்பவர்கள் அத்தனை பேரையும் நாம் CliffsNotes விமர்சகர்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும், நான் இப்போது புதிதாகப் புகுந்திருக்கும் மேனாமினுக்கி விமர்சகர், எம்டிஎம், நாகார்ச்சுனன் போன்றவர்களை பிராமண மேட்டுக்குடியாளர்கள் என்றே வகைப்படுத்துகிறேன்.  பிறப்பினால் அல்ல.  மனோபாவத்தினால்.  இதை ஆங்கிலத்தில் Literary Canon Gatekeepers என்பார்கள்.  அதாவது, மேட்டுக்குடி இலக்கியத்தைப் பாதுகாத்து, இலக்கியத்தில் சாரு நிவேதிதா, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி போன்ற மார்ஜினல் குரல்களை இழிவு படுத்துவது.  அல்லது, முற்றாகப் புறக்கணிப்பது.  இதுவரை எம்டிஎம்மோ மற்ற இண்டலெக்சுவல் மேனாமினுக்கிகளோ சாரு நிவேதிதாவின் எழுத்து பற்றி எதிர்மறையாகவோ, ஆதரவாகவோ ஒரு வார்த்தை எழுதியதில்லை என்பதை இங்கே உதாரணமாகக் கொள்ளலாம்.  எம்டிஎம் என் எழுத்தை ஆபாசக் கட்டுரைகள் என்று வர்ணித்ததை நினைவு கூர்க.  என் புனைவெழுத்து அனைத்தையுமே அவர் அவ்வாறு கூறவும் வாய்ப்பு இருக்கிறது.  இவர்களைப் பொறுத்தவரை ஜார்ஜ் பத்தாய் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர், சாரு ஆபாச எழுத்தாளர்.  இங்கே இன்னொரு விதேசி மோகியான மிஷ்கினையும் நினைவு கூரலாம்.  அவருக்கு ஒரு தாய் தன் சொந்த மகனோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் நாவலை எழுதிய ஜார்ஜ் பத்தாய் பிடிக்கும்.  ஆனால் சாரு ஆபாச எழுத்தாளர்.  இதை மேடையிலேயே சொன்னவர் மிஷ்கின்.  அதே மிஷ்கின் தான் எம்டிஎம் மொழிபெயர்த்த மோசடி நாவலின் ஐந்து பிரதிகளை வாங்கிப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தவர். 

உளவியல் ரீதியாக, இதை Dunning-Kruger Effect என்று சொல்லலாம்.  இதில் குறைந்த திறன் அல்லது அறிவு உள்ளவர்கள் தங்கள் திறமையை பெருமளவு மதிப்பிடுகிறார்கள். அவர்கள் தங்கள் அறிவு ஆழமற்றது என்று உணராமல், தாங்கள் மேதாவிகள் என்று நம்புகிறார்கள். உதாரணமாக, ஒருவர் CliffsNotes மூலம் Pynchon-ஐப் படித்துவிட்டு, semiotics பற்றி ஆணவமாகப் பேசுவது; ஆனால் அவர்களிடம் உண்மையில் ஆழமற்ற புரிதலை மட்டுமே காண முடியும். 

Dunning-Kruger effect உள்ளவர்கள், ஊம்பர்ட்டோ எக்கோவின் Foucault’s Pendulum பற்றி buzzwordsஐ (எ.கா., “semiotic labyrinths”) மட்டுமே பயன்படுத்தி மற்றவர்களை இழிவு செய்வார்கள்.  அதைத்தான் அந்த சூகர விமர்சகர் செய்திருக்கிறார்.  ஆனால் உண்மையில் இந்த சூகரங்களிடம் எந்தவித இலக்கிய சுரணையுணர்வையும் காண முடியாது.

இம்மாதிரி விமர்சகர்களை வர்ணிக்க இன்னொரு வார்த்தையும் உண்டு.  Hubris.   Hubris உள்ள ஒரு விமர்சகர், Ivy League syllabi-யில் தாமஸ் பிஞ்ச்சோனைப் படித்துவிட்டு, தங்களை மேதாவியாகக் கருதி, மற்றவர்களைப் பார்த்து “நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கேலி செய்வார்கள்.  இதையேதான் குறிப்பிட்ட விமர்சகரும் செய்திருக்கிறார்.    

தாமஸ் பிஞ்ச்சோன், ஊம்பர்ட்டோ எக்கோ போன்ற “கடினமான” எழுத்தாளர்களை உயர்த்துவதன் மூலம், இந்த Hubris விமர்சகர்கள் தங்களின் மேலோட்டமான, ஆழமற்ற ரசனையுணர்வையும், மொண்ணைத்தனத்தையும் மறைக்கிறார்கள்.

Ivy League syllabi அல்லது pretentious review sites ஆகியவற்றைப் படித்து விட்டு ஜல்லியடித்துக்கொண்டிருக்கும் இத்தகைய ‘விமர்சகர்களை’ இலக்கிய canon gatekeepers என்று அழைக்கலாம்.  மடங்களின் பாதுகாவலர்கள்.  அதாவது, நவ பிராமணர்கள்.  இவர்கள் opacity-ஐ accessibility-க்கு மேலாக மதிக்கின்றன. சமூக ஊடகங்கள் இதை சிலாகிக்கின்றன.

இலக்கியத்தில் opacity: opacity என்பது வெளிப்படைத் தன்மை இல்லாதது, புரிந்து கொள்ளக் கடினமானது. ஆக, தாமஸ் பிஞ்ச்சோன், ஊம்பர்ட்டோ எக்கோ போன்றவர்களின் சிக்கலான மொழியையும் பின்நவீனத்துவக் கூறுகளையும் வைத்து அவற்றை  ’உயர்ந்த இலக்கியம்’ என்று போற்றுவதே மேற்கூறிய விமர்சகர்களின் குணாம்சம்.  அவர்கள் அப்படி அதைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் அப்படிப் போற்றுவதைத் தங்களின் இலக்கிய அந்தஸ்தாகவும் கருதுகிறார்கள்.  அதோடு நிற்காமல், இவ்வகை இலக்கியம் எல்லோருக்கும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். எம்டிஎம்முக்கு முட்டுக் கொடுக்கும் கேட்கீப்பர்கள் (சாதாரண கேட்கீப்பர்கள் அல்ல, மடங்களின் பாதுகாவலர்கள்) ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இப்படி இலக்கியத்தில் Opacity-ஐ (சிக்கலான தன்மையை) உயர்த்துவதன் மூலம், இந்த கேட்கீப்பர்கள் இலக்கியத்தை ஒரு ’எலீட்’ குழுவினருக்கானதாக மட்டும் என்று கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு விமர்சகர் ஊம்பர்ட்டோ எக்கோவின் Foucault’s Pendulum பற்றி “semiotic labyrinth” என்று எழுதினால், அது வேண்டுமென்றே தெளிவற்றதாக (opaque) இருக்கும், இதனால் சாதாரண வாசகர்கள் தங்களை “புரியாதவர்கள்” என்று உணர்கிறார்கள்.  இதையேதான் சொல்லி எம்டிஎம் தன்னுடைய குப்பை மொழிபெயர்ப்புக்கு முட்டுக் கொடுத்தார் என்பதை நினைவு கூர்க.

Ivy League Syllabi என்று குறிப்பிட்டேன்.  ஹார்வர்ட் அல்லது யேல் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் பிஞ்ச்சோனின் The Crying of Lot 49 போன்ற படைப்புகள் சேர்க்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் opacity (சிக்கலான மொழி, குறியீடுகள், பின்நவீனத்துவக் கருப்பொருள்கள்) காரணமாக அவை “உயர்ந்த” இலக்கியமாகக் கருதப்படுகின்றன. இது மாணவர்களை “இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற அழுத்தத்தை உருவாக்குகிறது, இதனால் அவர்கள் ஆணவமாகவோ (literary mansplaining) அல்லது பகட்டாகவோ (intellectual snobbery) நடந்து கொள்ளத் தலைப்படுகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவர் பிஞ்ச்சோனைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், “நான் entropy motifs-ஐப் புரிந்து கொண்டேன்” என்று பொய்யாக அளக்க வேண்டியிருக்கிறது.  ஏனெனில் பாடத்திட்டம் இந்த opacity-ஐ ஊக்குவிக்கிறது. 

இதே விஷயம்தான் ரோஜாவின் பெயர் நாவல் மொழிபெயர்ப்பை முன்வைத்தும் நடந்து கொண்டிருக்கிறது.  காரணம், ரோஜாவின் பெயர் எழுதியவர் சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு கடினமான எழுத்தாளர்.  சிந்தனையாளர்.  அவரைத் தமிழில் மொழிபெயர்க்கும் அறிஞர் எம்டிஎம் சர்வதேச அளவில் சென்று குறியியலில் விரிவுரை செய்யும் பேராசிரியர்.  இதைப் படிக்காதவன் மூடன்.  அதனால்தான் ஒரு ஜெர்மானிய அறிஞரின் பெயர் தாங்கிய என் தமிழ் நண்பர் ஃபேஸ்புக்கில் இந்த மொழிபெயர்ப்பு நூலை வாசிக்காமலேயே அதன் அட்டையைப் போட கபகபவென்று அதை எல்லோரும் வாங்கி விட்டார்கள்.  படித்தும் விட்டார்கள்.  நான் உட்பட.  புரியவில்லை என்று சொன்னால் மூடன் என்ற பட்டப் பெயர் கிடைக்கும்.  அதனால் புரிந்தது என்ற கோஷ்டிகானத்தில் சேர்ந்து விட்டார்கள்.  நண்பரே, நீர் எனக்கு 1,00,899 ரூபாய் தர வேண்டும்.  உம்மால்தான் நான் இந்த நூலை வாங்கினேன்.  இப்போது பாருங்கள், ஆயிரக்கணக்கானோருக்கு மன உளைச்சல்.  எம்டிஎம்முக்கும் எதிர் பதிப்பகத்துக்கும் வாங்கிப் படித்த எனக்கும் எல்லோருக்கும் மன உளைச்சல். 

Pretentious Review Sites என்று குறிப்பிட்டேன்.  அதன் பொருள்: The New Yorker, London Review of Books போன்றவை ஊம்பர்ட்டோ எக்கோவின் ரோஜாவின் பெயர் பற்றி “a dense tapestry of semiotics and medieval theology” என்று எழுதலாம். இந்தத் தெளிவற்ற தன்மை சாதாரண வாசகர்களை விலக்கி, “இதைப் புரிந்து கொள்ள தகுதி வேண்டும்” என்று நிலையை உருவாக்கி விடுகிறது. 

இந்தப் பின்னணியில்தான் குறிப்பிட்டேன், நம்முடைய விமர்சக சூகரம், ரோஜாவின் பெயர் நாவலின் சிக்கலான தன்மையைச் சுட்டிக்காட்டி மற்றவர்களை இழிவு செய்கிறது, ஆனால் உண்மையில் அந்த சூகரம் CliffsNotes-ஐ மட்டுமே படித்திருக்கிறது. 

இந்தக் கட்டுரை மேலோட்டமாகப் பார்த்தால் எம்டிஎம் என்பவரையும் அவருக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு பெயரில்லா விமர்சகரையும் தாக்குவதாகத் தோன்றும்.  அப்படி இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.  இந்தக் கட்டுரை என் வாழ்வில் எழுதிய மிக முக்கியமான ஒன்று.  இது என்னுடைய இலக்கிய மேனிஃபெஸ்டோ.  ஒருவர் எத்தனை படித்தாலும் எப்படி ஆணவற்று நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் ஒரு செயல் திட்டமே இக்கட்டுரை. 

இதற்கு நாம் இன்னொரு பிரயோகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  Literary mansplaining.  இலக்கிய ஆணவம்.  ஒரு பெண்ணோ அல்லது நானோ ”எனக்கு ஊம்பர்ட்டோ எக்கோவையோ தாமஸ் பிஞ்ச்சோனையோ பிடிக்காது, எனக்குப் பிடித்த எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ஃப்” என்று சொன்னால் அந்தப் பெண்ணோ நானோ மேற்கூறிய சூகரங்களால் இழிவாகப் பார்க்கப் படுவோம்.  ”ஹ்ம்ம், உணர்ச்சிவசப்படும் மூடர்கள், சிக்கலான நாவல் பிடிக்கவில்லை, பாமரக் கூட்டம்” என்று பரிகசிப்படுவோம். இதுதான் தமிழ்ச் சூழலில் இன்று எம்டிஎம்மின் குப்பை மொழிபெயர்ப்பை முன்வைத்து நடந்து கொண்டிருக்கிறது.  கவனமாக இருங்கள்.