இளையராஜா – இசை – மனநோய் கூடாரங்களின் கூக்குரல் – அராத்து

(பின்வரும் கட்டுரையை ஃபேஸ்புக்கில் படித்தேன். இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது. மிக மோசமான தமிழில் மிகச் சிறந்த அவதானங்களைக் கொண்ட கட்டுரை. இதில் உள்ள கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு. பொதுவாக இப்படி நான் பகிரும் கட்டுரைகளை எழுதியவரின் அனுமதி இன்றி மொழியை சரி பார்த்தே பகிர்வேன். அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. அதனால் அராத்து எழுதிய கொச்சைத் தமிழை மாற்றாமலேயே இங்கே பகிர்கிறேன். இளையராஜா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் … Read more

செய்திகளும் சமூகமும்…

வணக்கம் சாரு. எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. அதனால் உங்களிடம் கேட்கிறேன். நேற்று தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தேன். இந்தத் தேர்தலில் இருந்தது போல் நிம்மதியாக இதுவரை எந்தத் தேர்தலின் போதும் நான் இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே அரசியல் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பேன். எந்த சித்தாந்தத்திலும் ஆழமான பார்வையோ களச்செயல்பாடோ கிடையாது. பள்ளிக்கல்வி முடிக்கும் வரை என்னுடைய ஆர்வமெல்லாம் செய்தித்தாள்கள், ஒரு சில வெகுஜன இதழ்களை வாசிப்பது, … Read more

காந்தளூர்ப் பயணம்

பெங்களூரில் வரும் 9, 10, 11, 12 நான்கு தினங்கள் இருப்பேன். ஒன்பதாம் தேதி இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூர் வந்து சேர்கிறேன். மாலையில் கிளம்பும் வந்தே பாரத் ரயில். பன்னிரண்டாம் தேதி இரவு என்னை சாவகாசமாகச் சந்திக்கலாம். இப்போதும் கோரமங்களாவில் எண்பதடி சாலையில் உள்ள ஒரு இல்லத்தில் தங்குவேன். பன்னிரண்டாம் தேதி Indian Institute of Human Settlements விடுதியில் தங்குவேன். மறுநாள் மதியம் பேச வேண்டியிருப்பதால் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாது. பத்தாம் … Read more

எனக்குப் பிடித்த ஒரே நாவல்?

கற்றது கைம்மண் அளவு என்பார்கள். நான் பல கைம்மண் அளவுகள் படித்திருக்கிறேன். அந்த வகையில் சர்வதேச அளவில் உங்களுக்குப் பிடித்த ஒரே ஒரு நாவலைச் சொல்லுங்கள் என்றால் ஸோர்பா தெ க்ரீக் நாவலைச் சொல்லுவேன். அந்த நாவல் மனித வாழ்க்கை குறித்த ஒருவரின் அடிப்படை நம்பிக்கைகளையே மாற்றி விடக் கூடியது. இந்திய மொழிகளில் உங்களுக்குப் பிடித்த ஒரே நாவல் எது என்று கேட்டால் தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலைச் சொல்லுவேன். அதன் தமிழ் … Read more

பெங்களூர் இலக்கிய விழா – மே 10, 11, 12

பெங்களூரில் உள்ள Indian Institute of Human Settlements இல் மே மாதம் 10, 11, 12 தேதிகளில் ஒரு இலக்கிய விழா நடைபெறுகிறது. அதில் 12-ஆம் தேதி மதியம் 12.15 மணிக்கு நான் கலந்து கொள்ளும் விவாத அரங்கு உள்ளது. தலைப்பு: The Ties That Bind Us: Reading Marquez Today. இனிமேலான விவாத அரங்குகளில் என் பங்களிப்பில் தங்கு தடங்கல் எதுவும் இருக்காது. பேச வேண்டிய விஷயங்களை முன்கூட்டியே குறிப்புகள் எடுத்துக்கொண்டு போகலாம் … Read more

ஞானமும் குண்டாந்தடியும்

Alain Robbe-Grillet எழுதிய சுயசரிதை Ghosts in the Mirror புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர் ஒருவர் வாங்கித் தருவதற்குத் தயாராக இருக்கிறார். ஆனால் அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தருவதற்குத் தோதான நண்பர்கள் கிடைக்கவில்லை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான போக்குவரத்து கம்மியாகி விட்டதோ என ஐயுறுகிறேன். வரக் கூடிய நண்பர்கள் யாரும் இருந்தால் எனக்கு எழுதுங்கள். அல்லது, எங்காவது நூலகத்தில் இருந்தாலும் தகவல் தாருங்கள். எப்பாடு பட்டாவது ஏதோ ஒரு நூலகத்திலிருந்து எனக்குத் தேவைப்படும் … Read more