Adele பாடிய
‘மழைக்குத் தீ மூட்டியவள்’
பாடலைக்
கேட்டிருக்கிறாயா?
நீயும் மழைக்குத் தீ
மூட்டுபவள்தான்
மழைக்கு மட்டுமல்ல
தென்றலுக்குத் தீ
சாற்றுபவள்
கடலுக்கும்
மலைகளுக்கும்
அருவிகளுக்கும்
தீ ஏற்றுபவள்
என்று நீ என்னை
முத்தமிடும்போது
புரிந்துகொண்டேன்.
நீ கொண்டுவரும் தீ
சுடத்தான் செய்கிறது
ஆனால்
தேனினுமினிமையும்
வலி நீக்கும் ஜாலமும்
வசந்தத்தின் குளிர்மையும்
கோடைமழையின் மணமும்
மலர்வனத்தின் ரம்மியமும்
வானவில்லின் அதிசயமும்
கொண்டிருக்கிறது
பிற்பாடுதான் தெரிந்தது
நீ ஏந்துவது தீயல்ல
“நினைந்து நைந்து உள்கரைந்து
உருகி”யோடும்
கருணையின் ஸ்தூலமென்று…