எல்லாம் திட்டமிட்டபடி

1 எல்லாமே திட்டமிட்டபடிதான்நடப்பதாகச் சொல்கிறார்கள் யோகானந்த பரமஹம்ஸர்ஒரு குறிப்பிட்ட தேதியில்தன் உடலை விட்டுப் பிரிவதாகஅறிவித்தார்‘என் உடலை இருபது நாட்கள் வைத்திருங்கள், ஒன்றும் ஆகாது’என்றார்உடல் சிதையவில்லைபிணவறை அதிகாரிவியந்து சான்றளித்தார் தியாகராஜரும்ஒரு வாரத்துக்கு முன்பேநாத தனு மனிஷம் பாடிசீடர்களிடம் விடைபெற்றார் ஞானிகளை விடுங்கள்அஞ்ஞானியான என்னிடமேநாலு சோதிடர் நாலுவெவ்வேறு காலத்தில்நாலு வெவ்வேறு இடங்களில்வைத்துஎன் மரண காலத்தைஒன்றே போல் குறித்தனர் 2 நானொரு பேரரசன்எனக்கொருஅந்தப்புரம் இருந்ததுஅரசர்கள் அந்தப்புரத்தில் குடியிருப்பார்களா?நானோ அங்கேயேஅடிமையானேன்மதில்களும் அகழிகளுமில்லாதபின்நவீனத்துவ அந்தப்புரம்அழகிகள் எங்குவேண்டுமானாலும்செல்லலாம்யாருடன் வேண்டுமானாலும்கூடலாம் எந்த வரைமுறையுமில்லை வெளியிலிருந்த சிநேகிதிகள்பயமுறுத்தினார்கள்மீட்டூவில் மாட்டிவிடுவாயென … Read more

அதிசயம்

காலை நடைப்பயிற்சிக்கு ஆறரை மணிக்குக் கிளம்பி கீழேயிறங்கும் மாடிப்படி க்கட்டுகளில் அமர்ந்து காலணியை மாட்டுவேன் சரியாக அந்த நேரத்தில் மேல்வீட்டுக்காரர் படிக்கட்டு களில் இறங்குவார் வணக்கம் சொல்வார் வணக்கம் சொல்வேன் சமயங்களில் என் நேரம் மாறும் அவரும் அதே நேரத்தில் இறங்குவார் வணக்கம் சொல்வார் வணக்கம் சொல்வேன் ஒருநாளும் தப்பியதில்லை கீழே இறங்கினால் ஒரு நாய் என்னிடம் வாலை ஆட்டியபடி ஓடி வரும் ஒருநாளும் அதற்கு நான் பிஸ்கட் கொடுத்ததில்லை சங்கீதா உணவகத்தின் அருகில் ஒரு பிச்சைக்காரர் … Read more

யகூஸா

கவிஞர்களின் காரியங்களைப்புரிந்துகொள்ள முடிந்ததே இல்லைஒரு இளம்கவி நண்பன்தினமும்காலையிலிருந்து நள்ளிரவு வரைகுடித்துக் கடித்தேசெத்தான்இன்னொரு கவிக்குதூக்க மாத்திரை உதவியதுஒருத்தன் கயிறில்தொங்கினான்சொல்லிக்கொண்டே போகலாம்சலிப்புற வைக்கும் கதைகள்ஒரு கவிஞன்தான் யாரும்எதிர்பார்க்காததைச் செய்தான்உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டுஜப்பானிய மொழி கற்றுக்கொண்டுயகூஸாக்களோடு சேர்ந்தான்ஜப்பானியர்களுக்கு இந்தியர்களைப்பிடிக்காதுஅதிகம் கத்துகிறார்களென்று புகார்சமையலின் மசாலா வாசனையும்கொடுமை என்கிறார்கள்ஆனால் மதுரை பிரியாணிஜப்பானியருக்கு உயிர்மதுரைக்கு வந்து கற்றுக்கொண்டுபோகிறார்கள்அதைப் பார்த்துத்தான் உந்துதல்பெற்றானோ என்னவோ கவிஞன்யகூஸாவில் சேர்ந்து விட்டான்யகூஸா என்றால் சும்மாவாகைகாலை எடுக்க வேண்டும்சமயத்தில் தலையையும்எப்படித்தான் சமாளிக்கிறானோதெரியவில்லைஆனால் மூட்டை மூட்டையாகக்கவிதை எழுதிக் குவிக்கிறான்மூட்டை என்றதும் தப்பாகநினைக்காதீர் கவிதையெல்லாம்சூப்பர்இன்னொரு கவிஞன்கல்யாணம் … Read more

உணவென்னும் காவியம்

1உனக்காக உயிரையும் தருவேனென நீங்கள் யாரிடமாவது சொல்லியிருக்கலாம்சொல்லியிருந்தால் நீங்கள்அதிர்ஷ்டசாலிநான் உணவுக்காக உயிரையும் கொடுப்பவன்உணவு வெறியன்எத்தனையோ காரணங்களால் காதல்முறிந்திருக்கிறதுஆனால் ஃபுல்க்கா சென்னாவுக்காக ஒருகாதல் முறிந்ததை நீங்கள்கேள்விப்பட்டிருக்க முடியாது 2அதிர்ஷ்டவசமாக என் மனையாள்உலகத் தரமாக சமைக்கக் கூடியவள்அதனாலேயே நான் வெளியூர் சென்றால்பாதியாக இளைத்து வருவேன் சைவ உணவுக்காரியென்றாலும்எனக்காக எதையும் சமைப்பாள்எனக்கு மீன் பிடிக்கும்தப்பு மீன் எனக்கு உயிர்கொரோனா காலத்தில் மீன் சந்தையைமூடி விட்டார்கள்என் மனையாள் ஒரு நண்பருக்குஃபோன் போட்டு போரூர் ஏரியிலிருந்துநண்டு வரவழைத்தாள்உயிர் நண்டுஅதை அடித்துக் கொல்வதெனக்குத்தெரியவில்லைமனையாள் கட்டையைக் கையிலெடுத்தாள் … Read more

மோகினிக்குட்டிக்குச் சொல்லவொரு கதை

“என்னவொரே கவிதை மயமாய்க் கொட்டுகிறாய்எனக் கேட்கும் மோகினீ…, “எந்த தேசம் போனாலும்அங்கே பெண்களையும்குழந்தைகளையும் தெருக்களையும்கவனிப்பேன்எங்கே குழந்தைகளும்பெண்களும் மகிழ்ச்சியாய்இருக்கிறார்களோ,எங்கே தெருக்களில் நாய்கள்அலைவதில்லையோ,அதுவே என் கனவு தேசம் அப்படி ஒரு தேசத்தைக் கண்டேன்பத்திரிகையில் செய்திகளே இல்லைபிரதமரின் வெளியுறவுச்செய்திகளும்சீதோஷ்ணநிலை அறிவிப்புகளும்மட்டுமே இருந்தனமருத்துவரும் யாருமில்லைபோலீஸ்கூட இல்லைஇரவுக் காட்சி சினிமாவுக்குப்போனபோது என் முன்னால்நின்றவர்தான் பிரதமர் என்றான்எனக்குப் பக்கவாட்டில் இருந்தவன்சினிமா முடிந்து பிரதமர்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இந்த தேசத்தில் என்னால்எழுதவே முடியாதுநரகத்திலிருந்து மட்டுமேஎழுத முடியும்ஜாரின் ரஷ்யாவில்எத்தனையெத்தனை மேதைகள்எழுதினார்கள் நீ என்னோடு பேசினால்கவிதை நின்றுவிடுமென் மோகினிக் குட்டீ!!”

கோபி கிருஷ்ணன், ரிஷி மற்றும் நாற்பது வயதுத் தோழி

ரிஷி அழைத்தவுடன்போய்ப் பார்த்தேன்யாராவது வற்புறுத்தி அழைத்தால்உடனே போய்ப் பார்த்துவிடுவேன்அப்படி ஒருமுறை பார்க்காமல்போய்தான் ஒரு சம்பவம்நடந்துவிட்டது கோபி கிருஷ்ணன் அழைத்தார்பத்து நாட்கள் தொடர்ந்துஃபோனில் அழைத்தார்இதோ இதோ என்றுநாட்களைக் கடத்தினேன்அவர் வீட்டுக் கழிப்பறையில்வெளிச்சம் கிடையாதுகும்மிருட்டாக இருக்கும்அந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும்கிடையாதுஅதனால்தான் நாட்களைக்கடத்தினேன்பிறகு ஒரு போஸ்ட்கார்ட்போட்டார்போகலாம் என்று முடிவு செய்தபோதுகோபி கிருஷ்ணனின் மரணச் செய்தி வந்தது ரிஷி ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்தொழிலே அதுதான் நல்ல பணம்வருகிறது கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும்போய்ப் பேசுவான்நானேகூட ஏழு ஆண்டுகளுக்குமுன் ஒரு ப்ரேக் அப் ஆனபோதுஅவனிடம்தான் போய்அவன் பேச்சைக் கேட்டுக் … Read more