நோபல் பரிசு – நிகானோர் பார்ரா

வாசிப்புக்கான நோபல் பரிசு
எனக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும்
நான் ஒரு சிறந்த வாசகன்
என் கையில் அகப்பட்டதையெல்லாம் வாசித்து விடுகிறேன்

தெருப்பெயர்களை வாசிக்கிறேன்
நியான் விளம்பரங்கள்
கழிப்பறை வாசகங்கள்
புதிய விலைப்பட்டியல்கள்

போலீஸ் செய்தி
குதிரைப் பந்தய முன்கணிப்புகள்

மற்றும் லைசன்ஸ் அட்டைகள்

என்னைப் போன்ற ஒருவனுக்கு
வார்த்தை என்பது புனிதமானது

நீதிமான்களே, ஒரு வாசகனாக
பொய் சொல்லி என்ன லாபம் அடைந்துவிடப் போகிறேன்
நான் தொடர்ந்து வாசிப்பவன்

எல்லாவற்றையும் வாசிக்கிறேன்
வரி விளம்பரங்களைக்கூட விடுவதில்லை

ஆம், இப்போதெல்லாம் அவ்வளவாக வாசிப்பதில்லை
நேரமில்லை, அவ்வளவுதான்
ஆனால், என்னென்னவெல்லாம் வாசித்திருக்கிறேன்!

அதனால்தான் எனக்கு வாசிப்புக்கான
நோபல் பரிசை வழங்கும்படி
உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்,
எவ்வளவு சீக்கிரம் முடியாதோ
அவ்வளவு சீக்கிரம்.