தமிழில் ஒரு நல்ல கதையைப் படிக்கும்போது எனக்குள் துயரம் மூளும். இப்படிப்பட்ட கதைகளைத்தானே நியூயார்க்கரில் வெளியிடுகிறார்கள்? அதை உலகம் பூராவும் வாசிக்கிறார்களே? தமிழில் மட்டும் ஏன் ஐநூறு பேரோடு முடிந்து போகிறது? ஜப்பானியர்களைப் போல் கோடிக்கணக்கில் படித்தால் எனக்கு நியூயார்க்கரும் தேவையில்லை, ஒரு மயிரும் தேவையில்லை. இங்கே ஐநூறு ஆயிரம் என்றல்லவா போகிறது?
சமீபத்தில் ஆத்மார்த்தியின் கத்தரிப்பூ என்ற சிறுகதையை உயிர்மையில் வாசித்தேன். மறக்க முடியாத கதை. தமிழனின் வாழ்வியல். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களை இயக்குவது absence of sex. ஒரு சமூகத்தின் இயங்குசக்தியே செக்ஸாக இருப்பது இந்தத் தமிழ்நாட்டில்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.
ஆத்மார்த்தியின் சிறுகதைகள் மீண்டும் தொகுக்கப்பட வேண்டும்.
ஆத்மார்த்திக்கு என் வாழ்த்துக்கள்.
லிங்க் கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
https://uyirmmai.com/article/uyirmmai-magazine-january-2025-aathmaarthi-short-story-03/