கொஞ்சம் மேற்கத்திய இசை

விவால்டியின் The Four Seasons என்ற இசைக் கோர்வையில் 3rd Movement என்ற பகுதி மிகவும் கடினமானது. ஆனால் கேட்பதற்கு ஒரு மகத்தான இசை அனுபவத்தைத் தர வல்லது. கீழே அதன் இணைப்பு https://youtu.be/ZdjeaURnyiE இதுவும் விவால்டிதான் Vivaldi: Violin Concerto in D Major (Grosso Mogul), complete | Augusta McKay Lodge RV 208 8K விவால்டி. இது அத்தனை பிரபலம் ஆகாதது. ஆனாலும் கடினமானது. Violin Concerto in E Minor, … Read more

தியாகராஜா பற்றி ஒரு கடிதம்

நேற்று வெளியிட்டிருந்த தியாகராஜா நாவலின் ஒரு சிறு பகுதி பலரையும் கவர்ந்திருக்கிறது. அந்த ஆங்கிலம் பிடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை, உங்களுடைய இந்த ஆங்கிலத்தை விட உங்கள் தமிழ் நன்றாக இருக்கும் என்றே சொன்னேன் என்றாள் ஸ்ரீ. நிச்சயமாக. நான் எழுதும் தமிழ் இன்றைய தினம் ஈடு இணை இல்லாதது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். அப்படி ஒரு ஆங்கிலத்தை என்னால் எழுத இயலாது. ஆனால் நானும் ஸ்ரீயும் சேர்ந்தால் எழுதலாம். அப்படித்தான் அனாடமியை எழுதினோம். நேற்று … Read more

படித்ததில் பிடித்தது

தமிழில் ஒரு நல்ல கதையைப் படிக்கும்போது எனக்குள் துயரம் மூளும். இப்படிப்பட்ட கதைகளைத்தானே நியூயார்க்கரில் வெளியிடுகிறார்கள்? அதை உலகம் பூராவும் வாசிக்கிறார்களே? தமிழில் மட்டும் ஏன் ஐநூறு பேரோடு முடிந்து போகிறது? ஜப்பானியர்களைப் போல் கோடிக்கணக்கில் படித்தால் எனக்கு நியூயார்க்கரும் தேவையில்லை, ஒரு மயிரும் தேவையில்லை. இங்கே ஐநூறு ஆயிரம் என்றல்லவா போகிறது? சமீபத்தில் ஆத்மார்த்தியின் கத்தரிப்பூ என்ற சிறுகதையை உயிர்மையில் வாசித்தேன். மறக்க முடியாத கதை. தமிழனின் வாழ்வியல். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களை … Read more

மழைக்குத் தீ மூட்டியவள்

Adele பாடிய‘மழைக்குத் தீ மூட்டியவள்’பாடலைக்கேட்டிருக்கிறாயா? நீயும் மழைக்குத் தீமூட்டுபவள்தான்மழைக்கு மட்டுமல்லதென்றலுக்குத் தீசாற்றுபவள்கடலுக்கும்மலைகளுக்கும்அருவிகளுக்கும்தீ ஏற்றுபவள்என்று நீ என்னைமுத்தமிடும்போதுபுரிந்துகொண்டேன். நீ கொண்டுவரும் தீசுடத்தான் செய்கிறதுஆனால்தேனினுமினிமையும்வலி நீக்கும் ஜாலமும்வசந்தத்தின் குளிர்மையும்கோடைமழையின் மணமும்மலர்வனத்தின் ரம்மியமும்வானவில்லின் அதிசயமும்கொண்டிருக்கிறது பிற்பாடுதான் தெரிந்ததுநீ ஏந்துவது தீயல்ல“நினைந்து நைந்து உள்கரைந்துஉருகி”யோடும்கருணையின் ஸ்தூலமென்று…