மழை இப்போதும் வலுத்திருக்கிறது…

1 இந்த நேரம் பார்த்துநான் பார்த்துப் பழகியவொருதெருநாய் அனாதையாய்செத்துப் போயிற்றுசெத்துப் போவது இயல்புதான்மரணமொன்றும் புதிதல்லஅந்த நாயும் வயதானதுதான்சமீபத்திலேதான் அதற்கு நான்உணவிட ஆரம்பித்தேன்அப்படியாகத்தான் அந்த உறவுஆரம்பித்தது நேற்று மாலை காய்கறி வாங்கவெளியே சென்ற போதுஅந்த நாய் சாலையோரத்தில்உயிருக்கு இழுத்தபடிகிடந்ததைக் கண்டு அதனருகேஓடினேன்ஒருதுளி தண்ணீர் வேண்டும்இறுதித்துளி அந்தத் தெருவில் ஒரேயொருசெல்ஃபோன் கடை மட்டுமேஇருந்ததுஓடிப் போய் கொஞ்சம் தண்ணீர்கேட்டேன்அதிர்ச்சியாகப் பார்த்தான் அந்தவடகிழக்குப் பிராந்திய மனிதன்அவனோடு ஓட்டை இந்தியில்மல்லுக்கு நிற்க நேரமில்லை ஓட்டமாய் ஓடிவீட்டிலிருந்து தண்ணீர் பாட்டிலைஎடுத்து வந்தேன் அதற்குள் நாயின் உயிர்பிரிந்திருந்தது … Read more

நகரசபை ஊழியர்கள் இன்னும் வரவில்லை

உன் இயக்கம் நின்று விட்டதுஉயிரற்ற உடல்சந்தடி மிகுதியில்கேட்பாரற்றுக் கிடக்கிறதுசொறியும் சிரங்குமாய் சீழ்வடியும் புண்களில் ஈக்கள்மொய்க்கின்றன பல தினங்களாக உன்னைநான் கவனித்து வருகிறேன் மரணம் உன்னை நெருங்குவதைஎன்னைப் போலவே நீயும்அறிந்து கொண்டு விட்டாயென்றேநினைக்கிறேன் எதிர்பார்த்த மரணமென்றாலும்மனம் ரணமாகி விட்டது மரணத்தை விடஉயிரற்ற உன் உடல்என்னைக் குதறுகிறது இத்தனைக் காலமோர்அற்புதத்தைத்தாங்கிய உடலுக்குகுறைந்த பட்ச மரியாதையுடன்விடைகொடுக்க வேண்டாமா? நகரசபையைத்தொலைபேசியில் அழைத்துசெய்தியைச் சொன்னேன்முகவரி கேட்டுக்கொண்டு“வருகிறோம்” என்றனர் ஒருமணி நேரம் நின்றேன்மரணத்தைவிட உயிரற்ற உடலின்அனாதிஎன்னை வதைக்கிறதுநடந்தபடியும்,வாகனங்களிலும்மனிதக் கூட்டம்போனபடியும் வந்தபடியும்இருக்கின்றது. ஒருவருமேஉன்னைலட்சியம் செய்யாததுசக உயிராகஎன்னைக் கொல்லுகிறதுஇப்படி … Read more

தியாகராஜா, எப்போது?

பலரும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நேற்று அவந்திகா சற்று சலிப்புடனே கேட்டாள். ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது அது பற்றிய எந்தச் செய்தியையும் வெளியே விடக் கூடாது என்பது விதி. ஆனால் நான் எப்போதுமே விதிகளை மீறுபவன். அதனால் இப்போதும் மீறுகிறேன். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எனக்கு ஒரு பதில் தேவைப்பட்டது. நாவலில் Father Étienne Laurent Dupré என்று ஒருவர் வருகிறார். அவர் தியாகராஜரை கிறித்தவத்துக்கு மாறும்படி அழைக்கிறார். அதன் பொருட்டு ஒரு நீண்ட … Read more