தியாகராஜா, எப்போது?

பலரும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நேற்று அவந்திகா சற்று சலிப்புடனே கேட்டாள்.

ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது அது பற்றிய எந்தச் செய்தியையும் வெளியே விடக் கூடாது என்பது விதி. ஆனால் நான் எப்போதுமே விதிகளை மீறுபவன். அதனால் இப்போதும் மீறுகிறேன்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எனக்கு ஒரு பதில் தேவைப்பட்டது. நாவலில் Father Étienne Laurent Dupré என்று ஒருவர் வருகிறார். அவர் தியாகராஜரை கிறித்தவத்துக்கு மாறும்படி அழைக்கிறார். அதன் பொருட்டு ஒரு நீண்ட உரையை ஆற்றுகிறார். அதற்கு தியாகராஜா என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும்? இந்த பதிலுக்காகத்தான் காத்திருந்தேன். ரமணரைப் படித்தேன். இன்னும் சிலரையும் படித்தேன்.

இன்று அதிகாலை மூன்று மணி அளவில் என் கனவில் பதில் வந்தது. அந்த பதிலை இறுதியில் தருகிறேன்.

தியாகராஜா நாவல் தியாகராஜாவின் வாழ்க்கை வரலாறு மட்டும் அல்ல. அவர் வாழ்ந்த காலத்தில் தஞ்சை மண்ணில் ரத்த ஆறு ஓடியது. ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், மதுரை நாயக்கர்கள், விஜயநகரத்தினர், தில்லி சுல்தான், தஞ்சாவூர் மராத்தி மன்னர்கள் – இவர்கள் அத்தனை பேரும் தஞ்சாவூர் மண்ணுக்காக ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று கொண்டிருந்தபோது ஒரு பக்திமான் அடுத்த வேளை சோற்றுக்கு வீட்டில் அரிசி இருந்தால் பாவம் என்று ஒவ்வொரு நாளும் தெருக்களில் பிச்சை எடுத்து அதை சமைத்து சாப்பிடுகிறார். அவரை அரசவைக் கவிஞராக அமர்த்திக்கொள்ள விரும்பும் மன்னனின் வேண்டுகோளையும் புறக்கணிக்கிறார்.

இப்போது நான் தஞ்சாவூரின் அரசியல் நிலையைச் சொல்லாவிட்டால் நாவல் முழுமை அடையாது. அந்தக் காலத்தின் கொந்தளிப்பைக் கொண்டு வர வேண்டும். தியாகராஜரின் பதினெட்டாவது வயதில் தஞ்சைத் தரணியில் ஒரு கொடும் பஞ்சம் வேறு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டே பஞ்சங்களின் காலம். அதையும் எழுத வேண்டும்.

இதற்காக நான் சுமார் முப்பது நூல்களைப் படிக்க வேண்டியிருந்தது.

அவற்றின் பட்டியல்:

1.Narrative of a Journey through the Upper Provinces of India (1828) By Bishop Reginald Heber (1783–1826)

2. .Tyagaraja: Life and Lyrics by William J. Jackson

3. Tyagaraja: A Great Composer and Saint” by T.K. Govinda Rao

4. The Spiritual Heritage of Tyagaraja by C. Ramanujachari

5. . Tyagaraja: His Life and Lyrics by Prof. P. Sambamoorthy

6. South Indian Music (series) by Prof. P. Sambamoorthy

7. A Southern Music by T.M. Krishna

8. A History of South India” by K.A. Nilakanta Sastri

9. Tanjore as a Seat of Music and Culture by B.M. Sundaram

10. Maratha Rule in the Carnatic: 1741–1855 by N.S. Ramaswami

11. The Mughal Empire by J.F. Richards

12. Europeans in Tamil Nadu by S. Muthiah

13. The Nabobs: A Study of the British in India, 1765-1830 by Percival Spear

14. Vijayanagara: City and Empire by Burton Stein

15. The Nayaks of Madura by R. Sathyanatha Aiyar

16. The Tanjore Maratha Kingdom by K.R. Subramanian

17. Maratha Supremacy in South India by S.K. Bhave

இப்போது எத்தியனும் தியாகராஜாவும் பேசிக்கொள்ளும் காட்சி. இது நாவலின் முதல் படிவம்தான். நாவல் வெளிவரும்போது இந்தப் பத்தி இப்படியே வராமல் போகலாம். நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகலாம். இது ஒரு மாதிரிக்காகத்தான் என்பதை நினைவில் வைக்கவும்.

இந்த பதிலை எழுத ஏன் இத்தனை மாதங்கள் ஆயிற்று என்றால், ஃபாதர் எத்தியன் தியாகராஜாவிடன் ஆற்றும் உரை. அது கிட்டத்தட்ட ஔரங்ஸேப் நாவலில் வரும் பாபரின் உரை போல் இருக்கும். அதைக் கேட்டவுடன் ஒருவருக்குக் கிறித்தவத்துக்கு மாறி விட வேண்டும் போல் இருக்கும். அப்படி ஒரு வலுவான உரை. அதற்கு பதில் அதேபோல் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனைக் காலம் காத்திருந்தேன்.

இன்னொரு விஷயம். இந்தப் பணிக்காக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. நேற்று கூட ஒரு புத்தகத்தை 2000 ரூபாய்க்கு வாங்கினேன். முடிந்தவர்கள் இந்தப் பயணத்தில் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் தியாகராஜாவையும் Anatomy of Dissonanceஐயும் பதிப்பகத்தில் கொடுத்து விடுவேன்.

The Flame and the Lamp

The sun leaned westward, casting golden shafts of light through the canopy of neem and tulasi plants. A faint melody from a tanpura floated in the distance, dissolving into the slow rhythm of river water touching stone. Tyagaraja, clad in a simple cotton dhoti, sat in silent contemplation on the verandah of his home in Thiruvaiyaru. The scent of incense mingled with the sweetness of jasmine, as the day moved unhurriedly toward twilight.

From the far end of the dusty path emerged Etienne — pale-skinned, silver-crossed, wrapped in the long cassock of a Jesuit priest. He had returned. In his hands, a copy of the Gospel in Tamil. In his eyes, earnest hope.

He bowed slightly before Tyagaraja.

“Revered one,” Etienne said, “I come not to debate, but to invite. In your songs, I have heard the thirst for the divine. In Christ is the water that quenches all thirst. Why do you turn away from the path that brings eternal life? Why not walk with Him, as I do?”

Tyagaraja opened his eyes slowly. They did not reflect offense or resistance — only a luminous calm.

He spoke:

“O friend, you see a river and ask it to become the sea. But it is already flowing toward it. You speak of salvation, of heaven, of the Lord — but I have seen Him. He walks with me, sings through me, dwells in this very heart. I seek not to change paths, for I have seen that all true paths end in the same light. What I follow is not a religion — it is an experience. It is the Self, the Atman, which knows no conversion, no birth, no death. You may call Him Christ, I call Him Rama — but the flame is one, only the lamps are different. Why change the lamp when the flame already burns bright?”

Etienne stood still. The weight of those words fell gently upon him like flower petals — not heavy, not sharp — but undeniable.

There was silence. Then Tyagaraja rose and took a few steps toward the edge of the river. He turned again, as though echoing not just his own voice, but the silent voice of countless sages who came before him. He added:

“Who is to convert whom? The Self is beyond name and form. Before you say ‘I am this’ or ‘I believe that’, there is the ‘I am’. Find that, and you will see — Jesus is not apart from that ‘I’. Rama is not apart. The true Church, the true Temple, is within. Remain there, and you are free. You call it conversion; I call it dissolution — of the false into the true.”

Etienne looked down. His fingers held the Gospel loosely, reverently. He did not feel defeated — only emptied.

The river carried on, whispering the secret that neither Rome nor Varanasi could claim as their own: the One that flows through all names, all songs, all silences.

And overhead, the tulasi leaves stirred, as if offering their own soft amen.