சித்த மருத்துவர் பாஸ்கரன்

சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றிப் பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் உடல் மற்றும் மன நோய் மிக அதிக அளவில் பரவியிருக்கிறது. இந்த இரண்டு நோய்மைகளுக்குமே நீங்கள் பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளலாம். சித்தம் என்றாலே மனம்தான். எனவே உடல் மனம் இரண்டுக்குமே சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. மற்ற மருத்துவ முறைகளில் பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்தும் குணமாகாத பல நோய்கள் பாஸ்கரனின் மருந்துகளில் குணமாவதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். என் வாசகர்கள் பலர் பயன்பெற்றிருக்கிறார்கள்.

இப்போது சென்னையில் அவரது மருத்துவ இல்லம் முகவரி மாறியிருக்கிறது. குறித்துக் கொள்ளுங்கள்.