சும்மா இரு சொல் அற

1. அன்பேகொஞ்ச நேரம்சும்மா இருசொல்லற்றிருஉன் சொற்கள்உன் கண்ணீரின்ஈரம் சுமந்திருக்கின்றனஎரிமலையின் கொந்தளிப்பையும்பித்தனின் கூச்சலையும்ஆவேசத்தையும்கதறலையும்பிரிவின் பதற்றத்தையும்அச்சம் சூழ்ந்தஇருளின் தனிமையையும்கொண்டிருக்கின்றன நினைவுகொண்ட நாளிலிருந்தேமனநோயாளிகளோடுவளர்ந்த நான்இப்போதேனும் கொஞ்சம்அமைதியின் நிழலைவிரும்புகிறேன்உன்னோடு இருந்த காலம்எனக்கு அந்தநிழலை வழங்கியதுசொற்களில் வாழும் நீஎனக்கு சொற்களற்றஅமைதியை அருளினாய் நினைவிருக்கிறதா அன்பேஒரு பகல் முழுதும் நாம்சொற்களற்றிருந்தோம்ஆனால் இப்போதுதொலைவிலிருக்கும் நீவலி சுமக்கும் சொற்களைஅனுப்புகிறாய்கொஞ்சம் சும்மா இருசொல்லற்றிரு. 2. யார் சொன்னதுதுயருற்றிருக்கிறேனென்று? இது ஓர் அதிசய உலகம்வெளியிலிருந்து காண்போருக்குத்துயரெனத் தெரிவதுஇதனுள்ளேகவித்துவம்வாதையெனத் தெரிவதுஆனந்தம்பதற்றமெனத் தெரிவதுபரவசம்பித்தமெனத் தெரிவதுகுதூகலம்சத்தமெனத் தெரிவதுசங்கீதம்வலியெனத் தெரிவதுஇன்பம்கொந்தளிப்பெனத் தெரிவதுநடனம் ஆனால் கண்ணே,சொற்களற்று சும்மா இருக்கவேண்டுமானால்நீ … Read more

அழகான கல்

கானகத்திலே தனித்துக்கிடந்ததொரு கல்அமர்ந்து கொள்வதற்கும்சாய்ந்து கொள்வதற்கும்வசதியானவழுவழுப்பான கல் தோழிகளை அழைத்து வந்தால்அந்தக் கல்லில் வைத்துத்தான்கலவி கொள்வது தோழிகள் இல்லையெனில்அந்தக் கல்லில் அமர்ந்துதான்கரமைதுனமும் ஒருநாள் ஒருஅதிசயம்நடந்தது அந்தக் கல்அவனிடம்பேசியது வள்ளுவன் அந்தக் குரலைக்கேட்கவில்லைகேட்டிருந்தால் மழலைச் சொல்குறித்து அப்படியொரு குறளைத்தொடுத்திருக்க மாட்டான்வசியம் செய்யும் குரல் ஆனால்கல் பேசுமா?எங்கேயும் கேட்டதில்லைஎங்கேயும் கண்டதில்லை அந்தக் கல் பேசியது கல் பேசினால்கடவுள் மண்ணும் மலையும்கடலும் உலகேழும்நின்னிடமே காண்கின்றேன்நீயே சரணமெனவீழ்ந்த அவன்அந்தக் கணத்திலிருந்துவேறாளாய் மாறிப்போனான் நீதான் என்னை மாற்றினாய்நன்றி என்றான் இல்லை என்றது தெய்வம்நான் எப்போதுமேஇப்படியேதான்இருக்கிறேன் … Read more

அலைந்த இலை ஸ்திரம் கண்ட கதை

என்ன செய்தியெனக் கேட்டமைனாவிடம் ஒரு அதிசயம்கேளென்றேன் சென்ற ஆண்டுநானொரு புதினம்எழுதிக்கொண்டிருந்தேன் ஒரு வாரமாக மோகினிக்குட்டியோடுதொடர்பில்லை என்பதைக்கூடஅறியா நிலை என்ன செய்தி எப்படியிருக்கிறாயெனக்கேட்டுமோகினிக்குட்டியிடமிருந்துஒரு விசாரிப்பு வந்ததைக்கண்டேன்என் இணையதளத்தில் மறுநாள்எழுதினேன் ”புதினத்தில் வாழும்போதுயாரோடும் தொடர்பில் இருக்கமாட்டேன்;இதற்கு விலக்கில்லை.” அப்படியிருந்த எனக்குஇப்பொழுதுமோகினிக்குட்டியைநொடிப்பொழுதுபிரிந்தாலும்பதற்றம் கொள்கிறதுஏனிப்படி எனமைனாவிடம்கேட்டேன் வா என்னுடனெனச் சொல்லிஇட்டுச் சென்றதுமைனா அது ஒரு மலைமுகடுஅதிலே ஒரு சித்திரக் குள்ளன்அவன் சொன்னான்,“அலைந்த இலைஸ்திரம் கண்டது.’

வையமேழும் கண்டேன்

செவிச்சே உணவுக்காகவும்பிஸ்க்கோ மதுவுக்காகவும்லீமா சென்றவன் ராணுவ அதிகாரியால்கை வெட்டப்பட்ட போதும்கித்தார் வாசித்துவிடுதலையின் பாடலைப் பாடியகலைஞனின் குருதி தோய்ந்தநிலத்தைக் காணசாந்த்தியாகோ சென்றவன் என்றோ ஒருநாள் கனவில் வந்தமேக்காங் நதி காணதாய்லாந்து சென்றவன் அந்த ஊர்சுற்றியின் பட்டியலில்இப்படி ஓராயிரம்நிலங்களிருந்தன இன்றுகடல்கடந்து எங்கும்சென்றானில்லை எழுத்தை விடநாடும் நகரமும் மேலென்றுதிரிந்தலையும்நீ இன்றுஇருந்த இடத்தில்இருந்துகொண்டிருப்பதன்காரணம் யாதென்று கேட்டதுமைனா வையமேழும் கண்டேனென்வையத்து நாயகியின்பின்கழுத்துத் தோகையிலேமுத்தம் பதிக்கையிலேஎன்றானவன்