அமிர்தம் வேண்டி நின்றேன்…

வரம் கேள் என்றால்யாராவது கையில் இருப்பதையேதிரும்பவும் கேட்பார்களா? இருப்பதை இல்லாததாய்க்காண்பவனே கவிஅதுவும் தவிரநீகுரலாக ஒலிக்கிறாய்நினைவாக இருக்கிறாய்தூலமாக இல்லையே தியாகராஜன் தன் கடவுளைத்தூலமாகக் காணவேஉஞ்சவிருத்தி செய்துஉருகியுருகிப் பாடினான்என்பதைஉனக்குநான்நினைவூட்ட வேண்டுமா? க்ஷீரசாகர சாமி மோகினியாய்மாறி அமிர்தத்தைதேவருக்குஊட்டியதாய்க் கதை நீயெனக்கு அமிர்தம்தருவது எப்போது?

பரோல்

ஒரு மாத பரோல்என்னவும் பேசலாம்என்னவும் செய்யலாம்என்னவும் குடிக்கலாம்ஆடலாம்பாடலாம்களிப்புண்டு கூடலாம் அடக்குமுறைவிடுதலை –ரெண்டையும் வைத்துஒரு கவிதை செய்தேன்மதுவே விடுதலையின்குறியீடாய் நின்றதுகவிதையில் ரத்து செய்தசிநேகிதன் சொன்னான் ”ரிஷி,பருந்தை கிளியாகக்கண்டு விட்டாய்அது பருந்தென்றுகாண்இல்லையேல் அதுஉன்னைத்தின்று விடும்.” மலைமுகட்டில்கையில் உறையுடன்நின்று கொண்டிருக்கிறேன்…

கருணை நிறைந்து அகமும் புறமும் தளும்பி வழியும்…

மாரத்தஹள்ளியில்மோகினிக்குட்டியின்அடுக்குமாடிக் குடியிருப்புகீழ்த்தளத்தில் ஒரு கர்ப்பிணிப் பூனைபேர் சொன்னாள்மறந்து போனேன் கடந்த இரண்டு வருடமாகஅதன் வேலைகர்ப்பந்தரித்திருப்பதுஅல்லதுகுட்டிகளுக்குப் பால் தருவதுஒன்றில்லாவிட்டால்இன்னொன்றுஇதைத் தவிர மற்றபடிஅதை இவள் பார்த்ததில்லை அவ்வப்போதுஅந்தக் குட்டிபற்றி இவள்பேசுவாள்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பூனைகளையெனக்குப்பிடிக்கும்பூனை பற்றிப் பேசுவதுபிடிக்காதுஇருந்தாலும்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பேசிப் பேசிஅந்தக் குட்டிக்கும்எனக்குமொருபந்தமுண்டாயிற்று போல அந்தக் குட்டி பற்றியகதைகளில் முக்கியமானதுஅது சிநேகபாவமற்றதுநெருங்கினால் சீறும்உணவு கொடுப்பதற்கேகொஞ்சம் தந்திரம்பண்ண வேண்டும் ஒருநாள் நான்மோகினிக்குட்டியின்இல்லம் சென்றேன் அந்தப் பூனைக்குட்டியின்உணவு நேரம் வந்ததுகீழே இறங்கினோம் அந்தக் குட்டிஎன்னைக் கண்டதும்ஓடி வந்து என்கால்களுக்கிடையேநுழைந்து நுழைந்துஎட்டுப் போட்டுவிளையாடியது … Read more