அனாகதம்

2 ஆள் நடமாட்டமில்லாத தெருவில்நடைபயிலும் பொழுது ஹலோ வணக்கம் என்றொரு குரல் சுற்றுமுற்றும் நோக்கினேன் யாருமே இல்லை பயந்து போனேன் பேய்கள் அதிகமிருக்கும் ஊரில் தான் நான் வளர்ந்தேன். பேய் அடித்துச் செத்தவர் பலர் அங்குண்டு. எனதொரு சகோதரிக்கே பேய் பிடித்திருக்கிறது மலையாளத்தில் கத்தினாள். மலையாளப் பேய் என்ற றிந்தோம் ஒரு புள்ளி விபரம்இந்த மகா நகரத்தில் பேய்களில்லைஎன்கிறது நகர மாந்தர் குறித்து பேய்களுக்குப் பேரச்சம் போலும்.என்றபோதும்யாருமற்ற  தெருவில் ஹலோ வணக்கம் கேட்டு வியர்த்துப் போனேன் மீண்டும் கேட்டது குரல் ஹலோ வணக்கம் அஞ்ச வேண்டாம் குனிந்து பாருங்கள் என்றது குரல் 3 ஒரு கூழாங்கல்லிலிருந்துதான் அந்தக் குரல் என்றறிந்து கொண்டேன் என்னை அறிந்தோரோ, வாசகரோவணக்கம் சொன்னால் காதில் விழாததுபோல் சென்றுவிடும் நான் அந்தக் கூழாங்கல்லுக்கு பதில் வணக்கம் சொன்னேன் கூழாங்கல்லோடு  பேசுவதுபுதியதோர் அனுபவமென்பதால் … Read more

விடுதலைப் பாடல்

திணிக்கப்பட்ட மௌனத்தின் இருண்ட குழிகளிலிருந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறாய் சுற்றுப்புறம் கண்டு சிலகாலம் திகைத்த நீ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறாய் இப்போதுதான் மறுக்கவும் ஆரம்பித்திருக்கிறாய் காலமறியாத் தனிமையில் அஃறிணையாய்க் கிடந்த நீ இப்போதுதான் சிரிக்க ஆரம்பித்திருக்கிறாய் உன்னைப் பைத்தியமென்று சொன்ன நோய்மைக் கூட்டத்தை இப்போதுதான் நீ புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறாய் இப்படியாக இந்தக் கல்மலைகளில் எதிரொலிக்கும் உனது விடுதலைப் பாடலை எனது வார்த்தைகளில் எழுத முயன்று கொண்டிருக்கிறேன்