விடுதலைப் பாடல்

திணிக்கப்பட்ட மௌனத்தின் இருண்ட குழிகளிலிருந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறாய் சுற்றுப்புறம் கண்டு சிலகாலம் திகைத்த நீ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறாய் இப்போதுதான் மறுக்கவும் ஆரம்பித்திருக்கிறாய் காலமறியாத் தனிமையில் அஃறிணையாய்க் கிடந்த நீ இப்போதுதான் சிரிக்க ஆரம்பித்திருக்கிறாய் உன்னைப் பைத்தியமென்று சொன்ன நோய்மைக் கூட்டத்தை இப்போதுதான் நீ புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறாய் இப்படியாக இந்தக் கல்மலைகளில் எதிரொலிக்கும் உனது விடுதலைப் பாடலை எனது வார்த்தைகளில் எழுத முயன்று கொண்டிருக்கிறேன்

எது எது முதல் முதல்

என்னிடம் உனக்கு எதுயெது முதல்முதல் எனக் கேட்கிறாய் குறைவாய் அணியும் உனது ஆடைகளை சமரசமாய் ஏற்றது முதல் ஸ்பர்ஸம் கொண்டாலே உனக்கு கலவிக்கான மனநிலை வந்து விடுகிறதென்பதால் இன்று உன்னைத் தொடாமலிருந்தது முதல் என்னை நீ அடித்து விளையாடுவது முதல் அக்கார அடிசில் கேட்டேன் கருவாட்டுக் குழம்பு கேட்டேன் விரால்மீன் தலைக்குழம்பு கேட்டேன் மிக நீண்ட காலமாகக் கிடைக்காமலிருந்த ஃபுல்க்காவும் கருப்புக் கொண்டைக்கடலைக் கறியும் கேட்டேன் நானெழுதும் நாவலை என்னோடு சேர்ந்தெழுது என்றேன் கேட்டதெல்லாம் கிடைக்கத் தந்தாய் … Read more

மற்றவர்

வழக்கமாக நான் செல்லும் பெங்களூர் ரயில் சென்ற முறை சிறிய பெட்டி சிறிய பெட்டியில் பொருட்களைத் திணீப்பது சிரமமாக இருந்தது இந்த முறை பெரிய பெட்டி பெரிய பெட்டியை தலைக்கு மேலிருந்த கட்டையில் வைக்க சிரமமாக இருந்தது அருகில் நின்ற ஒருவர் நான் வைக்கவா என ஆங்கிலத்தில் கேட்டார் அவரைப் பார்த்தேன் ஒடிசலான தேகம் நவநாகரீகத் தோற்றம் நாற்பதிலிருந்து ஐம்பதோ அதற்கு ஒன்றிரண்டு கூடுதலாகவோ இருக்கலாம் வேண்டாம், ஒரு கை கொடுத்தால் போதுமென் றேன் கொடுத்தார் சுலபமாக … Read more

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – அரவிந்த் வடசேரி

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் குறித்து அரவிந்த் வடசேரி எழுதிய கட்டுரை ஆவநாழி இதழில் வெளியாகியுள்ளது.