கொஞ்சம் மேற்கத்திய இசை

விவால்டியின் The Four Seasons என்ற இசைக் கோர்வையில் 3rd Movement என்ற பகுதி மிகவும் கடினமானது. ஆனால் கேட்பதற்கு ஒரு மகத்தான இசை அனுபவத்தைத் தர வல்லது. கீழே அதன் இணைப்பு

https://youtu.be/ZdjeaURnyiE

இதுவும் விவால்டிதான்
Vivaldi: Violin Concerto in D Major (Grosso Mogul), complete | Augusta McKay Lodge RV 208 8K

விவால்டி. இது அத்தனை பிரபலம் ஆகாதது. ஆனாலும் கடினமானது.

Violin Concerto in E Minor, RV 273: I. Allegro non molto

மச்சானப் பாத்தீங்களா போன்ற செவ்வியல் பாடல்களைக் கேட்ட செவிகளுக்கு இது கொஞ்சம் நூதனமாகத்தான் இருக்கும். இருந்தாலும் கேட்டுப் பாருங்கள். அற்புதத்தை தரிசிப்பீர்கள்.

பல இளைஞர்கள் மனநல ஆலோசகர்களிடம் செல்கிறார்கள். ஒரு அமர்வுக்கு 3000 ரூ. குறைந்த பட்சம் பத்து அமர்வுகள் தேவைப்படும். கடைசியில் எந்தப் பயனும் இருக்காது. யோகாவும் தியானமும் செய்யச் சொல்வார்கள்.

இண்டர்ஸ்டெல்லார் படத்தின் இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள். ஒரு மணி நேரம். எந்த மனநல ஆலோசகரும் தேவைப்பட மாட்டார். இசை: ஹான்ஸ் ஸிம்மர்.

Interstellar – Hans Zimmer (Soft Version) Sleep, Study, Relax – 1 Hour –

YouTube

இது இண்டர்ஸ்டெல்லாரின் முழு இசை

Interstellar Official Soundtrack | Full Album – Hans Zimmer | WaterTower