யாவருக்கும்
அறியப்படுத்துவது
யாதெனில்
எனது எண்ணை
அவரவர் அலைபேசிகளில்
முடக்கி விடுங்கள்
அதுதான் நன்மை பயக்கும்
இதுவரை
அதிகாலை ஐந்துக்கு எழுந்து
யோகாவும் தியானமும்
முடித்துவிட்டு
ஏழு மணிக்கு நடைப்பயிற்சி
எட்டரைக்கு வீடு திரும்பி
பூனை வேலை சிற்றுண்டி வேலை
அதற்குமேல் எடுபிடி வேலை
அதற்குமேல் மதிய உணவு
க்கான சமையல் வேலை
மூன்றிலிருந்து பத்து வரை
எழுத்தும் வாசிப்பும்
மறுநாளும் இப்படியே
மறுநாளும் இப்படியே
மறுநாளும் இப்படியே
ஒருநாளும் விலக்கல்ல
இப்போது ஒரு மாத
சிறை வாச விடுமுறைக் காலம்
தொடங்கி விட்டது
அதிகாலை அஞ்சு வரை
நண்பர்களோடு இலக்கிய
விவாதம்
மதியம் இரண்டுக்கு
நித்திரையிலிருந்து எழுச்சி
கொண்டு திருநாளைத்
தொடங்கலாம்
சோற்றுக்கு இருக்கிறது
SWIGGY
மாற்றுக் கருத்து கொண்ட
நண்பர்காள்!
நீவிர் நள்ளிரவுக்கு மேல்
அழைத்தால்
கருத்து முரண்பாடுகளைக்
கத்திப் பேசி
நாமொரு முடிவுக்கு வர
முடியாதென்கின்ற
முடிவுக்கு வந்திடலாம்
மற்றபடி என்னையறிந்த
எல்லோரும்
அலைபேசியிலென்னை
முடக்கம் செய்வீர்
பயன்பெறுவீர்