நிர்குண் நிர்ஹோஸ்தியஸ்

பவானிக்குச் சென்றிருந்தது பற்றி ஒரு நீண்ட தொடரே எழுதலாம். நேரம் இல்லை. நவம்பர் எட்டு நிகழ்ச்சிக்காகத் திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிர்குண் பற்றி கட்டுரையில் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அவரை என் நாவலில்தான் ஒரு கதாபாத்திரமாகச் சேர்க்க வேண்டும். இப்போதைக்கு சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு மான்ஸ்டர். ராக்ஷசன். அசாதரணன். உதாரணமாக, பல ஆண்டுகளாக அவர் தினமும் இரண்டு மணி நேரம்தான் உறங்கி வந்திருக்கிறார். ஆனால் என்னைக் கண்டதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராந்தி அருந்தியதால் சுமார் … Read more

மகிழ்ச்சியான வாழ்க்கை: ஓர் உபதேச மஞ்சரி

மேற்கண்ட தலைப்பில் கடந்த ஏழெட்டு தினங்களாக அமர்ந்து ஒரு குறுநாவல் எழுதினேன். கட்டுரையாகத்தான் எழுதினேன். ஆனால் சீனி இது ஒரு குறுநாவல் என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனால் அதில் சில பல நகாசு வேலைகளைச் செய்து இப்போது அதை முழுமையான குறுநாவலாக மாற்றி விட்டேன். இன்னும் ஓரிரு வாரங்களில் அது நம் தளத்தில் ஒரே நாளில் வெளியாகும். அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்துப் போடுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரே அத்தியாயத்தில் இதை நிறுத்தச் சொல்லி அழுத்தங்கள் … Read more

ஐரோப்பிய சினிமா – ஓர் அறிமுகம் : 4

பாண்டிச்சேரியில் நவம்பர் 8 அன்று மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மூன்று நண்பர்களைத் தவிர வாசகர் வட்டத்திலிருந்து வேறு யாரிடமிருந்தும் எந்த சலனமும் இல்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவரை நாற்பது பேர் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். சென்ற முறை அமெரிக்காவிலிருந்து இருபது பேர் கட்டணம் செலுத்தி ஒளிப்பதிவு விடியோவைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த முறை ஒரே ஒரு நண்பர்தான். … Read more

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 3

ஐரோப்பிய சினிமா : ஓர் அறிமுகம் நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தேன். தொடர்ந்து எழுத முடியாதபடி தியாகராஜா வேலைகள். முன்பு எழுதியிருந்ததை இங்கே மீண்டும் உங்கள் பார்வைக்காகத் தருகிறேன். சில நண்பர்கள் கட்டணம் செலுத்தி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் எட்டு பேர் கட்டணம் செலுத்தாமல் கலந்து கொள்ளலாம். பெயர் மற்றும் விவரங்களை அனுப்புங்கள். ஐரோப்பிய சினிமா என் எழுத்து வாழ்வில் மிக முக்கியமான அடிப்படைகளைத் தந்தது. ஜெர்மன் சினிமாதான் என்னை உருவாக்கியது என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். … Read more

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் 15% தள்ளுபடி

ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து வந்திருக்கும் அறிவிப்பு: இன்று தொடங்கி தீபாவளி முடியும் வரை நீங்கள் வாங்கும் எந்தப் புத்தகத்திற்கும் 15 சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் checkout செய்யும் போது தள்ளுபடி தானாகவே வந்துவிடும்.இந்த அறிவிப்பை முடிந்த வரை பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன். தொடர்புக்கு: Zero Degree Publishing – Book Publishing Company – Zero Degree Publishing 1

László Krasznahorkai-க்கு நோபல்: ஸ்ரீராம்

László Krasznahorkai-வின் Satan Tango நாவல் பற்றி சாரு பல முறை எழுதியுள்ளார். Turin Horse படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர். அவர் நோபல் விருதுக்கு தகுதியானவர் என்று சாரு நிறைய முறை எழுதியுள்ளார். ஒரு முறை தில்லி Almost Island கருத்தரங்கில் László Krasznahorkai-யும் சாருவும் கலந்துரையாடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சந்திப்பு நடைபெறவில்லை. – ஸ்ரீராம்