பிழை திருத்தம்

சாரு, வணக்கம்! ஒரு கவளம் எடுத்தவுடனேயே மிச்ச சோறு புழுவாகிவிடும் என்ற சாபம் திருதராஷ்டிரனுக்கு. துரியோதனனுக்கு இல்லை. துரியோதனனுக்கு தொட்டதெல்லாம் விளங்கும் நல் வரம் உண்டு. கையில் சொர்ண ரேகை உள்ளவன் என்பார்கள் அவனை. திருதராஷ்டிரனுக்கு இருந்த இந்த சாபம் கர்ணனால் நீங்கியதாம். அதாவது தேரோட்டி குழந்தை கர்ணனை எடுத்துக்கொண்டு கௌரவர்களின் அரண்மனைக்கு வந்ததாகவும் அப்போது திருதராஷ்டிரன் ஒரு தட்டில் இருந்த சோற்றிலிருந்து ஒரு கவளத்தை மட்டும் எடுத்துத் தின்றுவிட்டு (மீதி சோறு புழுவாகப் போனதால்), அடுத்த … Read more

கிரிமினல் மூளை என்றால் என்ன?

ரோஜாவின் பெயர் நாவலில் நடந்த மோசடி பற்றி எழுதினேன். உடனே மோசடியில் ஈடுபட்ட நபர் எழுதுகிறார், “யோவ், உன் புத்தகங்களைப் பதிப்பிக்கும் ராம்ஜியே எனக்கு ஃபோன் பண்ணி உங்கள் மொழிபெயர்ப்புகளையும், மற்ற புனைகதைகளையும் கேட்கிறார், அப்புறம் என்னய்யா?” கடைசியில்தான் தெரிகிறது, ராம்ஜி ஃபோன் பண்ணியது இந்த மோசடி வேலை வெளியே வராததற்கு முன்பு. ராம்ஜி ஃபோன் பண்ணின போது ரோஜாவின் பெயரே வந்திருக்கவில்லை. இப்போது புரிகிறதா, கிரிமினல் மூளை எப்படி வேலை செய்யும் என்று?

ச்சோர் மச்சாயே ஷோர் – 2

டேய் தம்பி, என்னடா இந்தப் பயல் நம்மை தம்பி தம்பி என்று சொல்கிறானே என மருளாதே. சிந்துபூந்துறையில் உன் வீட்டில் உன் அன்னையின் கையால் உணவருந்தியிருக்கிறேன். அப்போதே நீ என் தம்பியாகி விட்டாய். அது மட்டுமல்ல. உன் பாட்டி உரலில் இடித்துக் கொடுத்த மொளகாப் பொடியைத் தொட்டு சுடச் சுட சாப்பிட்ட இட்லியை ஏழு ஜென்மாவிலும் மறக்க இயலுமா? ஆனால் தம்பி, உனக்கும் எனக்கும் பொதுவான வேறோர் அன்னை இருக்கிறாள். அவளை க.நா.சு.வும் சி.சு. செல்லப்பாவும் இன்னும் … Read more

ச்சோர் மச்சாயே ஷோர்!- 1

நம் குறியியல் தம்பி மீண்டும் என் மீது சேற்றை வாரி அடித்திருக்கிறார். ஒரே வார்த்தை. வன்மம் கொண்டு தாக்குகிறேனாம். டேய் தம்பி. நீ சாட் ஜிபிடி, கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் போன்றவற்றால் மொழிபெயர்த்து உன் பெயரைப் போட்டுக் கொண்ட மோசடி வேலை பற்றிப் பலரும் சான்றுகளோடு எழுதி விட்டார்கள். அதற்கு பதில் சொல்லாமல் நீ நாங்களெல்லாம் உன் மீது வன்மம் கொண்டு தாக்குகிறோம் என்கிறாய். தம்பி, நீ இரண்டாயிரம் ஆண்டுகளாய் வளர்த்த வனத்தைத் தீயிட்டுக் கொளுத்த முனைந்தாய். ஊர்க் … Read more

கேணியில் கலந்த நஞ்சு

அப்படி ஒரு துயரக் கதையைபாரதத்திலும் படித்திருக்க மாட்டீர்கள்ஹரிச்சந்திரன் பட்ட துயரமெல்லாம்இதற்கு முன்னால் வெறும் தூசுஅப்படி ஒரு துயரத்தைக் கடந்து வந்தான்பழைய நண்பன் இருபத்தைந்து ஆண்டுகள்தன் வாழ்வை உயர்த்தினான்அப்படியென்றால்?மீண்டுமொரு திருமணம்புது மனைவிகுழந்தைகள்சொந்த வீடுகை நிறைய காசுஉடம்பில் செல்வப் பூச்சு இருபத்தைந்து ஆண்டுகள்கழித்துதான் வாழ்ந்த ஊரில்எட்டிப் பார்த்துயாரும் பார்க்காத வேளையில்ஊர்க் கேணியில்நஞ்சைக் கலந்தான்ஈராயிரமாண்டு வாழும் கேணிதேனாய் இனித்த நீர்நஞ்சாய்க் கசக்கிறது ஊரில் சில பைத்தியங்கள்அது அமிர்தம் என்றனகெட்ட வார்த்தையில் திட்டிய என்னைஆபாச மனிதன் என்றான் நண்பன் நள்ளிரவின் கண்ணாடி முன்நிழல்கள் … Read more