சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அராத்து ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். ஒரு பெண்மணி ரூ. 12,000/- கொடுத்து ஒரு ஆன்மீக வகுப்பில் சேர்ந்திருக்கிறார். இரண்டு நாள் நிகழ்ச்சி. அந்த இரண்டு நாளும் ஒரு புதூ சாமியார் ஏதோ வாயில் வந்ததையெல்லாம் உளறி வைத்திருக்கிறார். இப்போது பிரபலமாக இருக்கும் ஆன்மீகவாதிகள் பற்றி யூகிக்காதீர்கள். இது ஒரு புதூ சாமி. உட்கார இடமில்லாமல் ஜமுக்காளத்தை விரித்து தரையிலெல்லாம் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள் மக்கள். இரண்டே நாளில் ஐம்பது லட்சம் வசூல். ஒரே மூலதனம், புதூ சாமியாரின் தாடி. தாடி இருந்தால் சாமியார். சாமியார் எதை உளறினாலும் பன்னிரண்டாயிரம் ரூபாய் கொடுக்க எல்லோரும் தயார்.
The Blinding Absence of Light என்ற நாவல் என் வாழ்க்கையை மாற்றி விட்டது. என் அன்றாட வாழ்க்கையை, என் தத்துவப் பார்வையை, என் ஆளுமையை எல்லாவற்றையும் மாற்றிய நாவல் அது.
அதைப் போன்ற ஒரு நாவல் தியாகராஜா. இந்த நாவலைப் படிப்பதற்கு முன் இருந்த ஒருவர் இதைப் படிப்பதற்குப் பின் இருக்க முடியாது. அவர் வாழ்வில், அவர் பார்வையில் ஒரு மேன்மை வந்து சேரும் என்பது நிச்சயம். இதன் ஸ்பெஷல் எடிஷனை வாங்குவதற்கு 10000 ரூ. நன்கொடை தாருங்கள் என்று விண்ணப்பித்தேன். நெருங்கிய நண்பர்கள் பத்து பேரும், எனக்கு முகம் தெரியாத நண்பர்கள் பத்து பேரும் பணம் அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் இந்தத் தொகையை என் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத்தான் செலவு செய்யப் போகிறேன் என்று எழுதியும் இதுதான் நிலை. ஆக, தாடி வைத்துக்கொண்டு, ”உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவேன்’ என்று புருடா விட்டால் எத்தனை தொகை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதே மாற்றத்தை, அதே மகிழ்ச்சியை என் நாவல் மூலம் வழங்குகிறேன் என்றால் பேச்சு மூச்சையே காணோம். இத்தனைக்கும் அந்த நூலின் அச்சு செலவே 1500 ரூபாயைத் தாண்டும் போல் இருக்கிறது. அந்த அளவுக்கு உயர்தரமாக வர இருக்கிறது தியாகராஜா.
ஸபெஷல் எடிஷன் என்றால், அதில் உங்கள் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். என் கையெழுத்து இருக்கும். ஒவ்வொரு புத்தகத்திலும் என் கையெழுத்து இருக்கும். கையெழுத்து அச்சில் அல்ல. கைப்படக் கையெழுத்திட்டு அனுப்புவேன்.
மாதிரிக்கு நாவலிலிருந்து ஒரே ஒரு அத்தியாயத்தை எடுத்து இங்கே போட்டால் இன்னும் இருபது பேர் பணம் அனுப்புவார்கள். ஆனால் நாவல் வெளிவரும் வரை அதன் ஒரு வார்த்தை கூட வெளியில் வரக் கூடாது என்று தீர்மானித்திருக்கிறேன்.
என் வார்த்தையை நம்புங்கள். இதற்கு நீங்கள் செலவு செய்யும் பணம் வீண் ஆகாது. இத்தனை தூரம் நான் எழுதுவதன் காரணம், என் நூல்கள் ஆங்கிலத்தில் வந்தால் சமகாலத் தமிழ் இலக்கியத்துக்கு நல்லது.
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பணம் அனுப்புவதற்கான விவரம்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai