மேன்மையுற வேண்டும்!

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அராத்து ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். ஒரு பெண்மணி ரூ. 12,000/- கொடுத்து ஒரு ஆன்மீக வகுப்பில் சேர்ந்திருக்கிறார். இரண்டு நாள் நிகழ்ச்சி. அந்த இரண்டு நாளும் ஒரு புதூ சாமியார் ஏதோ வாயில் வந்ததையெல்லாம் உளறி வைத்திருக்கிறார். இப்போது பிரபலமாக இருக்கும் ஆன்மீகவாதிகள் பற்றி யூகிக்காதீர்கள். இது ஒரு புதூ சாமி. உட்கார இடமில்லாமல் ஜமுக்காளத்தை விரித்து தரையிலெல்லாம் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள் மக்கள். இரண்டே நாளில் ஐம்பது லட்சம் வசூல். ஒரே மூலதனம், புதூ … Read more

பரவசம்

தியாகராஜா நாவலில் இருநூறு பக்கங்களை முடித்து விட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் போகலாம். இது இப்போதைய உத்தேசம். என் விஷயத்தில் எதுவும் நிச்சயமில்லை. திடீரென்று ஐநூறு பக்கமும் போகலாம். அல்லது, முந்நூறிலேயே முடியலாம். இதுவரை படித்த நான்கைந்து பேரும் எழுதிய வார்த்தைகளை நாவல் வெளிவரும்போது உங்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் தரும் செய்தி ஒன்றுதான். படிக்கும்போது ஒரு பரவச நிலை ஏற்படுகிறது. பரவசம் என்றால் என்ன? இசைக்கு மட்டும்தான் அந்த சக்தி உண்டு. மைக்கேல் … Read more

தியாகராஜா நாவலை எழுதுவதன் நோக்கம் என்ன?

இந்தக் கேள்விக்கு இதுவரை நான் சொல்லி வந்த பதில் இதுதான்: எந்த நோக்கமும் இல்லை. எனக்குக் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு தபால்காரன். அவ்வளவுதான். ஆனால் தியாகராஜா நாவலுக்கு அப்படிச் சொல்ல மாட்டேன். சமீபத்தில் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, கர்னாடக சங்கீதம் பரவலாக ரசிக்கப்பட வேண்டும். ஒரு கச்சேரிக்குப் போனால் அங்கே ஐநூறு பேர் இருந்தால் அதில் நானூற்றுத் தொண்ணூற்றைந்து பேர் … Read more

ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆன்மீக நாவல் எழுதலாமா?: வளன் அரசு

பின் நவீனத்துவம் எதையுமே ஒதுக்கியதில்லை. அதன் முக்கியமான அம்சம் தேர்ந்தெடுத்தல். அதாவது உங்களுக்கு முன் பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அல்லது நீங்கள் வேட்டைக்கு செல்வதாக கற்பனை செய்துகொள்ளுகள். காட்டில் பல்வேறு விலங்குகள் இருக்கிறது. பார்க்கும் அத்தனை விலங்குகளையும் வேட்டையாடுதல் சரியான வேட்டையல்ல. ஒரு வேட்டைக்காரன் தன் வேட்டையை தெரிவு செய்கிறான். அப்படி தேர்ந்தெடுத்ததும் தன் வேட்டைக்காக காத்திருக்கிறான் அல்லது காட்டில் சுற்றி வருகிறான். அப்போது அவன் முன் தன் வேட்டையைவிட பெரிய … Read more