தாசிகளின் மோசவலை – ஒரு ’குறியியல்’ ஆய்வு

ஆமாம், குறியியல் குறியியல் என்ற பெயர் அடிபடுகிறதே, அப்டீன்னா என்னா என்று கேட்டார் ஒரு நண்பர். அது ஒண்ணுமில்லீங்க, penisology, vaginalogy ரெண்டையும் சேர்த்து தமிழ்ல சொல்றதுதான் குறியியல் என்றேன். குறியியலின் ஆங்கில வார்த்தை organology.

அந்தக் காலத்தில் ஜமீன்களெல்லாம் தாசி வீட்டுக்குப் போவது வழக்கம். பெண்டாட்டி கிளி போல் இருப்பாள். ஆனாலும் குரங்கு குசலாவிடம் போய் சொத்தையெல்லாம் எழுதிக்கொடுப்பான் ஜமீந்தார். இது ஏன் என்று சின்ன வயசிலிருந்தே எனக்கோர் சம்சயம். இந்த சம்சயம் குமுதத்தில் வந்த பயோடேட்டா என்ற பத்தி ஒன்றைப் படித்த போதுதான் தீர்ந்தது. அந்த பயோடேட்டா பத்தி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏழெட்டு வார்த்தைகளில் ஒருத்தரின் வாழ்க்கையையே பிட்டுப் பிட்டு வைத்து விடுவார்கள். அந்தக் காலத்தில் ஒரு பெண் பெரிய பெரிய அரசியல்வாதிகளையும் போலீஸ் அதிகாரிகளையும் ‘கைக்குள்’ போட்டு வைத்திருந்தார். பிறகு மாட்டிக்கொண்டார். ஊரே அவரைப் பற்றித்தான் பேசியது. அப்படியானால் உடனே குமுதத்தில் பயோடேட்டா வந்து விடும். அந்தப் பெண்ணுக்கும் வந்தது. டிக்‌ஷனரி மாதிரி போடுவார்கள். ஏழெட்டு வார்த்தைதான். அந்தப் பெண் பற்றிய ஆறு விளக்கம் ஆறு வார்த்தைகளில். கடைசியில் மூலதனம் என்று இருந்தது. அதாவது, அந்தப் பெண் அத்தனை பிரபலம் ஆனது எதை வைத்து என்று பொருள். மூலதனம் – வாய். அவ்ளோதான். புரிந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.

கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தும் ஜமீன்கள் ஏன் குரங்கு குசலா தாசிகளிடம் போய் சொத்தை இழந்தார்கள்? வாய்.

இப்போது குறியியலுக்கு வருவோம். தமிழ்நாட்டில் எண்பதுகளில் அப்படி மூன்று வாய்கள் இருந்தன. மூன்று வாய்களுக்கும் ரொலாந் பார்த் தெரியும். ஃபூக்கோ தெரியும். தெரிதா தெரியும். மூன்று மணி நேரம் கூட வாய் வலிக்காமல் உரையாற்றுவார்கள். அதில் நம்முடைய குறியியலும் அடக்கம். இன்னொரு வாய் லண்டனில் பதூசாக வாழ்கிறது. இன்னொரு வாய், பேராசிரியர். சாகித்ய அகாதமி போன்ற பெரிய இடங்களில் குப்பை கொட்டி விட்டு இப்போது எங்கோ நாவலுக்கு மேல் நாவல் எழுதி வாழ்கிறது. அந்த வாயின் ஒரே வாசகர் அதேதான். போகட்டும். நம்முடைய செல்லம் குறியியல் இருபத்தைந்து ஆண்டுகளாக அடிஸ் அபாபா போன்ற ஊர்களில் குறியியல் கற்பித்து, சென்னையில் வீடு கட்டி, குழந்தை பெற்று வாழ்ந்ததா, அதற்கு திடீரென்று எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஆசை வந்து இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி வைத்திருக்கிறது.

தாசிகளில் யார் உசத்தி தெரியுமா? வாய் வேலை மட்டும் போதாது. அதற்கும் மேல், பரதம் தெரிந்திருக்க வேண்டும். சதுரங்கம் தெரிந்திருக்க வேண்டும். பாடத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்தால் ரொம்பப் பெரிய இடம் என்று பொருள்.

அப்படியேதான் நான் குறிப்பிட்ட மூன்று இண்டலெக்சுவல் தாசிகளும். இதுகளுக்குத் தெரியாத விஷயமே இல்லை. ஆளை அசத்தி விடுவார்கள். நீங்கள் பேசினால் நீங்கள் முட்டாள் ஆவீர்கள். எல்லாமே தெரியும். இதில் இரண்டு தாசிகளுக்கு ஆங்கிலம் தண்ணீர் மாதிரி. ஒரு தாசிதான் தமிழ். ஆங்கிலத்தில் யோசிக்கும் தாசிதான் நம் செல்லம் குறியியல் தாசி.

கடைசியில் என்ன ஆயிற்று? ஆடத் தெரியும், பாடத் தெரியும், செஸ் தெரியும். கூடுதலாக ஃப்ரெஞ்சும் தெரியும். ஆனால் தம்பி, இலக்கியம் நெருப்புடா. அது உன்னைப் போன்ற ஆட்களை – புகழுக்காக வேசைத்தனம் செய்பவர்களை எரித்துப் போட்டு விடும். தாசிகளுக்காவது அது தொழில். ஆனால் நீயோ புகழுக்காக தாசித்தனம் செய்கிறாய். இலக்கியம் சும்மா விடுமா? அது ஒரு நெருப்பு. புதுமைப்பித்தனையே எரித்து விட்டது. இலக்கியத்தின் பக்கம் நெருங்கினால் ஊரே உன்னைக் கொண்டாடும். ஆனால் நீயும் அக்னியோடு அக்னியாய் சேர்ந்து எரியத்தான் வேண்டும். அங்கே போய் தாசித்தனம் செய்தால் இலக்கியம் உள்ளே நுழைந்தவுடனேயே எரித்துச் சாம்பலாக்கி விடும். எங்களைப் போன்றவர்கள் அந்த அக்னி குண்டத்தில் அமர்ந்து எங்களின் நேர்மை என்ற கவசத்தின் மூலமாக எங்களை அக்னி எரித்து விடாமல் அக்னிக்குள்ளேயே இருந்து இந்தப் பிரபஞ்ச சக்திக்கு இலக்கியப் பிரதிகளை உருவாக்கி அளித்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் காலம் முடிந்ததும் அக்னியோடு அக்னியாகி விடுவோம். எங்கள் படைப்புகள் இந்த உலகம் உள்ளளவும் நின்று எங்கள் செய்தியை சொல்லிக்கொண்டிருக்கும். இந்த விளையாட்டுக்கெல்லாம் உன்னைப் போன்றவர்கள் வரலாமா?

வர விருப்பமானால் இப்போதே வா. ஆனால் அதற்கு நீ சில விஷயங்களைத் தூக்கி எறிய வேண்டும். முதலில் உன் அகந்தை. உனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு வாக்கியத்தைக் கூட உன்னால் தமிழில் எழுதத் தெரியவில்லை. இதை நீ முதலில் உணர வேண்டும். அப்புறம்தான் மற்றதெல்லாம். ஆனால் நீ செய்ய மாட்டாய். நான் ஏதோ உன் மீது வன்மம் கொண்டு தாக்கி விட்டேன் என்றுதான் புரிந்து கொள்வாய். அப்படியானால் உனக்கு மீட்சி இல்லை என்றே பொருள்.

இன்னொரு தகவல், நான் குறிப்பிட்ட மூன்று இண்டலெக்சுவல் தாசிகளும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகக் காணாமல் போனதற்கு இன்னொரு மூன்று பேர் காரணம். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா. இந்த மூவரின் அசுர சாதனையில் மூன்று பதர்களும் காணாமல் போய் விட்டன. இப்போதுதான் ஒரு பதர் லேசாக எட்டிப் பார்த்து சூடு வாங்கிக்கொண்டிருக்கிறது.