திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் வரும் மொழிபெயர்ப்புகளைப் புறக்கணியுங்கள். முழுமையாகப் புறக்கணியுங்கள். ஆங்கிலப் பதிப்பாளர்கள் ஒரு வார்த்தை புரியவில்லையானால் அந்த வார்த்தை புரியும் வரை எழுத்தாளரோடு உரையாடுகிறார்கள். ஒரு புத்தகத்துக்காக ஆறு மாதம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி ஒன்றும் ஆங்கிலத்தில் அதிகம் விற்பனையாவதில்லை. ஒருசில ஆயிரங்கள்தான். ஆனால் தமிழ்ப் பதிப்பாளர்கள் வெறும் புத்தக விற்பனையாளர்கள் மாதிரியும் அச்சகத்தார் மாதிரியும்தான் செயல்படுகிறார்கள். காலச்சுவடு, க்ரியா போன்ற ஒன்றிரண்டு பதிப்பகங்கள் விதிவிலக்கு. தமிழ்ப் பிரபாவின் ஒரு நாவலை செப்பனிட காலச்சுவடு பதிப்பகம் சில ஆண்டுகள் எடுத்துக்கொண்டன என்று கேள்வி.
ரோஜாவின் பெயர், நாவலின் தலைப்பு. நாவலுக்கு ஒரு உப தலைப்பும் உள்ளது. இயற்கையாகவே, ஒரு கைப்பிரதி. ஒரு மயிரும் புரியவில்லை, இல்லையா? தலைப்பிலேயே கந்தர்வ கோளம். தலையைப் பிய்த்துக்கொண்டேன். பதிப்பாளரே, இதற்குத்தான் நீர் ஒரு லட்சம் நட்ட ஈடு கொடுக்க வேண்டும். என் நூலகத்தில் தேடிப் பிடித்து – தேட ஒரு மணி நேரம் ஆயிற்று – ஆங்கிலப் பிரதியை எடுத்தேன்.
அடக் கழிச்சல்ல போவானுங்களா…
தமிழில் “இயற்கையாகவே, ஒரு கைப்பிரதி” ஆங்கிலத்தில் என்ன தெரியுமா?
Naturally, a manuscript.
இவ்வளவுதான். இவர்களையெல்லாம் கழுவில் ஏற்ற வேண்டுமா, இல்லையா? ஏண்டா, ஏமாற்றுப் பேர்வழிகளா, ஏஐயிடம் கொடுத்து மொழிபெயர்த்து விட்டு உங்கள் பெயரையா போட்டு கச்சடா வேலை செய்கிறீர்கள்/
நேச்சுரலி என்றால் இயற்கையாகவே என்றா பொருள்? நீங்கள் உண்மையிலேயே ஒரு ஆங்கிலப் பேராசிரியர்தானா? நேச்சர் என்றால்தான் இயற்கை. நேச்சுரலி என்றால் இயற்கையாகவே என்று அர்த்தம் அல்ல. நேச்சுரலி என்றால் இயல்பாகவே என்றுதான் தமிழில் சொல்ல வேண்டும். அதாவது, மொழிபெயர்ப்பு இப்படி இருக்க வேண்டும்.
ரோஜாவின் பெயர்
இயல்பாகவே, இது ஒரு கைப்பிரதி. (”இது” என்றும் வர வேண்டும். ஆங்கில வாக்கிய அமைப்பையே தமிழில் போட்டால் சூத்தில் பீ ஒட்டிக்கொண்டிருப்பது போல் இருக்கும், மக்கட்டைகளா!)
அடுத்து, நாவலுக்குள் நுழைந்தேன். 42ஆம் பக்கத்தில் உள்ள ஒரு வாக்கியம் பைத்தியக்காரனின் உளறலைப் போலவே இருந்தது. அதை மேற்கோள் காட்டுவதற்காகக் குறித்து வைத்தேன். அந்த வாக்கியம்:
”மேலும் ராட்சதர்கள் தங்கள் வேலையைத் தொடங்கிய நாளில் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த மறுக்க முடியாத சகுனங்களை நான் துறவிகளின் ஏமாற்றப்பட்ட தீர்மானம் தெய்வீக வார்த்தையைப் பாதுகாப்பதற்காகக் கட்டடத்தைப் புனிதப்படுத்தத் துணிவதற்கு முன்பே சரியாகப் புரிந்து கொண்டேன்.”
நட்ட ஈடு ஒரு லட்சமே கம்மி. இன்னும் அதிகம் வேண்டும். ஜூஸ் என்று சொல்லி பாதாள சாக்கடையைக் கொடுத்த கதை இதுதான். இந்த வாக்கியத்தில் ஏதாவது புரிகிறதா? இது தமிழா?
உடனே நான் பிரபு கங்காதரனை அழைத்தேன். ”ஆமாம், ஏதோ கஞ்ஜா அடித்து விட்டு உளறுபவனின் உளறலில் கூட ஏதோ ஒன்றிரண்டு விளங்கும், அதைவிடக் கேவலம் இந்த மொழிபெயர்ப்பு என்றீர்களே? அந்த இரண்டு பக்கத்தை எனக்கு அனுப்ப முடியுமா?” என்று கேட்டேன். நான் இப்போது சொல்வதை உங்களால் நம்ப முடியாது. நான் குறித்து வைத்திருந்த பக்கமே அது. அது மட்டுமல்ல. நான் குறித்து வைத்திருந்த அதே வாசகம். மேற்கண்ட வாசகம்.
உண்மையில் இந்த நாவலின் மொழிபெயர்ப்பை குறியியல் பேராசிரியர் பண்ணவில்லை. அவருக்கு இதைவிட நன்றாக தமிழ் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஏஐயிடம் கொடுத்துப் பண்ணி, அதை அப்படியே பதிப்பகத்திடம் கொடுத்து விட்டார். அவ்வளவுதான்.
இப்போது மேலே உள்ள வாக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.
I was rightly interpreting the indubitable omens inscribed in the stone on the day the giants began their work, before the deluded determination of the monks dared to consecrate the building to the presentation of the divine word.
இத்தனை தெளிவாக வாக்கியத்தைத்தான் மேலே குறியியல் பேராசிரியர் போட்டு கைமா பண்ணியிருக்கிறார். இதை நான் பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்.
”துறவிகளின் தவறான முடிவு அந்தக் கட்டடத்தை தெய்வீக வார்த்தையின் வெளிப்பாட்டிற்காக அர்ப்பணிக்கத் துணிந்ததற்கு முன்பு, ராட்சதர்கள் தங்கள் பணியைத் தொடங்கிய நாளில், கல்லில் பொறிக்கப்பட்டிருந்த தெளிவான சகுனங்களை நான் சரியாக விளங்கிக் கொண்டிருந்தேன்.”
இதில் கூட deluded determination என்பதற்குத் தவறான முடிவு என்பது தவறு. ஆனாலும் பேராசிரியரின் குறியியல் மொழிபெயர்ப்பை விட இது கொஞ்சம் தேவலாம் என்றே தோன்றுகிறது.
நூலின் அடுத்த பக்கம்.
“ஒரு பணக்கார மடாலயம்,” என்றார். “மடாதிபதி பொது நிகழ்வுகளில் பெரும் காட்சியை விரும்புகிறார்.”
பெரும் காட்சி புரியவில்லை. ஆங்கிலத்தைப் பார்த்தேன்.
“A rich abbey,” he said. “The Abbot likes a great display on public occasions.”
ஆங்கிலத்தில் புரிந்தது. ஆக, மீண்டும் குறியியல் மொழிபெயர்ப்பு. கையால் மொழிபெயர்க்காமல் குறியினால் மொழிபெயர்த்திருப்பார் போலிருக்கிறது. great display என்பது குறி மொழிபெயர்ப்பில் பெரும் காட்சியாக வருகிறது. ஏஐ மொழிபெயர்ப்பு.
இது எப்படியிருக்க வேண்டும்? ஒரு பணக்கார மடாலயம்,” என்றார். “பொது நிகழ்வுகளில் மடாதிபதி பெரும் ஆடம்பரத்தை விரும்புகிறார்.”
டிஸ்ப்ளே என்றால் காட்சியா? எவன்யா உமக்குத் தமிழ் ஆங்கிலமெல்லாம் சொல்லிக் கொடுத்தது?
அடுத்து, 45ஆம் பக்கம்.
ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு லத்தீன் வாக்கியம் வருகிறது. அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. வெறும் லத்தீன் வாக்கியம் மட்டுமே. ஆனால் குறியியல் இங்கே தன் குறியைக் கொண்டு தமிழில் அதைக் கொடுக்கிறது.
முதலில் லத்தீன்.
omnis mundi creatura
quasi liber el pictura
nobis est in speculum
இதற்குக் குறியியலின் குறி மொழிபெயர்ப்பு:
உலகின் ஒவ்வொரு உயிரினமும்
புத்தகத்தையும் படத்தையும் போல
நம்மிடம் ஒரு கண்ணாடி இருக்கிறது.
அடி செருப்பால, இதற்குப் பெயர் தமிழா? இதற்குப் பெயர் மொழிபெயர்ப்பா? சரியான மொழிபெயர்ப்பைக் கீழே தருகிறேன்:
உலகின் ஒவ்வொரு படைப்பும்
ஒரு புத்தகமாகவும் ஓவியமாகவும்
நமக்கு ஒரு கண்ணாடியாக விளங்குகிறது.
உலகில் உள்ள அனைத்து படைப்புகளும் (இயற்கை, உயிரினங்கள் முதலியவை) ஒரு புத்தகம் அல்லது ஓவியம் போல நமக்கு அறிவையும் பிரதிபலிப்பையும் தருகின்றன என்று பொருள்.
நாவலின் இரண்டே பக்கங்களில் இப்படி ஒரு தகிடுதத்தம். நாவல் மொத்தம் 720 பக்கங்கள். சாவுங்கடா என்று தந்திருக்கிறார்கள் குறி பேராசிரியரும் பதிப்பகமும்.
இப்படியே மொழிபெயர்ப்புப் புத்தகங்களைப் படித்துப் படித்து சாக வேண்டியதுதான்.
அல்லது, சுரணையுள்ளவர் யாரேனும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு மன உளைச்சல் ஆனவர்களுக்கு நட்ட ஈடு வாங்கித் தாருங்கள். நட்ட ஈடு கூட முக்கியமில்லை. இது போன்ற கயவாளித்தனம், ஏமாற்றுவேலை, பிக்பாக்கெட் வேலை இனிமேல் நடக்காமல் இருக்க ஒரு வழி உண்டாகும்.
எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக ஏமாற்றுகிறார்கள். கர்ப்பகிருஹத்திலேயே செக்ஸ் வைத்துக்க்கொண்டு அதை விடியோ எடுத்து வெளியே விடுகிறான். தாய் தன் கள்ளக் காதலனுக்காக குழந்தைகளை விஷம் வைத்துக் கொல்கிறாள். என்னென்னவோ நடக்கிறது. இலக்கியம் என்பது ஆகப் புனிதமானது. ஏனென்றால், இங்கே அவன் அவன் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, சொத்தை விற்று, இலக்கியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நீங்கள் என்னடாவென்றால், மொழிபெயர்ப்பு என்று சொல்லி எங்கள் வாயில் உங்கள் குறியைத் திணிக்கிறீர்கள், நீங்கள் மலத்தில் நெளியும் புழுக்களை விடக் கேவலமானவர்கள்…
இதோடு இந்தக் கச்சடாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
(நல்லவேளை, புவனேஸ்வரிக்காக ஒரு பெரிய கட்டுரைத் தொடரே எழுதினேன். இல்லாவிட்டால், ஊர் பொல்லாப்பு உங்களுக்கு எதுக்கு, ஊரே உங்களைத் திட்டுகிறது, நாயே பேயே என்று எல்லோரையும் திட்டி விட்டீர்கள், கட்டுரையைத் தூக்குங்கள் என்று அக்கப்போர் வந்திருக்கும். ஒருத்தன் ஊர் அறிய ஏமாற்று வேலை செய்து எல்லோர் வாயிலும் குறியைச் சொருகுகிறான், அவனைக் கண்டிக்காமல் நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?)