குறியியல் பேராசிரியரின் குறியியல் பாடம் : ரோஜாவின் பெயர் (3)

அநேகமாக இந்த மொழிபெயர்ப்பு நாவல் பற்றி பல கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், தமிழர்களின் வெளிநாட்டு மோகம் பற்றி திட்டி, வசைபாடி, விமர்சனம் பண்ணி நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இது ஒரு சுத்திகரிப்புப் பணி. தமிழர்களின் குணக்கேடு பற்றி நான் ஒற்றையாளாக மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறேன். இன்னமும் தமிழ் வாசகர்களுக்கு புத்தி வராமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

காரணம், தமிழர்களின் அந்நிய மோகம். ஆங்கிலத்தில் Xenomania என்பார்கள். இது பாரதி – தாகூர் காலத்திலிருந்தே தொடங்கி விட்டது. பாரதி இங்கே சோற்றுக்கே திண்டாடிக்கொண்டிருந்த வேளையில்தான் தாகூர் தமிழ்நாட்டுக்கு வந்து பல கல்லூரிகளில் உரையாற்றி சாக்குமூட்டையில் பணத்தை அள்ளிக்கொண்டு போனார். கல்லூரிகளில் அவர் உரையைக் கேட்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்தப் பணம் தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனம் அமைக்கப் பயன்பட்டது. நம்முடைய கவிஞனைப் பட்டினி போட்டுக் கொன்று விட்டு, வெளியூர்க் கவிஞனுக்குப் பண மூட்டை கொடுத்த கும்பல் தமிழ்க் கும்பல்.

விடியல் என்று ஒரு பதிப்பகம். வாரம் ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று மொழிபெயர்ப்பு ஃபேக்டரி நடத்திக்கொண்டிருந்தது. அதில் யுவான் ருல்ஃபோவின் நாவல் ஒன்று மாட்டிக் கொண்டது. அதில் ஒரு வாசகம். “அவன் சுவரை நகத்தால் பிறாண்டினான்.” ஆனால் நாவலில் அவன் பைத்தியம் இல்லை. அவன் ஏன் சுவரைப் பிறாண்ட வேண்டும்? அதற்கான இடமே நாவலில் இல்லை. என்னிடம் இருந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் தேடினேன். யுவான் ருல்ஃபோ எனக்குக் கடவுள் மாதிரி. ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்த வாசகம்: ”அவன் சுவரில் ஆணி அடித்தான்.” அடக் கேடு கெட்ட சவங்களா! மொழிபெயர்த்த சிகாமணிக்கு நெயில் என்றால் நகம் என்று மட்டுமே தெரிந்திருக்கிறது. நெயில் என்றால் ஆணி என்று அவர் படித்த தமிழ் மீடியம் ஸ்கூலில் சொல்லிக்கொடுக்கப்படவில்லை. அதில் தப்பே இல்லை. ஆனால் இம்மாதிரி ஆசாமிகளெல்லாம் மொழிபெயர்க்க வரலாமா? இதே கதைதான் ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது.

அப்போது விடியல் செய்ததை இப்போது எதிர் பதிப்பகம் செய்கிறது. பதிப்பாளர் நல்லவர். யாருக்கும் தீங்கு நினைக்காத மஹாத்மா. ஆனால் அவர் ஒன்றும் புத்தக வியாபாரி இல்லையே? புத்தக வியாபாரி என்றால் எனக்கு என்ன தெரியும் என்று கேட்கலாம். ஆனால் இவர் பதிப்பாளர் ஆயிற்றே? எனக்குத் தெரியாது என்று பொறுப்பைத் துறக்க முடியாதே?

இது குறித்து அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியதை இங்கே தருகிறேன்:

ரோஜாவின் பெயர் – அடிமை மனோபாவம்: அராத்து

இந்தப் பதிவு ரோஜாவின் பெயர் ஒரிஜினல் நாவல் பற்றிய இலக்கிய விமர்சனமோ, மொழிபெயர்ப்பின் தரம் பற்றியதோ அல்ல. மாறாக இந்த மொழிபெயர்ப்பு நாவல் வெளியானதை ஒட்டி இந்த மூடர் அடிமை சமூகம் அதை எப்படி எதிர்கொண்டது என்ற அபத்தத்தைப் பற்றி.

என்னமோ காணாது கண்ட அதிசயம் போல, இலக்கிய வாசக உலகம் துள்ளிக் குதித்தது. இங்கே என்னவோ வாசிக்க நாவலோ நல்ல இலக்கியமோ இல்லாதது போல, வாராது வந்த மாமணி போல புல்லரிப்பு காட்டினார்கள். சோமாலியா நாட்டில் பிரியாணி பொட்டலங்கள் போட்டது போல அலைந்தார்கள். அடச்சீ என்றானது எனக்கு. என்னய்யா உங்களுக்கெல்லாம் பிரச்சனை? இந்த கேடுகெட்ட அடிமை மனோபாவம், அரசியல் , சினிமா போன்றவற்றில்தான் இருக்கிறது என்றால் இலக்கியத்திலுமா?அயல்நாட்டு இலக்கியத்தை வாசிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. இப்படியா நாய் நாக்கைத் தொங்கப்போட்டு வாலாட்டுவது போல குழைய வேண்டும்?

இங்கே இப்போது பரவலாக வாசிக்கப்படும் ஸ்டார் இலக்கிய எழுத்தாளர்கள் யார்? சாரு நிவேதிதா, ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன். அடுத்து இன்னும் யார்? நாஞ்சில் நாடன், தேவிபாரதி, பூமணி, பெருமாள் முருகன் என ஆரம்பித்து நூற்றுக்கணக்கில் சொல்லிக்கொண்டு போகலாம்.

சரி, இந்த மூத்த எழுத்தாளர்கள் அல்லாமல், அடுத்தத் தலைமுறை எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இது அல்லாமல் கவிஞர்கள் என எடுத்துக்கொண்டால் டெலிபோன் டேரக்டரியே போடலாம். இவர்களில் எவர் எழுதிய புத்தகம் வெளியாகும் போதும் இவ்வளவு ஆரவாரம் எப்போதேனும் எழுந்ததுண்டா? ஜெயமோகன் , சாரு ஸ்டார் எழுத்தாளர்கள் எனச் சொன்னேன் அல்லவா? அவர்கள் நாவல்கள் வெளியாகும் போதேனும் இப்படிப்பட்ட கொண்டாட்டங்களும் ஆரவாரமும் நிகழ்ந்தது உண்டா? தமிழில் எந்த நாவல், அது எவ்வளவு முக்கியமான நாவல் வெளியானாலும் , செத்த நாய் செருப்பு கடிச்சிட்டு இருந்த மாதிரி கிடக்கும் இலக்கிய வாசக உலகம் இந்த ஊம்பர்ட்டோ எக்கோவைப் பிடித்து ஏன் இப்படி ஊம்பிக்கொண்டு கிடக்கிறது? இதற்கே இந்த நாவல் 1980 இல் வெளியானது.

இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்குத்தான் இப்படி அவுத்துப் போட்டு ஆடுகிறார்கள். சரி, அது உலகத்தரமான நாவல் எனச் சொல்வார்கள் எனில் இங்கே தமிழில் உலகத்தரமான நாவலே இல்லையா? இங்கே அசோகமித்திரன் இல்லையா? கோபி கிருஷ்ணன் இல்லையா? நகுலன் இல்லையா? இவர்கள் எவருக்காவது இப்படி சிலிர்த்து ஆடியிருக்கிறார்களா? புதுமைப்பித்தன் முழுத்தொகுப்பு என பிச்சைக்காசுக்கு மலிவு விலையில் போட்டால் சில நூறு பிரதிகள் வாங்குவார்கள். சரி உயிரோடு இருக்கும் உள்ளூர் எழுத்தாளர்கள் தமிழ் வாசகப் பரப்புக்கு ஓவ்வாமை, இவர்கள் மம்மி லிட்ரேச்சர் , சமாதி இலக்கிய கோஷ்டிகள் என்ற உண்மையை ஒத்துக்கொண்டு பார்த்தாலும், உலகின் சிறந்த இலக்கிய நாவல்களில் ஒன்றான ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி யை எவரும் இப்படி சிலிர்த்துக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. இதற்கே ஜெயமோகன் , சாரு இருவருமே அதை சிறந்த நாவல் என எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்த சொற்ப வாசகர்களும், அதுல 50 பக்கத்தைத் தாண்ட முடியவில்லை என கைவிடப்பட்ட நாவல் அது. என்னளவில் உலகில் தலை சிறந்த 10 நாவல்களில் அதை வைப்பேன். அதில் என்ன புரியவில்லை என்றே இன்றளவும் எனக்குப் பிடிபடவில்லை.

அடர்த்தியான நாவல்தான் எனினும், சுவாரசியமான மொழி நடை. புத்துணர்ச்சியான வாசிப்பனுபவம் கிட்டும். எனக்கெல்லாம் , படித்துப் படித்து முன்னேற அய்யய்யோ இந்த நாவல் முடியப்போகிறதே என்றுதான் தோன்றிக்கொண்டு இருந்தது.

எந்தச் சிக்கலும் இல்லாமல் நன்கு புரிந்து படிக்கக்கூடிய புயலிலே ஒரு தோணியை கண்டுகொள்ளாமல் விட்ட இந்த வாசகச் சமூகம்தான் குறியீட்டில் நொட்டி இருப்பதாகச் சொல்லப்படும் ரோஜாவின் பார்வைக்காக வெறி கொண்டு விழாக்கோலம் பூண்கிறது. என்ன காரணம்? அந்நிய மோகமும், அடிமை மனோபாவமும், தாழ்வுணர்ச்சியும்தான். வெளிநாட்டு இலக்கியம் வாசித்தால் நம்மை பெரிய பூம் பூம் என நினைத்துக்கொள்வார்கள் என்ற அறியாமை மற்றும் சிறுபிள்ளைத்தனம். இங்கிருப்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இங்கே இருக்கும் சிறந்த இலக்கியங்களை ஆங்கிலத்தில் கொண்டு சென்று சேர்த்திருக்க வேண்டும். ஆனால் நடப்பதென்ன? இங்கே ஒரு மயிரும் இல்லாதது போல, ஆஃப்கன் , சோமாலியா போல வெளிநாட்டு இலக்கியத்தை வெறிகொண்டு மொழிபெயர்த்துக் கொண்டு வந்து கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். செடல் குத்திக்கொண்டு ஆடுகிறார்கள். படு அருவருப்பாகவும் அசூயையாகவும் உள்ளது.இங்கே எவ்வளவு பெரிய எழுத்தாளரின் நாவல் வெளியானாலும் உண்டாகாத எழுச்சி ஒரு ஊம்பர்த்தோ எக்கோவின் மொழிபெயர்ப்பு நாவலுக்கு உண்டாவது எப்படி இருக்கிறது எனில், என் தாயைப் புணர வெளிநாட்டுக்காரன் ஒருவன் வருகிறான் என குதியாட்டம் போடுவது போல இருக்கிறது. கண்றாவி !

இந்தக் கொண்டாட்டம் இலக்கிய முகாமில் மட்டுமல்ல. இலக்கிய லேபிளை ஒட்டிக்கொண்டுத் திரியும் சினிமாக்காரர்கள் மத்தியிலும் ஒரு எழுச்சியை உண்டாக்கி இருக்கிறது. மொழிபெயர்த்த எம் டி எம் க்கு பிரதிகள் கிடைக்கும் முன்பே இயக்குநர் மிஷ்கின் 5 பிரதிகள் வாங்கி அதன் புகைப்படத்தை எம் டி எம் க்கு அனுப்பி வைக்கிறார். அதில் எத்தனை பிரதியை இதுவரை மிஷ்கின் படித்திருக்கிறார் எனத் தெரியவில்லை. மிஷ்கின் அந்த 5 பிரதியையும் வாசிப்பார். அவர்தான் ஒரு படத்தையே 1000 முறை பார்ப்பவர் ஆச்சே.

சாரு நிவேதிதா , ஜெயமோகன் , எஸ்.ரா போன்றவர்கள் பல தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி பாராட்டியும், விமர்சனம் செய்தும் எழுதியிருக்கிறார்கள். ரோஜாவின் பெயர் 5 பிரதி வாங்கி மாஸ் காட்டும் மிஷ்கின் உட்பட எந்த திரைப்பட இயக்குநராவது தமிழ் எழுத்தாளார்கள் எழுதிய புத்தகங்கள் வெளியாகும் போது சின்னதாகவாவது அதைப்பற்றி பேசியிருக்கிறார்களா ? அட ஒரு சின்ன ட்வீட் போட்டு ஷேர் செய்திருக்கிறார்களா ? எவ்வளவு கேவலமான மனநிலை. வெளிநாட்டு மோகத்தில் வெறிகொண்டு வாங்கி அதே வெறியோடு படித்த ஒருசிலர் ஐயோ யம்மா குத்துதே குடையுதே என பழுக்கக் காய்ச்சிய இரும்புத்தடியை பின்னால் சொருகியது போல புலம்பிக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. அப்படியும் ஒருசிலர்தான் முனகுகிறார்கள். வழக்கமாக அடிமைகளுக்கு ஆஸ் ஃபக் வாங்கினாலும் உறைக்காது, தெரியாது. “நல்லாதான் இருந்துச்சி…வலிக்கிதுதான், ரத்தம் வருதுதான்…அதுலயும் ஒரு சொகம் இருக்கு. அது மொதல்ல புரியாது, கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் புரிஞ்சிக்கணும்” எனச் சொல்லியபடி கமுக்கமாக கொஞ்ச நாளுக்கு அதக்கி அதக்கி நடப்பார்கள், அவ்வளவுதான்.

***

அராத்து குறிப்பிடும் அந்நிய மோகம் எந்த அளவுக்குப் போயிருக்கிறது என்றால், ஒரு மூத்த எழுத்தாளர் ஃபேஸ்புக்கில் ரோஜாவின் பெயர் இந்த ஆண்டு சென்னை புத்தக விழாவில் பெஸ்ட்செல்லராக இருக்கும் என்று அடித்து விடுகிறார்.

அடுத்து, அராத்து மிஷ்கினின் அந்நிய மோகம் பற்றி எழுதியிருக்கிறார். மிஷ்கின் போன்ற ஒரு xenomaniacஐ நான் பார்த்ததில்லை. ஒருவேளை கமல் மிஷ்கினை மிஞ்சலாம். கமலாவது தமிழிலும் படிக்கிறார். மிஷ்கின் வெறும் ஆங்கிலம்தான். ஒருநாள் மிஷ்கினைப் பார்க்கப் போனேன். “குளித்து விட்டு வருகிறேன், அதுவரை இந்த நூலைப் படியுங்கள்” என்று கண்களில் ஒளி மின்ன பரவசமாய் சொல்லிச் சென்றார் மிஷ்கின். பார்த்தேன். ஊம்பர்ட்டோ எக்கோவின் ஒரு கட்டுரைத் தொகுப்பு. முதல் கட்டுரை பாரிஸ் பற்றி. என் குறியில் உள்ள மயிர் மாதிரி இருந்தது. அதை நான் மிஷ்கினிடம் சொல்லவில்லை. “இதை விட ஆயிரம் மடங்கு பிரமாதமாக பாரிஸ் பற்றி நான் ராஸ லீலா நாவலில் எழுதியிருக்கிறேன், இந்தக் குப்பையைக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்கிறீரே?” என்றேன். அதற்குப் பழி வாங்குவதற்காகத்தான் என்னை நடனக் காட்சியில் சேர்த்து என் கட்டை விரலை மட்டும் காட்டினார் மிஷ்கின்.

இப்போது குறியியல் பேராசிரியரின் ரோஜாவின் பெயரை வாங்கியவர்கள் என்ன செய்யலாம் என்றால், பதிப்பகத்தின் மீது பொதுநல வழக்கோ அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திலோ வழக்குத் தொடுக்கலாம். ஏனென்றால், இந்தப் புத்தகம் ஒரு ப்ராடக்ட். நாம் இதைப் படிக்கிறோம். ஆனால் மிக மோசமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். பதிப்பகத்தால் அல்ல. மொழிபெயர்ப்பாளரால். பதிப்பகமும் ஏமாந்திருக்கிறது. பதிப்பகம் பதிப்பகமாக செயல்படாமல் புத்தக விற்பனை நிலையமாகச் செயல்பட்டிருக்கிறது. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. புத்தகம் வந்ததுமே 2000 பிரதிகள் விற்றிருக்கும். இதில் 500 பேர் என்னைப் போல் ஏமாற்றப்பட்டு விட்டதாக மன உளைச்சல் அடைந்திருப்பார்கள். மன உளைச்சலுக்கு ஒரு லட்சமும் புத்தக விலை 899 ரூபாயும் சேர்த்து பதிப்பகம் இந்த ஐநூறு பேருக்கும் தலா 1,00,899 ரூ. கொடுக்க வேண்டியது. இதனால் பதிப்பகத்துக்கு உண்டாகும் ஐந்து கோடி ரூபாய் நட்டத்தை அவர்கள் குறியியல் பேராசிரியரிடமிருந்து வசூலிக்கலாம். ஏனென்றால், ஏமாற்றியது அவர்தான். நம்மைப் போலவே பதிப்பகமும் பேராசிரியரிடம் ஏமாந்திருக்கிறது.

ஊம்பர்த்தோ எக்கோ என்று குறியியல் பேராசிரியர் ஏன் சரியான உச்சரிப்பைப் போடவில்லை என்று புரிந்து விட்டது. கோவில்பட்டியில் ஒரு எழுத்தாளர் தன் இல்லத்துக்கு வரும் வாசகர்கள் (ஆண்கள்) உறங்கும்போது அவர்கள் வாயில் தன் குறியை விட்டுத் தன் காம இச்சையைத் தீர்த்துக்கொள்வாராம். அதேபோல் இந்தக் குறியியல் பேராசிரியர் வாசகர்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே குறியியல் பாடத்தை நடத்தி முடித்து விட்டார். அதனால்தான் ஊம்பர்ட்டோ எக்கோ எனச் சொல்லவில்லை.

சரி, வாசகர்கள் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் ஒரு கடையில் போய் ஜூஸ் வாங்குகிறீர்கள். ஆனால் அவர்களோ பாதாள சாக்கடையிலிருந்து மொண்டு எடுத்த கழிவு நீரை பாட்டிலில் அடைத்துக் கொடுக்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? நுகர்வோர் நீதிமன்றம்தானே நாம் அணுக வேண்டிய இடம்? ரோஜாவின் பெயர் நூல் மொழிபெயர்ப்பில் நடந்திருப்பது இதே தான். ஒரே ஒரு சான்றை அடுத்த கட்டுரையில் தருகிறேன். அதற்கு முன்னால் பிரபு கங்காதரன் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது:

ஊம்பர்தோவின் ( இதுதான் சரியான உச்சரிப்பாம்) ரோசா நாவலின் இரண்டு பக்கங்களை ஒரு அன்பர் அனுப்பியிருந்தார். ஒரு கஞ்சா அடித்த பைத்தியக்காரனின் உளறலில் கூட எதாவது பொருள் கண்டுகொள்ளலாம்,ஆனால் அந்த இரண்டு பக்கங்களில் சில பல பத்திகளில் பொருளே இல்லை. MDM ன் மொழி பெயர்ப்பு அத்தனை கேவலமாக உள்ளது. MDMன் மொழிபெயர்ப்பு என்று சொல்வதே தவறு. MDM எதோ AI applicationல் செய்திருக்கிறார் போல. அது தன்னிஷ்டத்திற்கு தமிழை கொ*லை செய்திருக்கிறது. பதிப்பகத்தார் படித்துப் பார்த்துதான் புத்தகத்தை பதிப்பிக்கிறார்களா? (ஐயா பதிப்பகத்தாரே வாசகர்கள் பாவமில்லையா? )எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான், அந்த புத்தகம் வந்தவுடன் பலர் வாங்கி முகநூலில் புகைப்படங்களை பகிர்ந்தார்கள், அவர்கள் புத்தகத்தை வாசித்தார்களா? வாசித்துவிட்டு ஷேமமாக இருக்கிறார்களா?