ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

இன்று ராஸலீலா பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு ஜோடிப்புறா எத்தனை பிரதிகள் விற்றன என்று கேட்டேன். 33 என்ற பதில் வந்தது. என் வாட்ஸப் தொடர்பில் சுமார் நானூறு பேர் உள்ளனர். அவர்களில் ஒரு நூறு பேர் வாங்கினால் கூட போதும், பதிப்பகத்திலிருந்து என்னுடைய மற்ற நூல்களைப் பிரசுரித்து விடலாம். இப்படி பத்தும் இருபதும் விற்றால் எப்படி எழுதுவது? எதற்காக எழுதுவது? ஒரு யோசனை சொல்கிறேன். எனக்கு சில நண்பர்கள் பணம் அனுப்புகிறார்கள். சில தினங்கள் முன்பு கூட ஒரு நண்பர் 500 ரூ. பணம் அனுப்பினார். ஒரு மாதத்துக்கு அந்தப் பணத்தை எனக்கு அனுப்பாமல் இன்னும் ஒரு 160 ரூபாயைப் போட்டு ஜோடிப்புறா நாவலை வாங்கி விடுங்கள். இன்னொரு நண்பர் 3000 ரூ. அனுப்பினார். இவர்கள் அனைவரும் தாங்கள் அனுப்பும் பணத்திலிருந்து 660 ரூபாயை எடுத்து ஜோடிப்புறா நாவலை வாங்கலாம். எனக்கு ராயல்டி தொகை 66 ரூ. கிடைக்கும். ஆனால் உங்கள் மூலம் எனக்கு நேரடியாகக் கிடைக்கும் ஐநூறை விட இந்த 66 எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. ஏனென்றால், எனக்குப் பணத்தை விட பதிப்பகம் முக்கியம். இது பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். ஒரு முந்நூறு பிரதிகள் கூட விற்கவில்லை என்றால், நான் எழுதுவதில் அர்த்தமே இல்லை. கட்டுரைத் தொகுதிகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், படிக்கலாம். ஆனால் நாவல் என்பதை என் உயிரை உருக்கி அல்லவா எழுதுகிறேன்? அதற்கு ஒரு முந்நூறு வாசகர்கள் எனக்கு இருக்க வேண்டாமா?

இந்த நாவல் கெட்டி அட்டையில் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நியாயமாக 900 ரூ விலை வைத்திருக்க வேண்டும். லாபமே வேண்டாம், சாருவின் எழுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 660 ரூ என விலை வைத்திருக்கிறார்கள். வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நமது ராஸலீலா பதிப்பகத்தில் சாரு நிவேதிதாவின் “மயன் மாளிகை” மற்றும்” ஜோடிப் புறாவை எங்கே காணோம்?” புத்தகங்கள் தற்பொழுது விற்பனையில் உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்பும் நண்பர்கள் ராஸலீலா பதிப்பகத்தின் whatsap number (7339680708) -ல் மற்றும் AMAZON தளத்திலும் புத்தகங்களை பெற்று கொள்ளலாம்….

வர்ஷா தேவி குணசேகரன்

ராஸலீலா பதிப்பகம்…G-pay number 7339680708

raasaleelapathippagam@gmail.com