நாய் படும் பாடு (எதிர்க் கலாச்சாரம் – 2)

தோழி, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து போனேன். நீ பேசும் போது நான் எழுதிய – அதாவது, இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்ற நவீன தீண்டாமை என்ற கட்டுரையில் அந்த இசை விமர்சகரை நாய் என்று குறிப்பிட்டு எழுதியதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம் என்றாய். எனக்கு நாய் என்றால் உயிர். யாரையுமே நான் நாய் என்று திட்ட மாட்டேன். ஆனாலும் நீ சொன்னதால் மௌனமாகவும், அதே சமயம், நாய் என்று சொல்ல மாட்டேனே என்று முணகியும் மருகினேன்.

“நான் முழுசாகப் படிக்கவில்லை, ஆனால் சொன்னார்கள்” என்றாய். அப்படி உன்னிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னவர்களை இறைசக்தி இன்னும் ஒரே வாரத்தில் தண்டிக்கும். ஏனென்றால், நான் பாட்டுக்கு சிவனே என்று என் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். இங்கே வந்து ஒருத்தன் இவன் ஒழுங்காக ஓக்க மாட்டான் என்கிறான். அதை நான் எதிர்கொண்டால் நாய் என்று திட்டி விட்டான் என்கிறான். நீயோ நான் முழுசாகப் படிக்கவில்லை என்கிறாய். முழுசாகப் படிக்காமல் என்ன மயிருக்கு என்னுடைய ஒரு முழு நாளையும் வீணடிக்கத் துணிந்தாய்? மதியம் வரை சொர்க்கத்தில் இருந்தவன் மதியத்துக்கு மேல் சாக்கடையில் விழுந்து விட்டேன்.

எந்தப் பன்றி சொன்னது, நான் நாய் என்று எழுதினேன் என்று? சே, பன்றி என்று சொன்னால் நாயில் இருக்கும் வேகம் வர மாட்டேன் என்கிறது. நாய் என்றும் திட்ட முடியாது. இப்படி இல்லாததைச் சொல்லி உன்னை முடிக்கி விட்ட மலப்புழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் தண்டனை கிடைக்கும் என்று சாபமிடுகிறேன். அந்த அளவுக்கு என்னை நீங்கள் அனைவரும் சேர்ந்து மிருகமாக்கியிருக்கிறீர்கள்.

என் மீதே சந்தேகப்பட்டு என் கட்டுரையையே இன்னொரு முறை படித்தேன். நாய் என்று எங்கேயும் இல்லை. ஆனாலும் வீண்பழி. ஒருத்தர் மீது பழி போடுவதற்கு முன்னால் தீர ஆராய்ந்து விட்டு, அதாவது, படித்து விட்டுப் பழி போட மாட்டீர்களா? படிக்கக் கூட இல்லாமல் வந்து குற்றம் சாட்டுவீர்கள், இல்லையா? உங்களுக்கெல்லாம் இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்றுதான் யோசிக்கிறேன். ஜெயமோகனிடம் போய் இந்த அதிகாரத்தைக் காட்டுங்கள். தோல் உரிந்து போகும். சாரு ஒரு கேணப்புண்டை என்பதால் இங்கே வந்து உங்கள் அதிகார மயிரை அவிழ்க்கிறீர்கள். தியாகராஜாவில் சந்தேகம் கேட்பதற்காக ரெண்டு நாள் கிட்டத்தில் வந்தால் துடப்பக்கட்டையைத் தூக்குகிறீர்களே, அடுக்குமா இது?