இறைவரிடம் எதுவுமே வேண்டுவதில்லை
ஏனென்றால்
கிடைத்த வரங்கள் அதிகம் –
நீரோடை போல ஓடும் அமைதியில்,
ரகசியத் தோட்டத்தின்
இலைகளுக்கிடையே மறைந்து,
நேரத்தின் கண்ணாடியில்
பிரதிபலிக்காத உருவங்கள் போல–
அதில் ஆகப் பெரிய வரம்
என் மனையாள்
என் எழுத்தைப் படிக்காமல்
இருப்பதுதான்.