சித்த மருத்துவர் பாஸ்கரன்

சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றிப் பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் உடல் மற்றும் மன நோய் மிக அதிக அளவில் பரவியிருக்கிறது. இந்த இரண்டு நோய்மைகளுக்குமே நீங்கள் பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளலாம். சித்தம் என்றாலே மனம்தான். எனவே உடல் மனம் இரண்டுக்குமே சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. மற்ற மருத்துவ முறைகளில் பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்தும் குணமாகாத பல நோய்கள் பாஸ்கரனின் மருந்துகளில் குணமாவதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். என் வாசகர்கள் பலர் பயன்பெற்றிருக்கிறார்கள். இப்போது … Read more

ஒதுங்கியிருக்கிறேன்…

சில தினங்களுக்கு முன்பு ஒரு வாசகரிடமிருந்து வாட்ஸப் மெஸேஜ் வந்தது. “இரண்டொரு நாளில் புனேவிலிருந்து சென்னை வருகிறேன். நானும் என்மனைவியும் என் இரண்டு மகள்களும் (மூத்தவளுக்கு ஆறு வயது, அடுத்தவளுக்கு மூன்று வயது) தங்களை வந்து சந்திக்க விரும்புகிறோம். நேரம் கிடைக்குமா?” “அப்போது நீங்கள் பிஸியாக இருந்தால் மீண்டும் 26ஆம் தேதி சென்னை வருகிறேன். மே 2 வரை இருப்பேன். அந்த நாட்களில் ஒருநாள் தங்களை வீட்டில் வந்து சந்திக்க முடியுமா?” அடிப்படையில் நான் ஒரு முட்டாள். … Read more

இரண்டு புதிய புத்தகங்கள்

2025ஆ,ம் ஆண்டு என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இனி எழுத இருக்கும் நாவல்களையும், இப்போது எழுதிக்க்கொண்டிருக்கும் நாவல்களையும் இனிமேல் ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  தமிழில் எழுதி நானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது அல்ல.  ஆங்கிலத்திலேயே எழுதி விடுவது.  காரணம் என்ன? பல வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களின் எழுத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.  சவூதி அரேபியாவில் அப்துர்ரஹ்மான் முனீஃபின் நாவல்கள் தடைசெய்யப்பட்டன.  அவர் சவூதியிலிருந்து வெளியேறி ஜோர்டானில் வாழ்ந்தார்.  டால்ஸ்டாய் போன்ற … Read more

சும்மா இரு சொல் அற

1. அன்பேகொஞ்ச நேரம்சும்மா இருசொல்லற்றிருஉன் சொற்கள்உன் கண்ணீரின்ஈரம் சுமந்திருக்கின்றனஎரிமலையின் கொந்தளிப்பையும்பித்தனின் கூச்சலையும்ஆவேசத்தையும்கதறலையும்பிரிவின் பதற்றத்தையும்அச்சம் சூழ்ந்தஇருளின் தனிமையையும்கொண்டிருக்கின்றன நினைவுகொண்ட நாளிலிருந்தேமனநோயாளிகளோடுவளர்ந்த நான்இப்போதேனும் கொஞ்சம்அமைதியின் நிழலைவிரும்புகிறேன்உன்னோடு இருந்த காலம்எனக்கு அந்தநிழலை வழங்கியதுசொற்களில் வாழும் நீஎனக்கு சொற்களற்றஅமைதியை அருளினாய் நினைவிருக்கிறதா அன்பேஒரு பகல் முழுதும் நாம்சொற்களற்றிருந்தோம்ஆனால் இப்போதுதொலைவிலிருக்கும் நீவலி சுமக்கும் சொற்களைஅனுப்புகிறாய்கொஞ்சம் சும்மா இருசொல்லற்றிரு. 2. யார் சொன்னதுதுயருற்றிருக்கிறேனென்று? இது ஓர் அதிசய உலகம்வெளியிலிருந்து காண்போருக்குத்துயரெனத் தெரிவதுஇதனுள்ளேகவித்துவம்வாதையெனத் தெரிவதுஆனந்தம்பதற்றமெனத் தெரிவதுபரவசம்பித்தமெனத் தெரிவதுகுதூகலம்சத்தமெனத் தெரிவதுசங்கீதம்வலியெனத் தெரிவதுஇன்பம்கொந்தளிப்பெனத் தெரிவதுநடனம் ஆனால் கண்ணே,சொற்களற்று சும்மா இருக்கவேண்டுமானால்நீ … Read more

அழகான கல்

கானகத்திலே தனித்துக்கிடந்ததொரு கல்அமர்ந்து கொள்வதற்கும்சாய்ந்து கொள்வதற்கும்வசதியானவழுவழுப்பான கல் தோழிகளை அழைத்து வந்தால்அந்தக் கல்லில் வைத்துத்தான்கலவி கொள்வது தோழிகள் இல்லையெனில்அந்தக் கல்லில் அமர்ந்துதான்கரமைதுனமும் ஒருநாள் ஒருஅதிசயம்நடந்தது அந்தக் கல்அவனிடம்பேசியது வள்ளுவன் அந்தக் குரலைக்கேட்கவில்லைகேட்டிருந்தால் மழலைச் சொல்குறித்து அப்படியொரு குறளைத்தொடுத்திருக்க மாட்டான்வசியம் செய்யும் குரல் ஆனால்கல் பேசுமா?எங்கேயும் கேட்டதில்லைஎங்கேயும் கண்டதில்லை அந்தக் கல் பேசியது கல் பேசினால்கடவுள் மண்ணும் மலையும்கடலும் உலகேழும்நின்னிடமே காண்கின்றேன்நீயே சரணமெனவீழ்ந்த அவன்அந்தக் கணத்திலிருந்துவேறாளாய் மாறிப்போனான் நீதான் என்னை மாற்றினாய்நன்றி என்றான் இல்லை என்றது தெய்வம்நான் எப்போதுமேஇப்படியேதான்இருக்கிறேன் … Read more

அலைந்த இலை ஸ்திரம் கண்ட கதை

என்ன செய்தியெனக் கேட்டமைனாவிடம் ஒரு அதிசயம்கேளென்றேன் சென்ற ஆண்டுநானொரு புதினம்எழுதிக்கொண்டிருந்தேன் ஒரு வாரமாக மோகினிக்குட்டியோடுதொடர்பில்லை என்பதைக்கூடஅறியா நிலை என்ன செய்தி எப்படியிருக்கிறாயெனக்கேட்டுமோகினிக்குட்டியிடமிருந்துஒரு விசாரிப்பு வந்ததைக்கண்டேன்என் இணையதளத்தில் மறுநாள்எழுதினேன் ”புதினத்தில் வாழும்போதுயாரோடும் தொடர்பில் இருக்கமாட்டேன்;இதற்கு விலக்கில்லை.” அப்படியிருந்த எனக்குஇப்பொழுதுமோகினிக்குட்டியைநொடிப்பொழுதுபிரிந்தாலும்பதற்றம் கொள்கிறதுஏனிப்படி எனமைனாவிடம்கேட்டேன் வா என்னுடனெனச் சொல்லிஇட்டுச் சென்றதுமைனா அது ஒரு மலைமுகடுஅதிலே ஒரு சித்திரக் குள்ளன்அவன் சொன்னான்,“அலைந்த இலைஸ்திரம் கண்டது.’