நம்ப முடியாத கதை

ஆம்நீவிர் இந்தக் கதையைநம்ப மாட்டீர்எத்தனையோ பேரிடம்இயம்பினேன்கருவிகளின் காலம்கவியின் கதைஏற்பார் எவருமில்லை ஒரு ஊரிலே ஒருஅகோரி இருந்தார் அகோரிக்கொரு மனையாளும்ஒரு புதல்வனும்ஒன்பது சீடர்களுமுண்டு அவர் அகோரியெனஉலகமறியாதுஅறிந்தோர் சீடர் மட்டுமே உயர்படிப்பும்ஆய்வும் முடித்துடாக்டர் பட்டம் பெறுவது போலவேஅகோரியாவதும்! அதுவொரு பாடத்திட்டம் மலத்தை மகிழ்ச்சியுடன்தின்ன வேண்டும்கலவியிலேகளிகொள்ளக் கூடாதுஆசை துக்கம்கோபம் பொறாமைகாமமெதுவும் கூடாதுநெருப்பிலெரியும்பிரேதத்தின் மீதமர்ந்துகொஞ்சமாய் தவமிருக்கவேண்டும் அவ்வளவுதான் எல்லாம் செய்தார்அகோரி அப்போது அவர் முன்னேவந்துதித்தமசானக் காளிஎன்ன வரம் வேண்டுமென்றாள் எது வரமும் வேண்டாம்ஆயிரம்கோடி அழகெலாம் திரண்டொன்றாகிநிற்கும் உன் அருட்செல்வம் எனக்குண்டுபொருட்செல்வமும் குறைவில்லைஎனக்கென்ன வேண்டும் … Read more

ஆத்மாவிலிருந்து பேசுதல்

எழுத்தே என் பிராணன்அந்த எழுத்துடன் பயணிப்பவளென்மோகினிக்குட்டிஅவளோடுகூடஆத்மாவிலிருந்து பேசுவதில்லைகாரணமொன்றுமில்லைசிறைக்கூடத்திலிருந்து எவரேனும்ஆத்மாவிலிருந்து பேச முடியுமா? இந்தப் பேச்சு எதற்கென்றால்ஒருநாள் என் மனையாள் சொன்னாள்யாருடனோ நீ ஆத்மாவிலிருந்துபேசிக்கொண்டிருந்தாய்.சொல்லும்போதுஏக்கத்தின் கேவல்தெறித்து விழுந்தது யோசித்து யோசித்துக் களைத்தேன் ஒருநாள் எதேச்சையாகத்தெரிந்ததுபிராணனைவிட முக்கியமானதேதேனுமுண்டா?உண்டென்றாலதுகவிதை கவிதை பற்றியேஅந்தக் கவிஞனுடன்பேசுவதுண்டுஆத்மார்த்தமாகத்தான் ஆத்மார்த்தியுடன் ஆத்மார்த்தமாகஅல்லாமல் வேறெப்படிப் பேசமுடியும்?

புகையும் பால்கனி

நண்பர்களோடுதங்கியிருந்த அறையின்பின்புற பால்கனி அதன்கீழே எப்போதும்சுநாதமெழுப்பியபடிஓடிக்கொண்டிருக்குமோர்ஓடை எட்டிப் பார்த்தால்அச்சமூட்டாதசிநேகமான அருவி அடர் வனத்தில்சூரியனைக் காணமுடிவதில்லை காலை பத்து மணியிருக்கலாம்யாரும் எழுந்துகொள்ளவில்லை பால்கனியில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருக்கிறேன் மரங்களோடும்அருவிகளோடும்நதிகளோடும்பிராணிகளோடும்வாழ்ந்திருந்த மனிதன்இப்படிநகரமயத்தினின்றும் விலகி வந்துதான்இதையெல்லாம்எட்டிப் பார்க்க முடிகிறது அப்போது பெருத்தவுடல்கொண்டவொரு குரங்குபால்கனியின் இரும்புக்கம்பியில்குதித்தமர்ந்து“பசி..பசி” என்றது அறைக்குள் சென்றுபழுத்து முதிருந்திருந்தவொருபப்பாளியைக் கொண்டு வந்துகொடுத்தேன் தட்டிப் பறிப்பது போல்பிடுங்கிக்கொண்டுகிளம்பியது வாய்விட்டு“ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?”எனத் துணுக்குற்றேன் “ம்ஹும்” நவில்வதும்மறப்பதும்”மானுடத்தின் இயல்பன்றோ?”எனச் சிரித்தவாறேஅகன்றதுஅந்த மந்தி.

கொஞ்சம் மேற்கத்திய இசை

விவால்டியின் The Four Seasons என்ற இசைக் கோர்வையில் 3rd Movement என்ற பகுதி மிகவும் கடினமானது. ஆனால் கேட்பதற்கு ஒரு மகத்தான இசை அனுபவத்தைத் தர வல்லது. கீழே அதன் இணைப்பு https://youtu.be/ZdjeaURnyiE இதுவும் விவால்டிதான் Vivaldi: Violin Concerto in D Major (Grosso Mogul), complete | Augusta McKay Lodge RV 208 8K விவால்டி. இது அத்தனை பிரபலம் ஆகாதது. ஆனாலும் கடினமானது. Violin Concerto in E Minor, … Read more

தியாகராஜா பற்றி ஒரு கடிதம்

நேற்று வெளியிட்டிருந்த தியாகராஜா நாவலின் ஒரு சிறு பகுதி பலரையும் கவர்ந்திருக்கிறது. அந்த ஆங்கிலம் பிடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை, உங்களுடைய இந்த ஆங்கிலத்தை விட உங்கள் தமிழ் நன்றாக இருக்கும் என்றே சொன்னேன் என்றாள் ஸ்ரீ. நிச்சயமாக. நான் எழுதும் தமிழ் இன்றைய தினம் ஈடு இணை இல்லாதது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். அப்படி ஒரு ஆங்கிலத்தை என்னால் எழுத இயலாது. ஆனால் நானும் ஸ்ரீயும் சேர்ந்தால் எழுதலாம். அப்படித்தான் அனாடமியை எழுதினோம். நேற்று … Read more