ஏழேழு ஜென்மத்துக்கும் தமிழ் எழுத்தாளனாய்ப் பிறக்க வேண்டும்!

முந்தாநாள் வரை அடுத்த ஜென்மத்தில் தமிழ் எழுத்தாளனாக மட்டும் பிறந்து விடவே கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பை நேற்று வந்த ஒரு கடிதம் மாற்றி விட்டது. முழுக் கடிதத்தையும் வெளியிடத் தயங்குகிறேன். அதில் உள்ள ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகிறேன். வெளியிடாமல் இருக்க முடியவில்லை. இப்படி ஒரு கடிதத்துக்காக நான் வாழ்நாள் முழுவதும் கூலி இல்லாமல் எழுதலாம். நோபல் பரிசோ வேறு எந்தப் பரிசோ கிடைக்காமல் போகலாம். ஒரு வீசா வாங்குவதற்குக் கூட எழுத்தாளன் என்று … Read more

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 1

வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஐரோப்பிய சினிமா பற்றி உரையாற்ற இருக்கிறேன். பதினொன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒரு மணிக்கு மதிய உணவு. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். மூன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை வாசகர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். கேள்விகளுக்குப் பதில் தருவேன். ஒரே ஒரு … Read more

இலக்கியமும் ஜனரஞ்சக எழுத்தும்

சமீபத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். ”சாகித்ய அகாதமி விருதை ஏன் ராஜேஷ்குமாருக்குக் கொடுக்கக் கூடாது?” அதற்கு ராஜேஷ்குமார் பிரபாகர் இப்படிச் சொன்னதே எனக்கு அந்த விருது கிடைத்து விட்டது போல் இருக்கிறது என்று நன்றி கூறியிருக்கிறார். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கேலிக்கூத்து நடக்கும். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இலக்கியத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் வித்தியாசமே தெரியாமல் இருப்பார்கள் மக்களும் ஜனரஞ்சக எழுத்து உற்பத்தியாளர்களும். வித்தியாசமே தெரியவில்லை. சாகித்ய அகாதமி விருது இலக்கியத்துக்கு அளிக்கப்படுவது, வணிக/ஜனரஞ்சக … Read more

அற்புதர்கள்

ஏ.ஆர். ரஹ்மானைத் தொடர்பு கொள்வது மிகவும் சிரமம் என்பார்கள். ஆனால் நான் தொடர்பு கொண்டால் அரை மணி நேரத்துக்குள்ளாக பதில் வந்து விடும். ஒரு முறை கூட தவறியதில்லை. சமீபத்தில் அவர் வாழ்வில் ஒரு அசந்தர்ப்பமான சம்பவம் நடந்த அன்று கூட வேறோர் வேலையாகத் தொடர்பு கொண்டபோது அரை மணி நேரத்தில் பதில் வந்தது. இறையன்புவும் அப்படித்தான். பொதுவாக உடனே எடுத்து விடுவார். அவசர வேலையில் இருந்தால் வேலை முடிந்ததும் அழைக்கிறேன் என்பார். அநேகமாக ஒரு மணி … Read more

மன உளைச்சல்

நேற்று காலை ஏழரை மணிக்கு எனக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைப் பார்த்ததிலிருந்து ஒரே மன உளைச்சல். மரண பயத்தினால் அல்ல. அந்த மொட்டைக் கடுதாசியில் என் பெயரை சாரு நாயுடு என்று குறிப்பிட்டிருந்ததால். என் நைனா நாயுடு சமூகம் அல்ல. காட்டு நாய்க்கன் சமூகம். அம்மா நாட்டுக்கோட்டை செட்டி. காட்டு நாய்க்கன் எப்படி நாயுடுவாக ஆக முடியும்? மேலும், நான் இன அடையாளத்தையும், தேச அடையாளத்தையுமே மறுத்து வருபவன். நான் எப்படி சாதி அடையாளத்தை, அதிலும் என் … Read more