ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 3

ஐரோப்பிய சினிமா : ஓர் அறிமுகம் நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தேன். தொடர்ந்து எழுத முடியாதபடி தியாகராஜா வேலைகள். முன்பு எழுதியிருந்ததை இங்கே மீண்டும் உங்கள் பார்வைக்காகத் தருகிறேன். சில நண்பர்கள் கட்டணம் செலுத்தி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் எட்டு பேர் கட்டணம் செலுத்தாமல் கலந்து கொள்ளலாம். பெயர் மற்றும் விவரங்களை அனுப்புங்கள். ஐரோப்பிய சினிமா என் எழுத்து வாழ்வில் மிக முக்கியமான அடிப்படைகளைத் தந்தது. ஜெர்மன் சினிமாதான் என்னை உருவாக்கியது என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். … Read more

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் 15% தள்ளுபடி

ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து வந்திருக்கும் அறிவிப்பு: இன்று தொடங்கி தீபாவளி முடியும் வரை நீங்கள் வாங்கும் எந்தப் புத்தகத்திற்கும் 15 சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் checkout செய்யும் போது தள்ளுபடி தானாகவே வந்துவிடும்.இந்த அறிவிப்பை முடிந்த வரை பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன். தொடர்புக்கு: Zero Degree Publishing – Book Publishing Company – Zero Degree Publishing 1

László Krasznahorkai-க்கு நோபல்: ஸ்ரீராம்

László Krasznahorkai-வின் Satan Tango நாவல் பற்றி சாரு பல முறை எழுதியுள்ளார். Turin Horse படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர். அவர் நோபல் விருதுக்கு தகுதியானவர் என்று சாரு நிறைய முறை எழுதியுள்ளார். ஒரு முறை தில்லி Almost Island கருத்தரங்கில் László Krasznahorkai-யும் சாருவும் கலந்துரையாடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சந்திப்பு நடைபெறவில்லை. – ஸ்ரீராம்

வன்முறை

சில தினங்களுக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் தான் எழுதிய நாவல் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்து இதைப் படித்துப் பார்த்து கருத்து சொல்லுங்கள் என்றார். நான் அதை குப்பையில் தள்ளி விட்டேன். அதற்கு அர்த்தம் அது குப்பை என்பது அல்ல. அது ஒரு உலக காவியமாகக் கூட இருக்கலாம். எனக்கு அதைப் படிக்கவெல்லாம் நேரமில்லை. அப்படியே நேரமிருந்தாலும் நான் ஏன் அதைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. இன்று எனக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஒரு … Read more

மனுஷா ப்ரபானி திஸாநாயக

மனுஷா ப்ரபானி திஸாநாயகவின் வர்ண மேகங்களிடையே இருந்து… என்ற இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம். இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் … Read more

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 2

நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் ஐரோப்பிய சினிமா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்பணம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் இந்தச் செலவை ஏற்க முடியுமா? முடிந்தால் தெரியப்படுத்துங்கள். எட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க இரண்டு நண்பர்கள் முன்வந்து எட்டாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவர்தான் பெயரும் விவரமும் அனுப்பியிருக்கிறார். மாணவர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். இத்தனை எழுதியும் வாசகர் வட்ட நண்பர்கள் யாருமே என்னைத் … Read more