ஸூகராணாம் ஸூகர ஏவ அதிபதி (2)

வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.  சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாதமி விருது வாங்குவதற்காக விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.  நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார்.  அந்த ஆண்டு விருதுக்குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார்.  வண்ணநிலவனை வல்லிக்கண்ணன் என்று நினைத்துக்கொண்டு பழத்தட்டுடன் என்னைப் பார்க்க … Read more

ஸூகராணாம் ஸூகர ஏவ அதிபதி

மேற்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழியின் பொருள், பன்றிகளுக்குப் பன்றியே அதிபதி. அகிலனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போது சுந்தர ராமசாமி அகிலனின் எழுத்தை மலக்கிடங்கு என்று வர்ணித்தார். பிறகு ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்தது. ஜெயகாந்தன் இலக்கியத்திலும் இல்லை, வணிக எழுத்திலும் இல்லை. ரெண்டுங்கெட்டான். நா. பார்த்தசாரதி மாதிரி. அகிலனை விடக் கொஞ்சம் தேவலாம். இப்போது வைரமுத்து. மேற்கண்ட வரிசையில் இது சரியான தேர்வுதான். இந்தத் தேர்வுகள் தமிழ் புத்திஜீவிகளின் பரிந்துரையின் பேரில்தான் வழங்கப்படுகின்றன. தமிழில் புத்திஜீவிகள் யார்? கமல்ஹாசன், … Read more

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

நாவலில் ஒரு இரண்டாம் பாகம் சேர்த்து முடித்து விட்டேன். பதினைந்து நாட்கள். இரவு பகலாக எழுதினேன். 50000 வார்த்தைகள் சுமாராக. பதிப்பகத்திடம் கொடுத்து விட்டேன். இந்த மாத இறுதிக்குள் புத்தகம் கைக்குக் கிடைக்கும். கெட்டி அட்டை. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னட்டையில் என் கையெழுத்தில் புத்தகம் பற்றி எழுதித் தரச் சொன்னார் வர்ஷா. ஜோடிப்புறாவுக்காக எழுதியது இது:

ராஸ லீலா பதிப்பகம்

என்னுடைய புத்தகங்களை முதன்மைப்படுத்தி பதிப்பிக்க ஒரு புதிய பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் செல்வகுமாரின் கவிதைத் தொகுதியும், ரஸ்புடின் நிர்குணின் கவிதைத் தொகுதிகளும் கூட ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவரும். இப்போது மயன் மாளிகை என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதி இன்னும் இரண்டு வாரத்தில் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கிறது. மற்றபடி என்னுடைய எழுபது புத்தகங்கள் இதுவரை வந்தது போல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும். தொடர்ந்து அங்கிருந்தே கிடைத்து வரும். அதில் எந்த மாற்றமும் … Read more

எழுத்தாளனின் இலவச சேவை!

இனிமேல் கல்லூரிகளில் பேச அழைத்தால் கூச்சம் பார்க்காமல் கட்டணம் ஒரு லட்சம் என்று வெளிப்படையாகச் சொல்லி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி கூச்சம் பார்க்காமல் சொல்லவில்லை என்றால், கல்லூரியில் நமக்கு ஒரு பைசா தர மாட்டேன் என்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு தனியார் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு. தமிழ்நாட்டின் முதல் இடத்தில் நிற்கும் கல்வி நிறுவனம். அங்கே ஒரு மாணவர் படிப்பதற்கு ஒரு கோடி ஆகிறது. என்னைப் பேச அழைத்தார்கள். எனக்கு எவ்வளவு கட்டணம் என்று கேட்டேன். எதிரே … Read more