என்னுடைய புத்தகங்களை முதன்மைப்படுத்தி பதிப்பிக்க ஒரு புதிய பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் செல்வகுமாரின் கவிதைத் தொகுதியும், ரஸ்புடின் நிர்குணின் கவிதைத் தொகுதிகளும் கூட ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவரும். இப்போது மயன் மாளிகை என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதி இன்னும் இரண்டு வாரத்தில் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கிறது. மற்றபடி என்னுடைய எழுபது புத்தகங்கள் இதுவரை வந்தது போல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும். தொடர்ந்து அங்கிருந்தே கிடைத்து வரும். அதில் எந்த மாற்றமும் எப்போதும் இல்லை. என்னுடைய புதிய புத்தகங்கள் மட்டுமே ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவரும். மயன் மாளிகையைத் தொடர்ந்து இன்னும் சில வாரங்களில் என்னுடைய புதிய நாவல் “ஜோடிப்புறாவை எங்கே காணோம்?” ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவரும்.

இன்னொரு முக்கிய விஷயம். ராஸ லீலா பதிப்பகத்துக்கும் எனக்கும் எந்த வியாபார ரீதியான எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் என் நெருங்கிய நண்பர்கள். என் எழுத்தின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவர்கள்.
மயன் மாளிகை நூலின் விலை 250 ரூ. முன்பதிவுத் திட்டத்தில் வாங்க விரும்புபவர்களுக்கு ஐந்து சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். அது ஒன்றும் பெரிய தொகை இல்லைதான். ஆனால் ஏன் இருபது சதவிகிதம் என்றெல்லாம் வைக்க முடியவில்லை எனில், ராஸ லீலா பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்துமே புத்தகத் தயாரிப்பில் சர்வதேசத் தரத்தில் இருக்கும். நேற்று மயன் மாளிகையின் டம்மி காப்பி பார்த்தேன். சர்வதேசத் தரம் என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்லாமல், அந்தத் தரத்துக்கு ஏற்ற விலை வைக்கப்படவில்லை. விலை கூடுதலாக இருக்கக் கூடாது என்பதில் ராஸ லீலா பதிப்பக உரிமையாளர் வர்ஷா தேவி குறிப்பாக இருக்கிறார். மற்ற பல பதிப்பகங்களின் விலை எப்படியோ அந்த அளவில்தான் இருக்கும். பதிப்பகத்தின் முகவரியையும், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் கீழே தருகிறேன்.
Raasa Leela Pathippagam,
Flat No. 15/ 967/ 17,
Nandhi Nagar,
Thottipalayam Road,
Uratchikottai,
Bhavani, Erode 638 301
Email: raasaleelapathippagam@gmail.com
Phone: 73396 80708