3
பிறந்தநாளைச் சொன்னால் என்ன?
சொல்லாவிட்டால் என்ன?
அது ஒரு வெறுமையான நாள்,
ஏன் அதைப் பிடித்துத் தொங்குகிறாய்?
நீயும் நானும் ஒரு மதுக்கடையில்
வைன் குடித்தபடி இது பற்றிப்
பேசலாம்
ஆனால் இந்தப் பிறந்தநாள்
ஒரு பயனற்ற காகிதத்தில் எழுதப்பட்ட
மற்றொரு எண்ணிக்கை.
1
நான் ஒரு தீர்க்கதரிசி,
மதங்களை நம்பாதவன்.
அதனால் புது மதத்தை
உருவாக்கவில்லை,
என் தரிசனங்கள் சிலரின் பாதையை
மாற்றின
அதனால் என் பிறந்தநாள் ஒரு
சிறிய வெற்றி
ஒரு குடிகாரனின்
கடைசிச் சிரிப்பு மாதிரி.
2
உன் பிறந்த நாளை
நான் கொண்டாடுவேன்,
ஏனென்றால்,
எனக்கு நீ
ஒரு பாழடைந்த பட்டணத்தில்
எரியும்
கடைசி தீபத்தைப் போல.