கவிதை தெரியாத மட்டி மடையர்களுக்கு ஒரு விளக்கம்
இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி என்பார்கள். இதை ஆண்டாளிடமும் மற்ற பக்தி இலக்கியக் கவிகளிடமும் காணலாம். திருப்பாவையில் கிருஷ்ணனின் லீலைகள், கோவர்த்தன கிரி, கம்ஸ வதம் போன்ற புராணக் கதைகள் எல்லாம் பாகவதம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை. அதை விட முக்கியமாக ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப்படும் பக்தி மரபையும் ஆண்டாள் பின்பற்றுகிறாள். திருமால் மீதான தனது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, மற்ற ஆழ்வார்களைப் போலவே, தமிழ் பக்தி இலக்கியத்தின் பொதுவான உருவகங்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறாள். அதேபோல் ஆண்டாளின் பாசுரங்களில் … Read more