ஒரு காட்சி

பெங்களூர் ரயில் நிலையம்.வந்தே பாரத் ரயிலுக்காகநிற்கிறேன்.அப்போது ஒரு காட்சி: இளம்ஜோடி,நவீன உடைகளில். அவள் அழுது கொண்டே,முத்தங்களைப் பரிமாறி,ரயிலில் தனித்து ஏறுகிறாள்.ஏறிய பின்னும் கண்ணீர்அடங்கவில்லை என்பதைக்கண்டேன் சங்க காலப் பெண்டிருக்குத்தம் காதலனைப் பிரிந்துவளை கழன்று விழுந்தகதையெல்லாம் மனதில்தோன்றியது என் நண்பன் சொல்கிறான்,‘தற்கொலை செய்துகொள்ளலாம் போலிருக்கிறது,பைத்தியம் பிடித்துவிடும்போலிருக்கிறது’என்று. ’காதல் தோல்வியா?’ ’இல்லை. வெறும் பிரிவு,காதலி வெளியூரில்’ தாய்க்கு மகனையும் பேரர்களையும்,தந்தைக்கு மகளையும் பேரர்களையும்,காதலிக்குக் காதலனையும்காதலனுக்குக் காதலியையும்பிரிய முடியவில்லை. நண்பன் தற்கொலை என்றுபுலம்புகிறான். என் செல்லப் பிராணியைப்மரணத்திடம் தந்த போதுஎனக்கும் அப்படித்தான்இருந்தது. … Read more

இரண்டு திரைப்படங்கள்

நேற்று நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஈடி என்ற மலையாளப் படத்தைப் பார்க்க முயன்றேன். பத்து நிமிடம்கூட பார்க்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. பத்தே நிமிடத்தில் (கக்கூஸில் ஒளிந்து கொள்ளும் காட்சி) ஓடி விட்டேன். இத்தனை சிறுபிள்ளைத்தனமாக தமிழ் சினிமாகூட இருப்பதில்லை. ப்ளூசட்டை மாறனின் பரிந்துரையில் இன்று டௌன்ரேஞ்ஜ் என்ற படம் பார்த்தேன். இப்படி ஒரு த்ரில்லரை இதுவரை பார்த்ததில்லை. மை நேம் இஸ் டெவில் அளவுக்கு இருந்தது. மை நேம் இஸ் டெவிலில் கதை இருந்தது. … Read more