அணில் என்னும் சிநேகம்

மானுடரோடு பேசுவதில் மனம் களைத்துஅந்தக் கானகத்தின் மௌனத்தில்ஒரு பாறையின் குளிர்ந்த தோளில்என் தனிமையை சாய்த்திருந்தேன். அப்போது ஒரு அணில் குஞ்சுஇலைகளினூடாக நடனமாடியபடிஎன்னருகே வந்துஅங்கே இறைந்து கிடந்த சொற்களைஒளிரும் முத்துக்களெனஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்துஅதன் மென்மையான வாலால் துடைத்து,என் முன்னே அடுக்கியது. நான் கேட்டேன், “எதற்கு இந்த முயற்சி,என் சொற்களை நீ ஏன் தேடுகிறாய்?” அது சிரித்து, “உன் மௌனம் பேச,இது எனது சிறிய காணிக்கை” என்றது நான் நன்றி சொல்லும் முன்நிழலென உருண்டு வந்தவொருகாட்டுப்பூனை அந்த அணிலைக்கவ்விக்கொண்டு கானகத்தின்இருளில் மறைந்தது … Read more

மாயத்திரை

ஊருக்குப் போயிருந்தாள் மனையாள்ஒரு மாதம்உன் நண்பர் யாரும் இங்கேவரலாகாது, இதுயென் உத்தரவென்றாள் சரியென்றேன்வேறென்ன சொல்ல? மனையாள் சொல்வதெதையும்கேட்டதில்லை நண்பர்கள் வந்தார்கள்இருவர்இரண்டு நாள் தங்கி விட்டுச்சென்றார்கள் பிறகுதான் கண்டேன்படுக்கையறைத் திரைச்சீலைமுன்பக்கம் பின்பக்கமாகியிருந்ததுகவனமாகக் கேளுங்கள்திரைச்சீலை ஒன்றல்லஇரண்டுஒரு திரைச்சீலை மட்டும்மாறியிருந்ததுஇடப்பக்கத் திரைச்சீலைஒரு வண்ணம்வலப்பக்கத் திரைச்சீலைஇன்னொரு வண்ணம்புரளாமல் இருந்திருந்தால்இரண்டும் ஒரு வண்ணம் மனையாள் வந்தால்இது என்னவென்று கேட்பாளாமாட்டாளா இது என்னடா சங்கடமென்றுநண்பர்களிடம் கேட்டேன் தெரியாதே என்றனர் இந்தச் சிக்கலைவிடுவிப்பதெப்படியெனசாளரத்தில் வந்தமர்ந்தமைனாவிடம் கேட்டேன் இதெல்லாம் ஒரு பிரச்சினையாஒரு தச்சனையழைத்துசரி செய்யென்றது மைனா சொன்னபடிசெய்தேன் மறுநாள் … Read more