1
காதல்களைக் கடந்து
வருகிறேன்.
“நீயே என் கடைசி”
என்பதான
பழைய வசனங்கள்
என்னையும் பிணைத்திருந்தன—
அந்தக் கலைஞனை
சந்திக்கும் வரை.
ஒரு வேடம் களையும்போது
பழைய மண்ணின் தடம்
அறவே அகல வேண்டும்,
மணமும் மறைய வேண்டும்,
புதிதாய்ப் பிறந்தவனாய்
நிற்க வேண்டுமென
அவன் சொன்னான்.
2
அவ்வண்ணமே
ஒருத்தியை செல்லமென,
மற்றவளை மலரென,
ஒருத்தியை மயிலென,
இன்னொருத்தியை முத்தென
வேறு வேறு நிறங்களில்
அழைக்கத் தொடங்கினேன்.
“நீயே கடைசி” என்பதை
மனதில் கூட வைக்கவில்லை.
3
நேற்றின் பாரத்தை
நாளையின் பதற்றத்தை
கழற்றி வீசி,
இந்தக் கணத்தை
சுவாசித்து
ஆழ்கிறேன்
ReplyForwardAdd reaction |