சாகா வரமும் சாகும் வரமும்

பிராமணனொருவனுக்கு
சாகா வரம் தரும் கனியொன்று
கிடைத்தது
அதை அவன் நல்லரசனிடம்
கொடுத்தான்
நல்லரசன் அதைத்தன்
ஆசை மனையாளிடம்
கொடுத்தான்
மனையாள் அதைத்தன்
ஆருயிர்க் காதலனுக்கு
வழங்கினாள்
காதலன்
சற்றும் யோசியாமல்
வெகுநாள் மோகித்த
நாட்டியக்காரியிடம்
கொடுத்தான்
நாட்டியக்காரி அதை
நல்லரசனிடம் காணிக்கை
செய்தாள்

அந்தக் கணமே அரசன்
முடி துறந்து
ஆடை களைந்து
திகம்பரமாய்க் காடேகி
சல்லேகனையில்
உடல் துறந்தான்

யார் செய்தது தவறென்றான்
நண்பன்
தெரியவில்லை, சொல்லென்றேன்
பிராமணனிடமிருந்து
வாங்கியிருக்கவே கூடாது
அது சாகாவரம் தரும் கனியல்ல
சாகும் வரம் தரும் கனி
யென்றான்

ReplyForwardAdd reaction