ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு
ஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்று
பன்னிரண்டு பதின்மூன்று ……………
………………………………………..
அறுபது நொடிகள்
ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் மூன்று நிமிடம்
நான்கு நிமிடம் ஐந்து நிமிடம் ஆறு நிமிடம்
ஏழு நிமிடம் எட்டு நிமிடம் ஒன்பது நிமிடம்
பத்து நிமிடம் பதினோரு நிமிடம் பன்னிரண்டு
நிமிடம் பதின்மூன்று நிமிடம்…………………
………………………………………………..
அறுபது நிமிடம் ஒரு மணி
ஒரு மணி இரண்டு மணி மூன்று மணி
நான்கு மணி ஐந்து மணி ஆறு மணி
ஏழு மணி எட்டு மணி ஒன்பது மணி
பத்து மணி பதினோரு மணி பன்னிரண்டு
மணி பதின்மூன்று மணி பதினான்கு மணி
……………………………………………
பதினைந்தாவது மணியில் ஏதோவொரு
நொடியில் அவளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி
அழைக்கலாமா?
……………………………………………
நான் பதிலெதுவும் அனுப்பவில்லை