சிப்கலி

குட்டிகளை சாகக் கொடுத்துஅழுது கொண்டிருந்ததாய்ப்பூனைக்கு ஆறுதல்தந்து விட்டுப் படியேறிவந்தாள்மோகினிக்குட்டி எதிர்வீட்டு வைணவன்என்றுமில்லாதபடிவாசல் சுவரில்பல்லி போல் ஒட்டிக்கொண்டிருந்தான்அவளைக் கண்டதும்சிப்கலீ என்று கத்தினான் மோகினியின் யோசனைபலவாறு சிதறியது குடியிருப்போர் கூட்டம் ஒன்றில்ஹிந்தியில் பேசாதீர்ஆங்கிலமும் தமிழும் மட்டுமேதெரியுமென்றவன் –இதுவரை அவளிடம் ஒரு வார்த்தைபேசியிராதவன் – அவன் ஒருஇப்போதுசிப்கலி என்கிறானே?ஏனிந்தக் கூச்சல்?தரையைப் பார்த்தாள் ஒரு பல்லிஅசைவை நிறுத்திப்படுத்திருந்தது பல்லியென்றால் அவளுக்குநடுக்கம் அதை மிதித்து விடக்கூடாதென அபயக் குரல்எழுப்பியிருக்கிறான்நாலு பூனைக்குட்டிகளைடெட்டால் ஊற்றிக் கொன்றவன் மோகினிக்கு பாம்பு கூட பயமில்லைபல்லியென்றால்அலறி ஓடி ஊரையே கூட்டி விடுவாள் … Read more

காமாக்னி

யோகா மாதிரி ஏதாவதுசெய்து காமநோய்மையிலிருந்துவிடுபடேன் என்றாள் மோகினிக்குட்டி துன்பம் தரும் எதுவோஅதைத் தூக்கியெறிவதுஎன் வழக்கம் எனத்தொடர்ந்தாள் பதினைந்து வயதில்தேகத்தின் காமம்ஆடைகளில் அடையாளமானபோதுஅம்மா சொல்வார்கள்உடம்புக்கு நல்லதில்லைதம்பி என்று மோகினிக்குட்டி, சில நேரம் என் தாயாக மாறுவாள் ஒரு காலத்தில்ரத்த அழுத்தம்என்னைப் பிடித்து ஆட்டியதுயோகா அதை அடக்கியதுபக்க விளைவாககோபம் ஓடி ஒளிந்ததுஇப்போது எது நடந்தாலும்கோபம் வருவதில்லை யோகா செய்து காமம்விலக்கினால்பக்க விளைவாகஎழுத்து அகன்று விட்டால்விபரீதமாயிற்றே? காமாக்னிதானேஎன் எழுத்துக்கு உயிரென்றேன்மோகினிக்குட்டியிடம் அக்கினியை அடக்குவதன்வழி தெரிந்தது போல்ஒரு சிரிப்புசிரித்தாள் மோகினிக்குட்டி