பிச்சைக்காரன் தன் ப்ளாகில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை அவசியம் படித்துப் பாருங்கள். என்னைப் பற்றிய மிக முக்கியமான ஒரு தகவலைக் கொண்ட கட்டுரை இது. இதை நானே மறந்து விட்டேன். எம்.டி.எம். நான் வன்மத்தோடும் முன்முடிவோடும் அவரது மொழிபெயர்ப்பை அணுகினேன் என்ற அபாண்டப் பழியை சுமத்தியிருக்கிறார். எனக்கு யார் மீதும் வன்மம் கிடையாது. ஜெயமோகனுக்கும் எனக்கும் வெட்டுப்பழி குத்துப்பழியாகக் கிடந்த போது நான் எழுதிய ஒரு கட்டுரை பற்றி பிச்சைக்காரன் மேற்கோள் காண்பித்து எழுதியிருக்கிறார்.